கொடூரமான விளைவுகளைத் தரும் மன அழுத்தம் - மருத்துவர்கள் எச்சரிக்கை

மனநல பாதிப்புகள் தான் உடல்நலத்தை அதிகம் பாதிப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.

மனநல பாதிப்புகள் தான் உடல்நலத்தை அதிகம் பாதிப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கவலை, மன அழுத்தம் ஆகியவை தான் இருதய பாதிப்புகளும் பக்கவாதமும் வருவதற்கான முக்கியக் காரணமாக உருவெடுத்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மனநலம் தொடர்பான ஆய்வு ஒன்றில், புகைப்பிடித்தல் மற்றும் உடல்பருமன் அளிக்கும் மோசமான விளைவுகளைவிட மன அழுத்தமும் பதட்டமும் தரும் விளைவுகள் கொடூரமானவை என விளக்கப்பட்டுள்ளன. பதட்டம், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இருதய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு 65 சதவிகிதம் அதிகம் என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் 64% அதிகம், உயர் ரத்த அழுத்தத்துக்கான வாய்ப்பு 50% அதிகம், மூட்டுவலி தொடர்பான பிரச்னைகள் ஏற்பட 87% அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு அமெரிக்காவில் கலிஃபோர்னியா சான் ஃபிரான்ஸிஸ்கோ பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டது. மன நலம்தான் பல உடல் நலக் கேடுகளை விளைவிக்கும் முக்கியக் காரணியாக இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெரிய நோய்கள் மட்டுமல்லாது அன்றாடம் வரும் தலைவலியும் வயிறு பிரச்னைகளும் முதுகு வலிகளுமே நம்முடைய பதட்டத்தாலும் மன அழுத்தத்தாலுமே ஏற்படுகின்றன என்கின்றனர் ஆய்வை மேற்கொண்ட மனநல மருத்துவர்கள்.

மேலும் பார்க்க: மகனை அரசு மருத்துவமனையில் சேர்த்த ஆட்சியர் ரோகிணி
Published by:Rahini M
First published: