இரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..!

ஆய்வின் படி உண்மையான கண்ணீருக்கு மட்டுமே இந்த பலன் கிடைக்கும்.

Web Desk | news18
Updated: July 3, 2019, 4:56 PM IST
இரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..!
இரவு 7 - 10 மணிக்குள் அழுதால் உடல் எடை குறையுமா
Web Desk | news18
Updated: July 3, 2019, 4:56 PM IST
அழுவது மன ஆறுதல் தரும் என்பதுதான் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆய்வில் வினோதமாக உடல் எடைக் குறையும் என்கிறார்கள்.

என்னது உடல் எடை குறையுமா...?

ஆம்... ஏசியா ஒன் வெளியிட்டுள்ள ஆய்வில் இதற்கு பின் பெரிய அறிவியலே இருக்கிறது என்று விளக்கத்தை அளித்துள்ளது.


நாம் அழும்போது உடல் கார்டிசோல் என்னும் ஹார்மோனை வெளியிடுகிறது. இந்த கார்டிசோல் ஹார்மோனுக்கு உடல் கொழுப்பை கரைக்கும் தன்மை இருக்கிறது. அதேபோல் மன அழுத்தம் கண்ணீரைத் தூண்டும். இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும்.



உங்களுக்குக் கண்ணீர் அவ்வளவு எளிதில் வராது எனில் நீங்கள் கொஞ்சம் பாவம்தான். அதேபோல் ஆய்வின் படி உண்மையான கண்ணீருக்கு மட்டுமே இந்த பலன் கிடைக்கும்.

Loading...

அதேபோல் கண்ணீரில் மூன்று வகை உண்டு.

1. அடிப்படையான கண்ணீர் ( basal ),

2. எரிச்சலினால் வரும் கண்ணீர் ( reflex )

3.  உணர்ச்சிவசப்படும்போது வரும் கண்ணீர் ( psychic )

முதல்வகை கண்ணீர் வெறும் ஈரப்பதத்தை மட்டும் ஏற்படுத்தும்.

இரண்டாவது வகை கண்ணில் புகை , தூசு காரணமாக வெளியாகும் கண்ணீர். மூன்றாவது கண்ணீர் என்பதுதான் ஆழ் மனதிலிருந்து மன வருத்தத்தால் அழுவதாகும்.

இந்த மூன்றாவது வகை கண்ணீர் வந்தால் மட்டும்தான் கார்டிசோல் சுரக்கும். உடல் எடைக் குறையும் என அந்த ஆய்வு தெளிவாக விளக்குகிறது.

நாம் ஓய்வு நிலையில் இருக்கும்போது இதய தசைகள் ஒரு மணி நேரத்திற்கு 8 1/2 கலோரிகள் குறைகின்றன. அதே மனதளவில் பாதிக்கப்பட்டு அழும்போது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இந்த துடிப்பானது இதய தசைகளில் உள்ள கொழுப்புகளை வெகுவாகக் கரைக்கிறது. அதுவே நடிப்புக்காக அழும் கண்ணீரால் மிகவும் குறைந்த அளவில்தான் கொழுப்புகள் கரையுமாம்.



அதேபோல் அந்த ஆய்வு அழுவதற்கு ஏற்ற நேரத்தையும் குறிப்பிட்டுள்ளது. அந்த நேரத்தில் அழுதால்தான் கார்டிசோலின் சக்தி அதிகமாக இருக்குமாம். ஆம், இரவு 7 மணி முதல் 10 மணிக்குள் அழும்போது கார்டிசோல் ஹார்மோன் அதிகமாக வெளியாகி தீவிரமாக செயல்படும் என்று ஆய்வில் கூறியுள்ளனர்.

எனவே அடுத்த முறை அழும்போது நன்கு தேம்பித் தேம்பி அழுங்கள். உடல் கட்டுக்கோப்புடன் ஆரோக்கியமாக இருங்கள்.

குறிப்பு... அளவுக்கு அதிகமாக அழுகிறீர்கள் எனில் அது தீவிர மன அழுத்தத்திற்குக் காரணம். எனவே அது கார்டிசோலால் குறையும் ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்பு என எடுத்துக்கொள்ள வேண்டாம். அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும்போது பசியின்மை உணர்வால் சாப்பிடாமல் இருப்பதாலும் உடல் எடைக் குறையும் என்பதை கவனத்தில் கொள்க.
First published: July 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...