உத்தர பிரதேசத்தின் தனியார் மருத்துவமனை ஒன்று பிளேட்லெட்டுகள் ஏற்றுவதற்கு பதிலாக சாத்துக்குடி ஜூசை ட்ரிப்ஸில் கலந்து ஏற்றி உள்ளது. அதனால் அதன் நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சமீபகாலமாக உத்திர பிரதேசத்தில் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைப்பற்றி பல்வேறு செய்திகளும் தினந்தோறும் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் உள்ளன. சட்டம் ஒழுங்கு தான் எவ்வாறு உள்ளது என்று பார்த்தால், அங்குள்ள மருத்துவமனைகளின் நிலைமையும் மோசமாகவே இருக்கின்றது. மருத்துவமனைகளில் நடைபெறும் ஊழல்களும், தவறான சிகிச்சைமுறை பற்றிய புகார்களும் அம்மாநிலத்தில் அதிகரித்துவிட்டது.
அதில் உச்சகட்டமாக, டெங்கு நோயாளி ஒருவருக்கு ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை ட்ரிப்ஸில் கலந்து ஏற்றியுள்ளது. இரத்தம் ஏற்றிய சில மணி நேரத்திலேயே நோயாளி மரணம் அடைந்த விவகாரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நாடெங்கும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நோக்கி சிகிச்சைக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் அளவுகள் மிகவும் குறைவாக இருக்கும். அந்த வகையில் உத்திர பிரதேசத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய நோயாளி ஒருவர் சிகிச்சைக்கு சென்றுள்ளார் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அவருக்கு இரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பிளேட்லெட்டுகள் ஏற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது. நோயாளியின் உறவினர்களிடம் தெரிவித்துவிட்டு ரத்தமேற்றுவதற்கான வேலையை மருத்துவமனையே துவங்கி உள்ளது.
Also Read : கர்ப்பிணிகளுக்கும் கேன்சர் ஆபத்து... தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களில் மறைந்திருக்கும் அபாயம்!
ஆனால் நோயாளிகளுக்கு ரத்தம் ஏற்றிய சில மணி நேரத்திலேயே நோயாளியின் உடல்நிலை மிக மோசமாகிவிட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அவரின் உறவினர்கள் அவரை வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அந்த நோயாளியை பரிசோதித்த மருத்துவர் “அவருக்கு ரத்தம் ஏற்றியதில் ஏதோ குறைபாடு இருந்துள்ளது நோயாளிக்கு ஏற்றிய ரத்தத்தில் சாத்துக்குடி ஜூஸ் அல்லது இனிக்கு சுவையுடைய ஏதேனும் வேதிப்பொருட்கள் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட நோயாளியின் உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ரத்தத்திற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் கலந்த ட்ரிப்ஸ் ஏற்றிய மருத்துவமனை இன்னும் என்னென்ன குற்றங்களை எல்லாம் செய்துள்ளதோ, என்று மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர். இதைப் பற்றிய வீடியோக்களும் செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக, அதைப் பார்த்த உத்தர பிரதேசத்தின் துணை முதலமைச்சர் ப்ரஜேஷ் பதக் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Also Read : டிஜிட்டல் ஸ்கிரீன்களில் மூழ்கியிருக்கும் உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
அதில் “பிராயக்ராஜ் மாவட்டத்தின் ஜல்வா என்ற இடத்தில் நோயாளிக்கு ரத்தத்தில் சாத்துக்குடி ஜூஸ் கலந்து ஏற்றிய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மருத்துவமனையில் இருந்த பிளேட்லெட்டுகள் பாக்கெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த மாதிரிகளில் சாத்துக்குடி ஜூஸ் அல்லது வேறு ஏதேனும் கலந்திருப்பது தெரிய வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dengue