• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மாதவிடாய் சீராக வரவில்லையா ? அப்ப கட்டாயம் இதை படிங்க..

மாதவிடாய் சீராக வரவில்லையா ? அப்ப கட்டாயம் இதை படிங்க..

காட்சி படம்

காட்சி படம்

உங்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருக்கிறதா ? அப்ப இதை படியுங்கள்..

  • Share this:
    இன்றைய வாழ்க்கை முறையால் பெண்களுக்கு மாதவிடாய் என்பது எளிமையான ஒன்றாக இருப்பதில்லை. அதையொட்டி பல நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

    அப்படி உங்களுக்கு மாதவிடாய் ஒவ்வொரு மாதமும் சீராக வருவதில்லை எனில் இந்த ஹெர்பல் டீயை தினசரி பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பீரியட்ஸ் சீராக வரலாம்.

    இலவங்கப் பட்டை டீ : ஒரு துண்டு பட்டையை இடித்து தூளாக்கி அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். பட்டை கருப்பை ஆரோக்கியத்திற்கு நல்லது. பிசிஓடி பிரச்னையால் பாதிக்கப்படும் பெண்கள் இதை தொடர்ந்து குடித்து வருவதால் உடல் எடையும் குறையும். மாதவிடாயும் சீராக இருக்கும்.

    இஞ்சி மற்றும் துளசி டீ : அரை துண்டு இஞ்சி மற்றும் 4 துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலையில் குடிக்கலாம். துளசி ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இஞ்சி நோய் அழற்சிக்கு உதவும். பெண்களின் ஹார்மோன் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். சீரற்ற மாதவிடாய்க்கு தீர்வு கொடுக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: