Home /News /lifestyle /

தூக்கத்தை இழப்பதால் ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்சனைகள் பற்றி தெரியுமா..?

தூக்கத்தை இழப்பதால் ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்சனைகள் பற்றி தெரியுமா..?

தூக்கம்

தூக்கம்

தொடர்ச்சியாக போதுமான தூக்கத்தை பெறவில்லை என்றால் ஒரு நபர் அவரது மன ஆரோக்கியத்தை இழக்க நேரிடும்.

ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் துவக்க இன்றியமையாததாக இருக்கிறது தூக்கம். ஒருநபர் தினமும் இரவில் 6 முதல் 8 மணிநேரம் இடைவிடாமல் தூங்குவது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது பலரும் இரவு நேரத்தில் நிம்மதியான அல்லது தொடர்ச்சியான தூக்கம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் தூக்கமின்மை பல உடல்நல குறைவுகளுக்கு காரணமாக இருந்து வருகிறது. தூக்கமின்மை நாள் முழுவதும் தலைச்சுற்றலை ஏற்படுத்துகிறது. தூக்கத்தை இழப்பதால் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைகிறது. தவிர தூக்கமின்மை பிரச்சனை இன்சுலின் எதிர்ப்பு, நரம்பியல் பிரச்சினைகள், எடை அதிகரிப்பு, மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற முக்கிய உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.

நீங்கள் நாள்தோறும் சரியாக தூங்கவில்லை என்றால் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து தற்போது பார்க்கலாம்..

மூட் ஸ்விங்ஸ்..

சரியாக தூங்காத நபர்களிடையே மூட் ஸ்விங்ஸ் எனப்படும் தீவிர மனநிலை மாற்றங்கள் பொதுவானவை ஆகும். சரியாக தூங்காததால் ஏற்படும் எரிச்சல் மற்றும் மன அமைதியின்மை உங்களை சுற்றியுள்ளவர்களிடம் நீங்கள் மோசமாக நடந்துகொள்ள வழிவகுக்கும். எப்போதும் சோர்வு, முன்கோபம் மற்றும் கவன சிதறல் ஆகியவை போதுமான தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் ஆகும்.

மனநலத்தில் பாதிப்பு..

தொடர்ச்சியாக போதுமான தூக்கத்தை பெறவில்லை என்றால் ஒரு நபர் அவரது மன ஆரோக்கியத்தை இழக்க நேரிடும். ஆய்வுகளின் படி நீங்கள் தினமும் போதுமான அளவு தூங்கவில்லை என்றால் க்ளினிக்கல் டிப்ரஷன் போன்ற மனநிலைக் கோளாறுகள் ஏற்படலாம். இது முடிவெடுக்கும் திறன் மற்றும் படைப்பாற்றலில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.



நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு..

சரியாக தூங்காத ஒருவரது நோய் எதிர்ப்பு சக்தி சமரசம் செய்யப்படலாம். ஒருவர் தரமான தூக்கத்தை பெறும் போது அவரது நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகள் மற்றும் சைட்டோகைன்கள் போன்ற பாதுகாப்பு, தொற்று-எதிர்ப்புகளை உற்பத்தி செய்கிறது. ஆனால் தூக்கமின்மை கோளாறு நோயெதிர்ப்பு மண்டலத்தில் எதிர்ப்பு சக்தி உருவாவதை தடுக்கிறது. இதனால் தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களின் உடல் பல நோய்களுக்கு ஆளாக கூடும்.

செரிமானம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்...

கார்டியோவாஸ்குலர் பிரச்சனைகள்..

தூக்கமின்மை ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் இதயம் மற்றும் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் செயல்முறைகளை பாதிக்கிறது. இதய ஆரோக்கியம் மற்றும் உடலின் திறனில் ரத்த நாளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தினசரி போதுமான அளவு தூங்காதவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் அபாயத்துடன் தூக்கமின்மை தொடர்புடையது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.



செக்ஸ் ஆர்வத்தில் பாதிப்பு..

போதுமான தூக்கம் இல்லாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைவதாக ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Sleep, Sleep deprivation, Sleepless

அடுத்த செய்தி