Home /News /lifestyle /

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மனநல பாதிப்புகள் ஏற்படலாம் - ஆய்வில் தகவல்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மனநல பாதிப்புகள் ஏற்படலாம் - ஆய்வில் தகவல்

மன அழுத்தம்

மன அழுத்தம்

கொரோனாவால் மிகுந்த மற்றும் மிதமான பாதிப்புகளை எதிர்கொண்ட பிறகு, அதில் இருந்து குணமாகி ஓராண்டு கடந்த பிறகு இதுபோன்ற மனநல பாதிப்புகள் ஏற்படுவதாக விரிவான ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது.

கொரோனா நோய்தொற்று உருவாகி மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இதில் பாதிக்கப்படும் மக்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான பின்விளைவுகளை எதிர்கொள்கின்றனர். பலருக்கு முடி உதிர்தல், உடல் சோர்வு, வாசனை நுகரும் திறன் இழப்பு போன்ற உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. அதேசமயம், வேறு சிலருக்கு மனநல பாதிப்புகள் ஏற்படுவது ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது.

தவறான போதைப்பொருள் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் ஏற்படுவதை போன்ற கவலை, மனஅழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் போன்றவை உருவாகின்றன. குறிப்பாக, பலருக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது.

கொரோனாவால் மிகுந்த மற்றும் மிதமான பாதிப்புகளை எதிர்கொண்ட பிறகு, அதில் இருந்து குணமாகி ஓராண்டு கடந்த பிறகு இதுபோன்ற மனநல பாதிப்புகள் ஏற்படுவதாக விரிவான ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், “முந்தைய ஆய்வுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் மூலமாக, கடந்த 2 ஆண்டுகளில் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து நாங்கள் அறிந்து வைத்துள்ளோம்.

இதில், குறிப்பிடத்தக்க வகையில் மனநலன் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. பெருந்தொற்று காலத்தில் வீடுகளில் முடங்கி இருப்பதால் நம் எல்லோருக்குமே மனநல பாதிப்புகள் ஏற்படுகிறது என்ற நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இந்த பாதிப்பு மிக, மிக அதிகமாக இருக்கிறது’’ என்று கூறினார்.



கொரோனா பெருந்தொற்று காலம் தொடங்கியதில் இருந்து உலக அளவில் 403 மில்லியன் மக்களும், அமெரிக்காவில் 77 மில்லியன் மக்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், உலக அளவில் 14.8 கோடி பேருக்கும், அமெரிக்காவில் 2.8 மில்லியன் மக்களுக்கும் மனநல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

விட்டமின் டி குறைபாடு கொரோனா நோயாளிகளிடையே இறக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது - ஆய்வு

விட்டமின் டி3 குறைபாட்டை போக்க நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

எந்தவித தொற்றுகளுக்கும் ஆளாகாத மக்களுடன் ஒப்பிடுகையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 35 சதவீதம் பேருக்கு கவலையும், 40 சதவீதம் பேருக்கு மனஅழுத்தமும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மனக்கவலை மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் மருந்துகளின் விற்பனை அதிகரித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் 41 சதவீதம் பேருக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது. சுமார் 80 சதவீத மக்கள் நியூரோகோக்னிடிவ் என்ற பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு கொண்ட மக்களுக்கு மனக்குழப்பம், கவனச்சிதறல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.



மனநலன் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படும் மக்கள் தனிமையில் இருக்கக் கூடாது என்றும், தயக்கம் எதுவும் இல்லாமல் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அரசு மற்றும் தனியார் சுகாதார சேவை நிறுவனங்கள் சார்பில் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus, Mental Health, Post Corona Symptoms

அடுத்த செய்தி