தினசரி நடைப்பயிற்சி, வீட்டை சுத்தப்படுத்துவது, நண்பர்களைச் சந்தித்து உரையாடுவது, பிடித்த விஷயங்களை மேற்கொள்வது போன்றவற்றை நீங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் பட்சத்தில் டிமென்ஷியா எனும் மறதி நோயின் அபாயத்தைக்குறைக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஞாபக மறதி என்பது அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை. ஆனால் வயதானவர்களுக்கு ஏற்படும் டிமென்சியா எனும் ஞாபக மறதி அவர்களை மோசமான நிலைக்குத் தள்ளிவிடும். உலகம் முழுவதிலும் 5 கோடி மக்களுக்கும் அதிகமானோர் டிமென்சியா என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக மூளைக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதால் டிமென்ஷியா ஏற்படுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட நபரின் மூளையின் செயற்பாடு படிப்படியாக பாதிக்கப்பட்டு, அவரது நினைவாற்றல், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயல்பாடு எல்லாமே பாதிக்கப்படும். நாளடைவில் உயிரிழக்கும் நிலைக்கூட ஏற்படுகிறது.
இதோடு நோயால் பாதிக்கப்பட்டவர் அனைத்து தேவைகளுக்கும் மற்றவரின் உதவியை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இந்நோயை முழுவதுமாக கண்டுபிடிக்க எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், வரும் காலங்களில் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியாக டிமென்ஷியா உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கும் வேளையில், சில வாழ்க்கை நடைமுறைகளை மாற்றுவதன் மூலம் டிமென்ஷியாவின் அபாயத்தை குறைக்க முடியும் என்கிறது ஆய்வு.
டிமென்ஷியாவின் அபாயத்தைக்குறைப்பதற்கான வழிமுறைகள்:
வாழ்க்கையில் குடும்பத்தேவைக்களை நிறைவேற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் அனைவரும் ஒரு கட்டத்தில், ஓய்வு பெறுகிறார்கள்.. இதனால் கொஞ்சம் சமூகத்தை விட்டு தனித்து நிற்கின்றனர். எனவே இது போன்று தனிமையும் வயதானவர்களுக்கு டிமென்ஷியா ஏற்பட வாய்ப்பாக மாறுகிறது. எனவே வயதானக்காலத்தில் தனியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மழைக்காலங்களில் உணவு ஒவ்வாமையை தவிர்ப்பது எப்படி..? நிபுணர்கள் கூறும் ஆலோசனை
தினசரி நடைப்பயிற்சி, வீடு, தோட்டம் போன்றவற்றைப் பராமரிப்பது, சுத்தமாக வைத்துக்கொள்ள முயல்வது, நண்பர்களுடன் அரட்டையடிப்பது, ஜாலியாக அமர்ந்து உணவருந்துவது போன்றவற்றை வயதானப் பின்னரும் நீங்கள் மேற்கொண்டால், டிமென்ஷியாவின் அபாயங்கள் குறைக்கின்றன என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். இவ்வாறு மேற்கொள்ளும் போது எப்போதும் பிஸியாகவும், தேவையில்லாமல் எதை பற்றியும் சிந்திக்கும் திறன் உங்களுக்கு ஏற்படாது. குறிப்பாக அடிக்கடி உடற்பயிற்சி செய்வர்கள் மற்றும் வீட்டு வேலைகளை முறையாக பார்ப்பவர்களுக்கு டிமென்ஷியா வருவதற்கான ஆபத்து 35 சதவீதம் குறைவாக இருந்தது.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தினசரி சந்தித்து பேசுவது 15 சதவீத அபாயத்தைக்குறைத்துள்ளது. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கு பிடித்த நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவழியுங்கள். இந்த டிமென்ஷியா எனும் மறதி நோய் பொதுவாக 60 அல்லது 65 வயதைக்கடந்தவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மிகச்சிலருக்கு மட்டுமே 40 அல்லது 45 வயதில் இந்த நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.
சூடான வடித்த சாதத்தை விட பழைய சாதம் ஆரோக்கியமானதா.? நிபுணர்களின் கருத்து.
எனவே உங்களது வீட்டில் உள்ள 60 முதல் 65 வயதைக்கடந்த வயதானவர்கள் வழக்கத்தை விட நினைவிழப்பு அதிகமாக இருப்பதை உணந்தால், உடனடியாக அவர்களை பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மேற்கூறிய விஷயங்களைத் தொடர்ந்து மேற்கொண்டால் எதையும் அவர்களால் மறக்க நேரிடாது. எனவே இனிவரும் காலங்களில் கொஞ்சம் பாலோ பண்ணுவதற்கு முயல வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dementia Disease