• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்கள் முதுகு வலியை அலட்சியப்படுத்துகிறீர்களா..? அதனால் வரும் விளைவுகள் என்னென்ன தெரியுமா..?

உங்கள் முதுகு வலியை அலட்சியப்படுத்துகிறீர்களா..? அதனால் வரும் விளைவுகள் என்னென்ன தெரியுமா..?

முதுகு வலி

முதுகு வலி

முதுகுத் தண்டு அல்லது முதுகுத் தண்டு கால்வாயின் (cauda equina) முடியும் இடத்தில் உள்ள நரம்புகள் காயங்கள் அல்லது விபத்துக்கள் காரணமாக சேதமடையும் போது முதுகுத்தண்டு பிரச்சனைகளை அனுபவிக்கலாம்.

  • Share this:
உங்களுக்கு கடுமையான முதுகுவலி இருக்கிறதா? உங்களால் சரியாக உட்காரவோ, நிற்கவோ, நடக்கவோ முடியவில்லையா? முதுகுவலியால் அன்றாட வேலைகளை எளிதாகச் செய்ய முடியவில்லையா? கழுத்து வலியும் உள்ளதா? பேலன்ஸ் செய்வதிலும் சிரமம் உள்ளதா? இப்படி உங்களுக்கு இருக்கும் இந்த அனைத்து அறிகுறிகளும் முதுகுத்தண்டு பிரச்சனையைக் குறிக்கலாம். எனவே உடனே நீங்கள் மருத்துவரை அணுக வேண்டிய நேரம் இது. முதுகெலும்பு பிரச்சினைகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த பிரச்சனைகளை புறக்கணிப்பது உங்கள் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கக்கூடிய சிக்கல்களை உருவாக்கலாம்.

முதுகுத் தண்டு அல்லது முதுகுத் தண்டு கால்வாயின் (cauda equina) முடியும் இடத்தில் உள்ள நரம்புகள் காயங்கள் அல்லது விபத்துக்கள் காரணமாக சேதமடையும் போது முதுகுத்தண்டு பிரச்சனைகளை அனுபவிக்கலாம்.

வோக்கார்ட் மருத்துவமனையின் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஷ்வின் போர்கர், முதுகெலும்பு பிரச்சினைகளை ஏன் புறக்கணிக்கக்கூடாது மற்றும் புறக்கணிக்கப்பட்டால் முதுகுவலி எப்படி உங்களை சிக்கலில் தள்ளும் என்பதைப் பற்றி ஆன்லைன் இணைதளத்திற்கு அளித்த பேட்டியில் சில உங்களுக்காக...

பல்வேறு முதுகுத்தண்டு பிரச்சனைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : குஷனிங் மாற்றப்பட்டு அதன் உறையில் இருந்து வெடிக்கும்போது ஹெர்னியேட்டட் டிஸ்க்கை பிரச்சனை உண்டாகிறது. முதுகுத்தண்டுக்கு அருகில் உள்ள தசைகள் அழுத்தம் பெறுவதால், அதிகப்படியான வேலை, மன அழுத்தம் மற்றும் மோசமான உடல் தோரணை காரணமாக தசை திரிபு உண்டாகிறது. இதுவும் கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தும்.

ஸ்கோலியோசிஸ் என்பது அசாதாரண முதுகு வளைவு காரணமாக கடுமையான அல்லது குறைவான வலியை தரலாம். விப்லாஷ் என்பது கழுத்தில் ஏற்படும் காயம் ஆகும், இது தலையின் திடீர் அசைவு அல்லது அசைவின் காரணமாக பக்கவிளைவுகளை உண்டாக்கலாம். மேலும், இது கழுத்தில் இருக்கும் இன்டர்வெர்டெபிரல் மூட்டுகள், டிஸ்க்குகள் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றை சேதப்படுத்துகிறது.

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது பெரும்பாலான வயதானவர்கள் சந்திக்கும் பொதுவான முதுகெலும்பு பிரச்சனையாகும். இதில் எலும்புகள் அரித்து அதன் அடர்த்தி குறைவதால் எலும்புகள் பலவீனமாகும்.



சியாட்டிகா என்பது முதுகுவலியுடன் சேர்ந்து கால்களில் கூர்மையான படபடப்பு வலியைக் கொண்டிருக்கும் ஒரு நிலை.

ஸ்போண்டிலோசிஸ் என்பது முதுகெலும்புடன் தொடர்புடைய சீரழிவு நிலைகளின் வலியை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல். இந்த அனைத்து வகையான முதுகெலும்பு பிரச்சனைகளையும் சரியான நேரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அறிகுறிகள்: ஒருவர் இயக்கம் இழப்பு, குடல் அல்லது சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழத்தல், பிடிப்பு, வலி அல்லது உங்கள் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள நரம்பு இழைகள் சேதமடைவதால் கடுமையான கூச்ச உணர்வு, சுவாசப் பிரச்சனைகள், இருமல், உணர்வின்மை போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதோடு உங்கள் கைகள், விரல்கள், கால்கள் அல்லது கால்விரல்களில் உணர்வு இழப்பு, நடப்பதில் சிரமம், பலவீனம், குமட்டல் அல்லது வாந்தி, விறைப்பு மற்றும் இறுக்கம் போன்ற அறிகுறிகளும் வெளிப்படும்.

சுவாச நோய் தொற்றுகளின் அறிகுறிகளை குறைக்க ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ்கள் உதவுமா? ஆய்வில் வெளியான தகவல்..

முதுகெலும்பு பிரச்சனைகளை புறக்கணிப்பதால் வரும் ஆபத்துகள் : சரியான நேரத்தில் கையாளப்படாவிட்டால், உடனடியாக அல்லது மெதுவாகவும் படிப்படியாகவும் உணர்வின்மை அல்லது பக்கவாதம் ஏற்படும். நீங்கள் நடப்பதில் நிரந்தரப் பிரச்சனைகளை உருவாக்கலாம். மேலும் உங்கள் வாழ்க்கை தரத்தை மோசமாக்கும்.



குறிப்பாக தனது அடிப்படை விஷயங்களை எளிதாகச் செய்ய சிரமப்படுவீர்கள். அடுத்தவர்களின் உதவியின்றி எதையும் செய்ய முடியாத நிலை உருவாகலாம். எனவே சிகிச்சையை தாமதப்படுத்தாதீர்கள். சரியான மருத்துவ உதவியை நாடவும். அறிகுறிகள் மற்றும் நோயின் நிலையை வைத்தே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

ரேடிகுலர் வலியுடன் கூடிய முதுகுவலியை ஏற்படுத்தும் சில கட்டிகளை மைக்ரோ சர்ஜிக்கல் எக்சிஷன் மூலம் நிரந்தரமாக குணப்படுத்த முடியும். முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணருடன் உடனடி ஆலோசனை, ஆரம்பகால நோயறிதல் மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை என எதையும் தள்ளிப்போடாமல் உடனடியாக அக்கறை செலுத்துவதால் ஆபத்தான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: