குளிர் காலம் தொடங்கியதில் இருந்து பல பிரச்சனைகள் உடலில் உண்டாக தொடங்கும். அந்த வகையில் சரும பாதிப்புகள் பல ஏற்படும். இதை தடுக்க நாம் சில எளிய வழிமுறைகளை செய்து வந்தாலே போதும். குறிப்பாக குளிர் காலத்தில் உதடுகள் அடிக்கடி வறண்டு போய் விடும் மற்றும் கண் இமைகளும் மிக சோர்வாக மாறி விடும். இது போன்று இருந்தால் சருமத்தில் ஈரப்பதம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். இதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தோல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை இனி பார்ப்போம்.
ரெட்டினால்:
தலைக்கு பயன்படுத்தும் சீரம், ஐ கிரீம்கள், மற்றும் மாய்சரைரைகள் ஆகியவற்றில் இருக்க கூடிய முக்கியமான மூலப்பொருள் ரெட்டினால் என்பதாகும். தோலில் சுருக்கங்கள் வராமல் இருக்கவும் இதை பயன்படுத்துவார்கள். குளிர் காலத்தில் சருமம் வறண்டு போனால் ரெட்டினால் உள்ள புராடக்ட்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். ரெட்டினால் உள்ள புராடக்ட்களை உதடுகள் மற்றும் கண் இமைக்கும் தடவலாம்.
லிப் பாம்:
உதடுகளை ஈரப்பதமாக வைக்க பலர் லிப் பாம் பயன்படுத்துவார்கள். லிப் பாம்கள் உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்கும், ஆனால் சில பொருட்கள் குளிர்காலத்தில் வறண்ட சருமத்தை தந்து எரிச்சலூட்டும். கற்பூரம், யூகலிப்டஸ், மற்றும் மென்தாள் இருக்க கூடிய லிப் பாம் பயன்படுத்துவதே இப்படி ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும். எனவே இந்த மூலப்பொருட்கள் உள்ள லிப் பாம் வாங்காதீர்கள்.
தோல் உரிகின்ற உதடுகள்:
உதடுகளில் உள்ள இறந்த செல்களை அகற்ற அவற்றில் உள்ள தோல் பகுதி சில நேரங்களில் உரிய தொடங்கி விடும். இது போன்று உங்களுக்கு நடந்தால் அதை எளிதாக கையாளுங்கள். இதற்கு சர்க்கரை அல்லது வெதுவெதுப்பான துணியை கொண்டு உதடுகளை தேய்க்க தொடங்குங்கள். இதை மிக மெதுவாக செய்ய வேண்டும். வேகமாக செய்தால் உதடு சிவந்து போக வாய்ப்புண்டு.
Also Read: பருவ நிலைக்கு ஏற்ப சருமப் பராமரிப்புகளையும் ஏன் மாற்ற வேண்டும்..?
வாஸ்லின்:
உதடுகள் மற்றும் கண் இமைகள் வறண்டு போகாமல் இருக்க அவற்றில் வாஸ்லின் தடவுங்கள். இது சிறந்த முறையில் ஈரப்பதத்தை தர உதவும். பெட்ரோலியம் ஜெல்லி மற்றும் வாஸ்லின் ஆகிய மூலப்பொருட்கள் உதட்டை மென்மையாக வைக்கும். மேலும் வறண்ட தோல் பகுதியை நீக்கி விடும்.
தண்ணீர்:
உங்களின் சரும பாதுகாப்பை குளிர் காலத்தில் மேம்படுத்தவும், பாதுகாக்கவும் உடலுக்கு நீர்சத்து மிக முக்கியம். அந்த வகையில் தினமும் போதுமான அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். இப்படி செய்வதால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் தானாகவே கிடைத்து விடும். மேலும் தோல் வறண்டு போகாமல் மென்மையாக இருக்க வழி செய்யும்.
Also Read: குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் இவைதான்!
மேற்சொன்ன வழிமுறைகளை செய்து, உங்களின் உதடுங்கள் மற்றும் கண் இமையை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.