Home /News /lifestyle /

காஃபியை கைவிடுவது என்பது நீங்களே உங்களுக்கு கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு... ஏன் தெரியுமா..?

காஃபியை கைவிடுவது என்பது நீங்களே உங்களுக்கு கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு... ஏன் தெரியுமா..?

காஃபி

காஃபி

IANS அறிக்கையில், நாம் அதிகப்பட்சமாக 400 மில்லிகிராம் காபி குடிக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். டீ, சாக்லேட், ஃபிஸி பானங்கள் மற்றும் காபி ஆகியவற்றில் காஃபின் என்ற பொருள் உள்ளது, எனவே இதை நாம் தேவைக்கு அதிகமாகவே உட்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
மதிய வேளையை கடக்க, நாம் அனைவரும் அடிக்கடி காபி அல்லது காப்பசினோ போன்ற காபியை பருகுகிறார்கள், இது பொதுவாக உலகெங்கிலும் உள்ள பல இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் உள்ள ஒரு வழக்கமான பழக்கம் என்றே கூறலாம். காபி உட்கொள்வதால், உடற்பயிற்சியின் செயல்திறன் மேம்படுவதோடு நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்க வல்லது.

மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. காபியில் இது போன்ற பல நன்மைகள் இருந்தாலும், இதை அதிகமாகப் பருகினால் உங்கள் உடலின் அழிவிற்கு வழிவகுக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? இதனால் தற்போது உங்களுக்கு காபி நல்லதா? என்ற கேள்வி தோன்றலாம். காபி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்? என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

IANS அறிக்கையில், நாம் அதிகப்பட்சமாக 400 மில்லிகிராம் காபி குடிக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். டீ, சாக்லேட், ஃபிஸி பானங்கள் மற்றும் காபி ஆகியவற்றில் காஃபின் என்ற பொருள் உள்ளது, எனவே இதை நாம் தேவைக்கு அதிகமாகவே உட்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் ஏன் காபி குடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்? இப்போது பார்க்கலாம்...

இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்

காபி குடிப்பதால், உங்கள் கரோனரி தமனிகளின் இரத்த ஓட்டத்தை இது குறைப்பதோடு, நாம் தினசரி மேற்கொள்ளும் உடற்பயிற்சியின் போது, ​​நமக்கு படபடப்பை ஏற்படுத்துவதோடு ஒழுங்கற்ற இதயத் துடிப்பையும் ஏற்படலாம். இது காலப்போக்கில் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் எனவும் சில ஆய்வுகள் கூறுகிறது.தூக்கமின்மை:

தினசரி மூன்று கப் அல்லது அதற்கு மேல் காபி குடிப்பவர்கள் நிம்மதியில்லாத அல்லது குறைவான நேரமே தூங்குவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. காஃபினேட்டட் பானங்கள் மற்றும் காஃபினேட்டட் பானங்கள் பருகுபவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இரு தரப்பினரின் தூக்கத்தில் 79 நிமிட வித்தியாசம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே நீங்கள் தூங்குவதற்கு சிரமப்படும் போது, காஃபி பருக வேண்டாம்.

பாக்டீரியா மூலம் பரவும் நோய்த்தொற்று பாதிப்பை குறைக்க வேண்டுமா..? இந்த காய்கறிகளை சாப்பிடுங்க போதும்..!

சர்க்கரையுடன் காபி :

நாம் காபியில் சர்க்கரையை பயன்படுத்தாவிட்டாலும், பிஸ்கட், கேக் அல்லது காலை உணவுடன் சேர்த்து சாப்பிட பெரிதும் ஆசைப்படுகிறோம். கூடுதலாக, சில வகை பொருள்களில் 11 தேக்கரண்டி சர்க்கரை இருக்கக்கூடும். இந்த வகையான ஸ்பெஷல் காபிகளில் கலோரி எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும், எனவே உங்கள் எடையைப் பராமரித்துக்கொள்வது அவசியம்.

மனநிலை

காஃபின் “fight or flight” ஹார்மோன்கள் எனப்படும் adrenaline போன்ற catecholamines அதிகரிக்கிறது. காஃபின் உங்களுக்கு அதிக அளவில் பதற்றத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.கருத்தரித்தலை பாதிக்கும்

ஒரு நாளைக்கு ஐந்து கப் காபிக்கு மேல் குடிப்பது,குறைவான கருத்தரித்தல் விகிதம் அல்லது கருவுறுதலை தடுக்க இது காரணமாக அமையும். நீங்கள் குழந்தை பெற விரும்பினால், நிச்சயமாக காபியைக் குறைப்பது நல்லது. மேலும் உங்கள் கர்ப்பகாலத்தில், காஃபினை முழுவதுமாக கைவிட வேண்டும் அல்லது நிச்சயமாக ஒரு நாளைக்கு 200 மி.கி.க்கும் குறைவாக மட்டுமே காபி பருக வேண்டும். ஏனெனில் இது கருவளர்ச்சியில் குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்க செய்யும் அல்லது கரு வளர்ச்சியை குறைக்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Coffee

அடுத்த செய்தி