தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தினசரி தயிர் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ‘இன்டர்நேஷனல் டெய்ரி ஜர்னல்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மைனே பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில், இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆபத்து காரணிகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை ஆய்வு செய்தது.
உலகளவில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களின் ஆபத்தும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
உலகளவில் இறப்புக்கு இதய நோய்களும் முக்கிய காரணமாகும். அமெரிக்காவில், ஒவ்வொரு 36 வினாடிகளுக்கும் ஒருவர் இதய நோயால் இறக்கிறார் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், இது ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு முறை நிகழ்கிறது.
யுனிசா ( UniSA ) ஆராய்ச்சியாளர் டாக்டர் அலெக்ஸாண்ட்ரா வேட் கூறுகையில், "உயர் இரத்த அழுத்தம் இதய நோய்க்கான முதன்மையான ஆபத்து காரணியாகும், எனவே அதைக் குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் வழிகளைத் தொடர்ந்து கண்டுபிடிப்பது முக்கியம்" என்று டாக்டர் வேட் கூறினார்.
"பால் உணவுகள், குறிப்பாக தயிர், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஏனென்றால், பால் உணவுகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை தருகின்றன என்று வேட் கூறினார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை எப்படி சோதிக்க வேண்டும்?
"தயிரில் உள்ள மற்றொரு சிறப்பம்சம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் புரதங்களின் வெளியீட்டை ஊக்குவிக்கும் பாக்டீரியாக்களையும் கொண்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கும். சிறிய அளவு தயிர் கூட குறைந்த இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது" என்று வேட் விளக்கினார்.
"தயிரை தவறாமல் உட்கொள்பவர்களுக்கு, இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்தது. ஆய்வில் பங்கெடுத்தவர்களை கன்காணித்தபோது , தயிர் உட்கொள்ளாதவர்களை விட தயிர் தொடர்ச்சியாக சாப்பிடுவோருக்கு இரத்த அழுத்த அளவீடுகள் கிட்டத்தட்ட ஏழு புள்ளிகள் குறைவாக இருந்தன" என்று வேட் கூறினார்.
தயிர் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களை பரிசோதித்த போது உயர் இரத்த அழுத்தமானது 140/90 mmHg ஐ விட அதிகமாக அல்லது சமமாக இருப்பதை கண்டறிந்தனர். அதாவது இது சாதாரண இரத்த அழுத்த அளவு 120/80 mmHg க்கும் குறைவாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.