HOME»NEWS»LIFESTYLE»health decoded what leads to joint pain in winters esr ghta

குளிர்காலத்தில் மூட்டுவலி, உடல் அசதி அதிகமாக ஏற்பட என்ன காரணம்? தடுக்கும் வழிமுறைகள் என்ன? 

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினருக்கு கூட மூட்டுவலி வருகிறது. அதற்கு, கம்ப்யூட்டர் முன்பு நீண்டநேரம் அமர்ந்தவாறு பணி செய்வது, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறலாம்.

குளிர்காலத்தில் மூட்டுவலி, உடல் அசதி அதிகமாக ஏற்பட என்ன காரணம்? தடுக்கும் வழிமுறைகள் என்ன? 
மாதிரி படம்
  • Share this:

மூட்டு வலி என்பது பொதுவாக எலும்புகளின் தேய்மானத்தால் ஏற்படுவதாகும். இந்தப் பிரச்சனை உலகத்தில் இல்லாத இடமே இல்லை என்று கூட சொல்லிவிடலாம். இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினருக்கு கூட மூட்டுவலி வருகிறது. அதற்கு, கம்ப்யூட்டர் முன்பு நீண்டநேரம் அமர்ந்தவாறு பணி செய்வது, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறலாம். குறிப்பாக, குளிர்காலத்தில் மூட்டுவலிகள் அதிகரிப்பதற்கும் சில பிரத்யேகமான காரணங்கள் உள்ளன. அவற்றை தெரிந்துகொண்டால் மூட்டு வலி ஏற்படுவதை தடுக்கலாம் அல்லது உரிய நிவாரணம் பெறலாம்.

மூட்டு வலிக்கான காரணங்கள் :

மூட்டு வலி எல்லா பருவங்களிலும் நம்மைத் தொந்தரவு செய்கிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் பெரும்பானாலோர் மூட்டுவலியினால் அவதிப்படுவதை நாம் பார்க்க முடிகிறது. கீல்வாதம் அல்லது உடம்பில் அடிப்பட்டு இருந்தால் இயல்பாகவே மூட்டுகளில் வலி ஏற்படும். குளிர்காலத்தில் அந்த வலி அதிகமாகவும் இருக்கும். இதனைத்தவிர்த்து, மூட்டுகளில் ஏற்படும் வலி, விறைப்பு, மற்றும் வீக்கம் ஆகியவற்றால் நம் அன்றாட செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கின்றன. இதற்கான காரணத்தை ஆய்ந்தபோது உடல்வெப்ப நிலைக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் தொடர்புகள் இருந்தன. இதனால், உடலில் மூட்டுவலி ஏற்படுகிறது.





குளிர்ந்த வானிலை

காற்றின் அழுத்தம் மூட்டுகளை பாதிக்கிறது. அதாவது காற்றில் நிலவும் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும்போது நம் உடலின் இயக்கத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் இயல்பாகவே பருவநிலை மாற்றத்தின்போது மூட்டுகளில் வலிகள் ஏற்படுகின்றன. இருப்பினும், பருநிலை மாற்றத்தால் மனிதர்களுக்கு மூட்டுவலி ஏற்படுமா என பிரத்யேகமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதும் ஆய்வாளர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தக் கருத்து கூறப்படுகிறது. மேலும், மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பு தேய்மானம், நரம்புகளின் அழுத்தம் ஆகிய காரணங்களால் மூட்டு வலி ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குளிர்காலத்தில் நரம்புகளின் வழியே அதிகளவு ரத்த ஓட்டம் இருப்பதால், விறைப்பு, வலி ஆகியவை ஏற்படுவதாக மருத்துவகள் கூறுகின்றனர்.

குளிர்காலத்தில் மூட்டு வலியை எவ்வாறு தடுப்பது?

குளிர்காலத்தில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும். இதனால், உடலின் இயக்கத்திலும் மாற்றம் ஏற்படுவதால் சில ஆரோக்கியமான விஷயங்களை இந்த காலத்தில் நாம் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். உடலை சூடாக வைத்திருக்க வேண்டும். இதனால் மூட்டுவலி மட்டுமல்லாது மற்ற பிரச்சனைகளில் இருந்தும் தப்பிக்கலாம். குளிர்காலத்துக்கான உடைகளை அணிவது கட்டாயமாகும். அப்போதுதான், உடலில் இருக்கும் வெப்பம் வெளியேறாது. மூட்டுவலி அதிகமாக இருப்பவர்கள் பராஃபின் மெழுகு (Paraffin bath) அல்லது ஹீட்டிங் பேட் (heating pad) ஆகியவற்றை வலி இருக்கும் பகுதியில் வைக்கலாம். அப்போது, உடனடி நிவாரணம் உங்களுக்கு கிடைக்கும்.



குளிர்காலத்தில் ஏற்படும் விறைப்பை தடுக்க வைட்டமின் டி ஊட்டச்சத்து இருக்க வேண்டும். சூரிய ஒளியில் வைட்டமின் டி கிடைக்கும் என்பதால் நாள்தோறும் காலையில் சூரிய ஒளியில் குறிப்பிட்ட நேரத்தை செலவிடலாம். மேலும், வைட்டமின் டி நிறைந்த காளான் மற்றும் பால்பொருட்களை அன்றாட உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. குளிர்காலத்தில் தசைகளுக்கு அதிக வேலை கொடுக்கக்கூடாது. உடற்பயிற்சி செய்பவர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கனமான பொருட்களை தூக்குவதை தவிர்ப்பது நல்லது. உணவுகளை சரிவிகித அடிப்படையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பசி எடுக்கவில்லை என உணவுகளை தவிர்ப்பது உடம்பில் வலியை ஏற்படுத்தும். அதேபோல், அதிக நேரம் தூங்குவதை தவிர்ப்பதும் நல்லது.

ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைக்க இத மட்டும் செய்யுங்க போதும்.. ஈசியாக சரி பண்ணிடலாம்..

மருத்துவர் ஆலோசனை

இயற்கை முறையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உங்களுக்கு பலனிக்கவில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. தொடர்ந்து நாளுக்கு நாள் வலி அதிகரிக்கும் நிலையில் எலும்பியல் நிபுணரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும். சிறிது காலதாமதமும் உங்களின் பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கி, சிக்கலான நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதால் கவனமாக இருங்கள்.
Published by:Sivaranjani E
First published: