டெல்லியின் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் டெல்லியில் வாழும் குழந்தைகள் சுவாசிக்கும் நச்சுக் காற்று 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமம் என்று இந்தியா டுடே நடத்திய ஆய்வில் வெளியிட்டுள்ளது.
இந்தியா டுடே தரவு புலனாய்வு பிரிவு (The India Today Data Intelligence Unit) எடுத்த தகவல் படி சராசரியாக டெல்லியில் வாழும் மக்கள் அக்டோபர் 20 முதல் நவம்பர் 21 வரை 33 நாட்களில் 340 சிகரெட்டுகள் பிடித்ததற்கு சமமான நச்சுக் காற்றை சுவாசித்ததாக குறிப்பிட்டுள்ளது.
இதை நுரையீரலை பாதிக்கக் கூடிய, காற்றில் கலந்துள்ள நச்சுத் துகள்களின் உயர்மட்ட அளவான 2.5 (Particulate Matter 2.5 (PM 2.5)) என்கிற அளவை வைத்து கணக்கிட்டுள்ளது. அப்படி காற்றில் 22 மைக்ரோ கிராம் துகள்கள் இருப்பின் ஒரு சிகரெட் பிடித்ததற்கு சமம். 300 மைக்ரோகிராம் கலந்திருந்தால் 14 சிகரெட்டுகள் பிடித்ததற்கு சமம்.
அப்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த தகவலின் படி துகள்கள் அளவு காற்றில் 227 மைக்ரோ கிராம்களாக கலந்துள்ளதாக வெளியிட்டுள்ளது. அந்த எண்ணிக்கை 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமம்.
மேலும் இந்தியா டுடே அளித்துள்ள தகவல்படி டெல்லி நச்சுக் காற்று நிறைந்த இடமாக கருதப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது மட்டும் 582 மைக்ரோ கிராம் துகள்கள் காற்றில் கலந்துள்ளதாம். இது உலக சுகாதார மையம் குறிப்பிடும் அளவான 25 மைக்ரோகிராம் கணக்கின்படி 23 மடங்கு அதிகம் என்கிறது. அன்று ஒரு நாள் மட்டும் அங்குள்ள மக்கள் 26 சிகரெட் பிடிப்பதற்கு சமமான நச்சுக் காற்றை சுவாசிப்பதாக தெரிவித்துள்ளது.
மற்றொரு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவல் என்னவென்றால் இங்கு வசிக்கும் மக்கள் அதிகமாக காற்று மாசுபாட்டால்தான் இறக்கின்றனராம். அதாவது ஒரு லட்சம் பேரில் 134 பேர் காற்று மாசு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்பதாக தெரிவித்துள்ளது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air pollution