ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் குழந்தைக்கு பசும்பால் அல்லது எருமை பால் எது கொடுப்பது நல்லது..? எவ்வளவு தர வேண்டும்..?

உங்கள் குழந்தைக்கு பசும்பால் அல்லது எருமை பால் எது கொடுப்பது நல்லது..? எவ்வளவு தர வேண்டும்..?

பால்

பால்

பால் நம் உடலுக்குத் தேவையான கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு உள்ளிட்ட பல மற்றும் அனைத்து அத்தியாவசிய கூறுகளை கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பால் மிகவும் சத்தானது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கால்சியத்தின் சிறந்த மூலமாக இருக்கும் பால் வளரும் குழந்தைகளின் வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமான ஒன்றாகும். பால் மற்றும் பால் பொருட்கள் நமது அன்றாட உணவின் ஒரு அங்மாக இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆரோக்கியமாக மற்றும் வலுவாக இருக்க தினமும் பால் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

பால் நம் உடலுக்குத் தேவையான கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு உள்ளிட்ட பல மற்றும் அனைத்து அத்தியாவசிய கூறுகளை கொண்டுள்ளது. பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறிப்பாக குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால், பசும்பால் அல்லது எருமை பால் இரண்டில் எந்த பாலை குடித்தால் குழந்தைகளுக்கு நலல்து என்ற குழப்பம் பல பெற்றோர்களுக்கு உள்ளது.

உங்கள் குழந்தைக்கு பசும்பால் கொடுக்கலாமா அல்லது எருமை பால் கொடுக்கலாமா என்று நீங்கள் குழப்பத்தில் இருந்தால் இந்த செய்தி உங்கள் மனதில் உள்ள சில முக்கிய கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக அமையும்.

பசும் பால் vs எருமை பால்:

எருமை பாலை விட பசும்பாலில் குறைவான கொழுப்பு உள்ளது. இது லேசாகவும், எளிதாகவும் ஜீரணிக்க கூடியதாக இருக்கும்.எருமை பாலை விட கெட்டியாகவும், கிரீமியாகவும் இருக்கிறது பசும்பால். எனவே தயிர், பனீர், கீர், குல்ஃபி மற்றும் நெய் போன்ற ஹெவியான உணவுகள் பசும்பாலை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. எருமைப்பாலில் பசும்பாலை விட சுமார் 11% அதிக புரதம் உள்ளது. இதிலிருக்கும் லிப்பிட்ஸ் போன்ற புரதங்கள் புதிதாக பிறந்த குழந்தைகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். எனவே உங்கள் புதிதாக பிறந்த அல்லது சிறிய குழந்தைக்கு பசுவின் பால் விரும்பத்தக்கதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

எருமை பாலுடன் ஒப்பிடும் போது, பசும்பாலில் குறைந்த கொழுப்புச் சத்து உள்ளது. எருமை பாலில் அதிக கொழுப்பு மற்றும் அடர்த்தியான நிலைத்தன்மை (thicker consistency) உள்ளது. ஒப்பிடுகையில் பசும்பாலில் 3-4 சதவீதம் கொழுப்பு உள்ளது, எருமை பாலில் 7-8 சதவீதம் கொழுப்பு உள்ளது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எருமை பாலை விட பசுவின் பால் கொடுப்பதே விரும்பப்படுகிறது. ஏனெனில் எருமை பால் ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும் என்பதால்.

ஆரோக்கியத்தில் குறைவாக மதிப்பிடப்படும் இந்த உணவுகளை பற்றி உங்களுக்கு தெரியாத மருத்துவ குணங்கள்..!

உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும்..?

உங்கள் குழந்தைக்கு தினமும் 3 கப் பசும்பாலுக்கு மேல் கொடுக்காதீர்கள். ஏனென்றால் உங்கள் குழந்தை தனது சொந்த உணவை முழுமைப்படுத்துவது முக்கியம். அதிகம் பால் குடித்தால் உங்கள் குழந்தையால் மற்ற ஆரோக்கிய உணவுகளை சாப்பிட முடியாமல் போகலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்க பசும் பால் அல்லது எருமை பால் எது சிறந்தது.?

பசும் பால் அல்லது எருமை பால் இரண்டில் எது குழந்தைகளுக்கு சிறந்தது என்று வரும் போது பசும்பால் தான் சிறந்தது என்ற பதிலே நிபுணர்களிடம் கிடைக்கிறது. ஏனென்றால் நாம் முன்பே குறிப்பிடப்படி எருமைப் பாலில் கொழுப்பு அதிகம் மற்றும் ஜீரணிக்க கடினம். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாவது முக்கியம் என்பதால் பசும் பால் அவர்களுக்கு கொடுப்பது எளிதில் ஜீரணிக்க மற்றும் குழந்தையை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவும். மறுபுறம் பசும்பாலை விட அதிக கொழுப்பு, புரதம், கால்சியம் மற்றும் கலோரிகள் இருப்பதால் எருமைப் பால் அதிக சத்தானது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

First published:

Tags: Cow Milk, Kids Health