வீட்டில் இல்லத்தரசிகள் ஓயாத வேலைகளுக்குப் பிறகு மதிய நேரத்தில் சற்று அயர்ந்து தூங்குவார்கள். இல்லத்தரசிகள் மட்டுமல்ல வேலைக்குச் செல்வோரும் விடுமுறை நாட்களில் ஓய்வாக மதிய நேரம் தூங்குவதுண்டு. ஆனால் அவ்வாறு தூங்குவது உடல் நலத்தை பாதிக்கும் என்கிறது சமீபத்தில் வந்துள்ள ஆய்வு.
பகலில் உடல் உறுப்புகள் செயல்பாட்டில் இருக்கும். அந்த சமயத்தில் திடீரென அதற்கு ஓய்வு கொடுத்தால் குழம்பிவிடும். இதனால் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் வரும் என்கிறது. சிலருக்கு புற்றுநோய் வரும் வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. எனவே இரவு நேரம் தவிர்த்து பகலில் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கிறது.
கலிஃபோர்னியாவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 10,930 பேர் பங்கேற்றுள்ளனர். அதில் 34% பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் அவர்கள் பகல் நேரத்தில் தூங்குவோராகவும், இரவில் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருப்போராகவும் இருந்துள்ளனர். இந்த ஆய்வு சுமார் 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் தொடர் கண்கானிப்பின் முடிவில் வயதானவர்களையே அதிகமாக பகல் நேரத் தூக்கம் பாதிப்பை உண்டாக்குகிறது.
அவர்களுக்கு நீரிழிவு நோய், இதய நோய் இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் பகல் நேரத் தூக்கத்தைக் காட்டிலும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவோருக்குத்தான் 2.3% கூடுதல் ஆபத்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே முதியவர்கள்தான் தங்களுடைய தூக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறது இந்த ஆய்வு.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.