கொரோனா வைரஸ் உங்கள் தோல் மேற்பரப்புகளில் எவ்வளவு நேரம் வாழும் தெரியுமா?

வெப்பநிலையைப் பொறுத்து கொரோனா வைரஸ் தோலில் எட்டு மணி முதல் 14 நாட்கள் வரை உயிருடன் இருக்க முடியும் என்று தெரிவித்தது.

கொரோனா வைரஸ் உங்கள் தோல் மேற்பரப்புகளில் எவ்வளவு நேரம் வாழும் தெரியுமா?
மாதிரி படம்
  • Share this:
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க அறிவியலாளர்கள் என்ன தான் முயற்சி செய்து வந்தாலும், அவை பலனளிக்கவில்லை என்று தான் கூறவேண்டும். COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸ் பல வழிமுறைகள் மூலம் பரவுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் (CDC) கூற்றுப்படி, வான்வழி வைரஸ் பரவுதல் குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை.

ஆனால் சுவாச பரிமாற்றம் மற்றும் மேற்பரப்புகள் ஆகியவை மூலம் பரவுவதற்கான சாத்தியமான வழிகள் இருக்கின்றன என தெரிவித்துள்ளது. COVID-19 வைரஸைக் கொண்ட நீர்த்துளிகளை நேரடியாக உள்ளிழுக்க வாய்ப்புள்ளது. அதனால் வெளியில் அல்லது நெரிசலான இடங்களில் முககவசங்களை அணிவதன் மூலம் தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாம். அதுவே, மேற்பரப்பு பரிமாற்றம் கண்டறியப்படாமல் போகலாம். மேலும், மூக்கு, கண்கள் மற்றும் வாயில் உள்ள சளி சவ்வு வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழைகிறது.

அதேபோல, அசுத்தமான மேற்பரப்பைத் தொட்ட பிறகு, உங்கள் கைகளைக் கழுவாமல் உங்கள் முகத்தைத் தொடுவதால் எளிதில் வைரஸ் உடலுக்குள் செல்லலாம். இதனால் தான் கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர். அவ்வாறு, எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என்பதை பற்றி பாப்போம்.
மனிதர்களின் தோலில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்?

மனிதர்களின் தோல், குறிப்பாக கைகளின் தோல் கொரோனா வைரஸ் பரவலுக்கு மிகப்பெரிய கேரியராக செயல்படலாம். கடந்த ஜூலை 2020ம் ஆண்டில் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆர்மி மெடிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பெக்சியஸ் டிசீஸ் நடத்திய ஆய்வில், வெப்பநிலையைப் பொறுத்து கொரோனா வைரஸ் தோலில் எட்டு மணி முதல் 14 நாட்கள் வரை உயிருடன் இருக்க முடியும் என்று தெரிவித்தது. மேலும், இந்த வைரஸ் 37 டிகிரி செல்சியஸில் எட்டு மணி நேரம் தோலில் உயிர்வாழும் என்று கூறியுள்ளது.திறந்தவெளியில் கொரோனா பரவல் அரிதானது என்றாலும் முகக்கவசம் கட்டாயம் : நிபுணர்கள் வலியுறுத்தல்..

22 டிகிரி செல்சியஸில் சுமார் நான்கு நாட்கள் மற்றும் 4 டிகிரி செல்சியஸில் 14 நாட்கள் வரை வாழக்கூடுமாம். குறைந்த வெப்பநிலையில் உங்கள் தோலில் வைரஸின் உயிர்வாழும் நேரம் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, மருத்துவ தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், Sars-CoV-2 என்ற கொரோனா வைரஸ் தோலில் ஒன்பது மணி நேரம் உயிர்வாழ்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.

அதே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தோலில் செயலற்றதாகிவிடும். அதுவே, 80% எத்தனால் கொண்ட கை சுத்திகரிப்பான் பயன்படுத்தப்படும் போது, SARS-CoV-2 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இரண்டுமே சுமார் 15 வினாடிகளில் தோலில் செயலிழந்துவிட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, கொரோனா நோய்த்தொற்றைத் தவிர்க்க கை சுத்திகரிப்பான்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.கொரோனா வைரஸ் ஆடைகள் மீது எவ்வளவு நேரம் இருக்கும்?

துணிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்வாழும் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒழுங்காக கழுவி உலர்த்தப்பட்டால் அனைத்து துணிகளையும் எளிதில் கிருமி நீக்கம் செய்யலாம்.

மலத்தில் உயிர்வாழும் கொரோனா வைரஸ்:

மனித மலத்தின் மீதும் நீண்ட நேரம் இந்த வைரஸ் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பான நேர அளவு எதுவும் இல்லை. இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ள கழிவறையை பயன்படுத்திய ஒருவர், முழுமையாக கைகளை சுத்தம் செய்யாமல் எந்தப் பொருட்களைத் தொட்டாலும் அவற்றின் மீது இந்த வைரஸை பரவச் செய்ய முடியும். கண், மூக்கு போன்றவற்றை தொடுவதால் எளிதில் அவர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி விடுவார்.

கொரோனா பாதிப்பால் தென்கிழக்கு ஆசியாவில் ஐந்தில் நான்கு பேரை மனநல உதவிக்காக அணுக முடியவில்லை

உலோகங்கள், பிளாஸ்டிக், கண்ணாடி போன்ற மேற்பரப்புகளில் கொரோனாவின் வாழ்நாள்:

கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு வைரஸ்களும், முறையாக சுத்தம் செய்ய்யப்படாத உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது ஒன்பது நாட்கள் வரை உயில் வாழும் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. அதுவே, குளிர்ச்சியான சூழல்களில் அவை 28 நாட்கள் வரைகூட உயிர் வாழும் வாய்ப்புகளும் இருக்கிறது. போரோசிலிகேட் கண்ணாடி, எஃகு மற்றும் பாலிஸ்டிரீன் போன்ற பிற மேற்பரப்புகளில் SARS-CoV-2 வைரஸின் உயிர்வாழும் நேரம் காய்ச்சல் வைரஸை விட எட்டு மடங்கு அதிகம் என்பதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.அதன்படி உலோகம், மண்பாண்டங்கள் மற்றும் கண்ணாடியில் 5 நாட்கள், மரத்தில் 4 நாட்கள், பிளாஸ்டிக் பொருட்களில் 2 முதல் 3 நாட்கள், எஃகு மேற்பரப்பில் 2 அல்லது 3 நாட்கள், அட்டையில் 24 மணி நேரம், தாமிரத்தில் 4 மணி நேரம், அலுமினியத்தில் 2 முதல் 8 மணி நேரம், காகிதத்தில் சில நிமிடங்கள் முதல் 5 நாட்கள் வரை கொரோனா வைரஸ் செயலில் இருக்கும்.

மேற்பரப்புகள் மூலம் கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, அனைத்து மேற்பரப்புகளையும், கிருமி நாசினி கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்து செய்ய வேண்டும். மேலும் நம் கைகளை அடிக்கடி சோப் அல்லது சானிடைசர் மூலம் சுத்தம் செய்தல், வெளியில் போகும் போது முக கவசங்களை அணிதல் ஆகியவை கொரோனா தொற்று ஏற்படாமல் தவிர்க்கும் முறைகளாகும்.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading