Home /News /lifestyle /

2020-ல் 39% அதிகரித்த நீரிழிவு நோய் இறப்புகள் - காரணம் இதுதான்..!

2020-ல் 39% அதிகரித்த நீரிழிவு நோய் இறப்புகள் - காரணம் இதுதான்..!

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

2020-ஆம் ஆண்டு மும்பையில் இதய நோய்கள் மற்றும் நீரிழிவு ஆகிய இரண்டும் சேர்ந்து மொத்தமாக 37% இறப்புகளுக்கு காரணமாகி உள்ளன.

கோவிட் நோய் பரவ துவங்கிய முதல் ஆண்டில் மும்பையில் இதய நோய் மற்றும் நீரிழிவு நோயால் ஏற்படும் இறப்புகள் கணிசமாக அதிகரித்து உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. தரவுகளின் படி இதில் இதய நோய் அதிக மக்களின் இறப்புக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

2019 டிசம்பர் முதல் தற்போது வரை கொரோனா தொற்று நீடித்து வரும் நிலையில், இந்தியாவின் முக்கிய நகரான மும்பையில் தொற்று பரவ துவங்கிய முதல் வருடத்தில் (2020) இதய கோளாறுகள் தொடர்பான இறப்புகளில் 15% அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மும்பையை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஆண்டுக்கு ஆண்டு 5% அதிகரிப்பு பொதுவாக காணப்பட்ட நேரத்தில் ஒரே ஆண்டில் 15% அதிகரிப்பு என்பது கொரோனா துவங்கிய காலகட்டத்தில் நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மாரடைப்பு மற்றும் இதய நோய்களால் 2018-ல் 21,088 பேர், 2019-ல் 22,109 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 2020-ல் 25,378 பேர் இறந்துள்ளனர். 2020-ஆம் ஆண்டில் மும்பையில் பதிவான 1.1 லட்சம் இறப்புகளில், கிட்டத்தட்ட கால் பகுதி இதய நோய்களுடன் தொடர்புடையது இங்கே கவனிக்கத்தக்கது. இது மட்டுமின்றி கடந்த ஆண்டை விட 2020-ஆம் ஆண்டில் நீரிழிவு நோயால் ஏற்படும் இறப்புகள் 39% அதிகரித்துள்ளன. தொற்று பரவ துவங்கிய முதல் ஆண்டில் மும்பையில் நிகழந்த ஒட்டு மொத்த இறப்புகளில் சுமார் 16,021 இறப்புகள் நீரிழிவு நோயால் நிகழ்ந்து உள்ளன.



நீரிழிவு நோயால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 2019-ல் 11,491 ஆகவும், 2018-ல் 10,458 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாத அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடல் திறம்பட பயன்படுத்த முடியாத ஒரு நாள்பட்ட நிலையாக இருக்கிறது நீரிழிவு நோய். இந்த நிலை சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம், குருட்டுத்தன்மை மற்றும் பல தீவிர உடல்நலக்கோளாறுகள் ஏற்பட முக்கிய காரணமாகும்.

also read : பெரும்பாலான மனிதர்கள் ஏன் 80 வயதிற்குள் இறக்கிறார்கள் - ரகசியத்தை கண்டறிந்த நிபுணர்கள்!

2020-ஆம் ஆண்டு மும்பையில் இதய நோய்கள் மற்றும் நீரிழிவு ஆகிய இரண்டும் சேர்ந்து மொத்தமாக 37% இறப்புகளுக்கு காரணமாகி உள்ளன. KEM மருத்துவமனையின் இதயவியல் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் பிரஃபுல்லா கெர்கர் இது குறித்து கருத்து கூறி உள்ளார். மன அழுத்தம், மருத்துவ வசதிகள் இல்லாமை அல்லது மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கான பயம் ஆகியவை இதய நோய்களால் ஏற்படும் இறப்புகளின் அதிகரிப்புக்கு கூட்டாக பங்களித்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.



also read :நீங்கள் சரியான டூத்பேஸ்டைதான் தேர்வு செய்கிறீர்களா..? சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்..!

கோவிட் குணமானால் கூட ஒரு நபர் இதய நோயால் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் இதயம் சார்ந்த பாதிப்புகளால் ஏற்பட்டு வரும் அதிக இறப்பு மற்றும் நீரிழிவு நோய் மோசமடைவது கவலையடைய செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொற்றின் துவக்கத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு போன்ற நாள்பட்ட நோய்களுக்காக மருத்துவமனைகளுக்கு வந்த நோயாளிகளின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைந்தது. பல மாதங்கள் சுயமாக மருந்துகளை தொடர்ந்த மக்கள் மேம்படும் மருத்துவமனைக்கு திரும்பி வந்த போது பலருக்கு நிலைமை தவறாகி விட்டதும் ஒரு காரணம் என்று நிபுணர்கள் கூறி உள்ளார்கள். நீரிழிவு நோயாளிகளில் 80% பேர் இதய பாதிப்புகளால் இறக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே பல தசாப்தங்களாக அதிக மக்களின் இறப்புக்கு முக்கிய காரணமாக இருந்து வரும் தொற்றா நோய்களை (non-communicable diseases) எதிர்த்துப் போராடுவதற்கு உரிய தலையீடுகள் தேவை என்று மருத்துவர்கள் அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Diabetes, Health

அடுத்த செய்தி