ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்த 2 ஊட்டச்சத்துக்களின் குறைபாடால் புற்றுநோய் வரலாம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இந்த 2 ஊட்டச்சத்துக்களின் குறைபாடால் புற்றுநோய் வரலாம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

ஊட்டச்சத்துக்களின் குறைபாடால் புற்றுநோய் வரலாம்

ஊட்டச்சத்துக்களின் குறைபாடால் புற்றுநோய் வரலாம்

புதிய ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் B குரூப்பில் போதுமான ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் கிடைக்காதது கேன்சருடன் தொடர்புடைய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என கண்டறிந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டில் சுமார் 13,92,179 புற்றுநோய் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் சுமார் 7,70,230 பேர் புற்றுநோயால் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தகவல் தெரிவித்தார்.

இதனிடையே புற்றுநோய் மேலாண்மையில் (cancer management) ஃபோலேட் (Folate) மற்றும் வைட்டமின் பி ஆகிய இரண்டின் பங்கு பற்றி இங்கே பார்க்கலாம். புதிய ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் B குரூப்பில் போதுமான ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் கிடைக்காதது கேன்சருடன் தொடர்புடைய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என கண்டறிந்துள்ளது.

Folate என்பது நீரில் கரையக்கூடிய பி வைட்டமின் ஆகும், இது அடர்-பச்சை இலை காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பல உணவுகளில் உள்ளது. அதே சமயம் ஃபோலிக் ஆசிட் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் தானியங்கள் போன்ற வலுவூட்டப்பட்ட உணவுகளில் காணப்படுகிறது. Folate மற்றும் B குரூப் வைட்டமின்கள் (B12, B6, B3) போன்ற ஊட்டச்சத்து குறைபாடு குரோமோசோமால் சிதைவுகள், டிஎன்ஏ ஹைப்போமெதிலேஷன் மற்றும் பிறழ்வுகளுக்கு அதிக சென்சிட்டிவ் ஆகியவற்றுக்கு பங்களிக்கும் ஒன்றாகும்.

எனவே ஒரு நபரின் உணவில் போதுமான Folate இருப்பது முக்கியம். Folate அல்லது பி வைட்டமின் குறைபாடு பரவலான அறிகுறிகளை கொண்டுள்ளது. இந்த அறிகுறிகளை கண்டறிந்தது சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கேன்சர் போன்ற கடும் நோய்கள் ஏற்படும். தசை பலவீனம், வயிற்றுப்போக்கு, உணர்வின்மை, மனச்சோர்வு, வாய் புண்கள், நாக்கு வீக்கம், புற நரம்பியல், மூச்சுத் திணறல் மற்றும் வெளிர் தோல் ஆகியவை Folate குறைபாடு அறிகுறிகளில் அடங்கும்.

அதே போல் பி வைட்டமின் என்பது உயிரணு ஆரோக்கியம் மற்றும் உடல் ஆற்றலை பராமரிக்க தேவைப்படும் முக்கிய 8 ஊட்டச்சத்துக்களின் தொகுப்பாகும். சோர்வு, பலவீனம், மலச்சிக்கல், திடீர் எடை இழப்பு, மோசமான நினைவாற்றல், பசியின்மை, அதிக முடி உதிர்தல் உள்ளிட்டவை வைட்டமின் பி குறைபாட்டை கண்டறிய உதவும் சில அறிகுறிகள். புற்றுநோய் உருவாவதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கும் என்ற கோணத்தில் Folate தீவிரமாக ஆராயப்பட்டது.

அச்சுறுத்தும் நோரோ வைரஸ்... இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்..!

ஆய்வு சொன்னது என்ன?

ஃபோலேட், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை மெத்தியோனைன் தொகுப்பு மற்றும் டிஎன்ஏ மெத்திலேஷனில் முக்கிய பங்கு வகிக்கின்றன. டிஎன்ஏ மெத்திலேஷன் மாறும் போது மரபணு மாற்றங்கள் மற்றும் டிஎன்ஏ சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது, இது இறுதியில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதே நேரம் அதிகப்படியான ஃபோலிக் ஆசிட்டிற்கும், புற்றுநோய் அபாயத்திற்கும் இடையே ஒரு தொடர்பை சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எனவே தான் RDA (Recommended Dietary Allowance)-க்கு மேல் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம், ஃபோலேட் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்வது முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த 5 இடங்களில் வலி இருந்தால் கவனமாக இருங்கள்... அது நீரிழிவு நோய் அதிகரித்துவிட்டதை உணர்த்தும் அறிகுறி..!

இந்த ஊட்டச்சத்துக்களை எவ்வளவு எடுக்கலாம்?

19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் 400 mcg DFE (Dietary Folate Equivalents)-ஐ எடுத்து கொள்ள முயற்சிக்க வேண்டும், கர்ப்பிணிப் பெண்கள் 600 mcg DFE-ஐ பெற முயல வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் 500 mcg DFE-ஐ பெற வேண்டும்.

ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி நிறைந்த உணவுகள்...

சப்ளிமெண்ட்ஸ் தவிர பருப்பு வகைகள், கீரைகள், நியூட்ரிஷ்னல் ஈஸ்ட், முழு தானியங்கள், நட்ஸ் மற்றும் சீட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய சமநிலை உணவு மூலம் போதுமான பி வைட்டமின்களை பெறலாம். தவிர ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலே, பட்டாணி, கிட்னி பீன்ஸ், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, கடல் உணவுகள், புதிய பழங்கள் மற்றும் பழச்சாறுகள், பால், முட்டை, பருப்பு, அஸ்பாரகஸ், கோழி, பழுப்பு அரிசி, வெண்ணெய் உள்ளிட்டவை ஃபோலேட் மற்றும் பி வைட்டமின்களின் நல்ல மூலமாக இருக்கும் சில உணவுப் பொருட்கள் ஆகும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Nutrition Deficiency, Vitamin B12