Coronavirus : கொரோனா தொற்று அல்சைமர் நோய் போன்ற அறிவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்தலாம்: ஆய்வில் தகவல்!

அல்சைமர் நோய்

கோவிட் -19 நோயாளிகள் மற்றும் 'லாங் ஹாலியர்' நோயாளிகளில் ஏற்படும் நரம்பியல் சிக்கல்கள் குறித்த அறிக்கைகளில் நோயாளிகளில் தொற்று நீங்கிய பிறகு சில அறிகுறிகள் தொடர்ந்து காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

  • Share this:
சமீபத்தில் கிளீவ்லேண்ட் கிளினிக் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், கொரோனாவில் அல்சைமர் நோய் போன்ற டிமென்ஷியாவுடன் தொடர்புபடுத்தக்கூடிய வழிமுறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அல்சைமர் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், கோவிட் -19 தொற்றுநோய்க்கும் அல்சைமர் நோயால் ஏற்படும் பொதுவான மூளை மாற்றங்களுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருப்பதைக் குறிக்கிறது.

மேலும் கோவிட் -19 உடன் தொடர்புடைய அறிவாற்றல் குறைபாட்டிற்கான இடர் மேலாண்மை மற்றும் சிகிச்சை உத்திகளைத் தெரிவிக்க இந்த ஆய்வு உதவக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கோவிட் -19 நோயாளிகள் மற்றும் 'லாங் ஹாலியர்' நோயாளிகளில் ஏற்படும் நரம்பியல் சிக்கல்கள் குறித்த அறிக்கைகளில் நோயாளிகளில் தொற்று நீங்கிய பிறகு சில அறிகுறிகள் தொடர்ந்து காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆய்வு SARS-CoV-2 (கோவிட் -19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்) மூளையின் செயல்பாட்டில் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகிறது. இருப்பினும், வைரஸ் எவ்வாறு நரம்பியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்பது இன்னும் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.

இது குறித்து கிளீவ்லேண்ட் கிளினிக்கின் ஜெனோமிக் மெடிசின் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் உதவி ஊழியரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான ஃபீக்ஸியோங் செங் கூறியதாவது, "SARS-CoV-2 மூளை செல்களை நேரடியாகப் பாதிக்கிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை மூளையில் வைரஸ் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.எனவே ஆய்வின் மூலம் கொரோனா மற்றும் நரம்பியல் சிக்கல்கள் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளம் காண்பது, எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்கும் நரம்பியல் அறிவாற்றல் குறைபாடுகளின் வளர்ச்சியை நிவர்த்தி செய்வதற்கான பயனுள்ள தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளை உருவாக்குவதற்கு முக்கியமானதாக இருக்கும்." என்று அவர் கூறியுள்ளார்.இது தொடர்பான ஆய்வில், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அல்சைமர் மற்றும் கோவிட் -19 நோயாளிகளின் தரவுத்தொகுப்புகளைப் ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். அவை SARS-CoV-2 ஹோஸ்ட் மரபணுக்களுக்கும், பல நரம்பியல் நோய்களுடன் தொடர்புடையவர்களுக்கும் இடையிலான அருகாமையை அளந்தன. அதில் நெருக்கமான அருகாமையில் தொடர்புடைய அல்லது பகிரப்பட்ட நோய் பாதைகளை கண்டறிந்தனர். SARS-COV-2-ல் மூளை திசுக்கள் மற்றும் செல்களைப் பாதிக்க உதவும் மரபணு காரணிகளையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் வைரஸ் மூளையை நேரடியாக குறிவைக்கிறது என்பதற்கான சிறிய ஆதாரங்களைக் கண்டறிந்தாலும், வைரஸ் மற்றும் பல நரம்பியல் நோய்களுடன் தொடர்புடைய மரபணுக்கள் அல்லது புரதங்களுக்கிடையேயான நெருக்கமான பிணைய உறவுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். குறிப்பாக, கோவிட் -19 தொற்று அல்சைமர் நோய் போன்ற டிமென்ஷியாவுக்கு வழிவகுக்கும் பாதைகளை சுட்டிக்காட்டுகிறது. இதை மேலும் ஆராய, அவர்கள் கொரோனா மற்றும் நியூரோ இன்ஃப்ளாமேசன் மற்றும் மூளை மைக்ரோவாஸ்குலர் காயம் ஆகியவற்றுக்கு இடையேயான சாத்தியமான தொடர்புகளை ஆராய்ந்தனர். இவை இரண்டும் அல்சைமர்ஸின் அடையாளங்களாக இருக்கின்றன.

Post-Covid fatigue : கொரோனா குணமடைந்த பின் உண்டாகும் சோர்வை எப்படி கையாளுவது..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

மேலும் இது குறித்து டாக்டர் செங் கூறியதாவது, "SARS-CoV-2 நோய்த்தொற்று மூளை வீக்கத்தில் சிக்கியுள்ள அல்சைமர் குறிப்பான்களை கணிசமாக மாற்றியமைத்ததையும், இரத்த-மூளைத் தடையில் உள்ள உயிரணுக்களில் சில வைரஸ் நுழைவு காரணிகள் அதிகம் வெளிப்படுத்தப்படுவதையும் நாங்கள் கண்டறிந்தோம்" என்று விளக்கினார். இந்த கண்டுபிடிப்புகள் கொரோனவால் நியூரோ இன்ஃப்ளமேசன் மற்றும் மூளை மைக்ரோவாஸ்குலர் காயம் சம்பந்தப்பட்ட பல மரபணுக்கள் அல்லது பாதைகளை பாதிக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. இது அல்சைமர் நோய் போன்ற அறிவாற்றல் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்." என்று கூறியுள்ளார்.அல்சைமர்ஸின் மிகப் பெரிய மரபணு ஆபத்து காரணியான அல்லீல் APOE E4 / E4 கொண்ட நபர்களில் ஆன்டிவைரல் பாதுகாப்பு மரபணுக்களின் வெளிப்பாடு குறைந்துவிட்டன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் இந்த நோயாளிகளை கொரோனா இன்னும் அதிக பாதிப்புக்குள்ளாக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டாக்டர் செங் கூறுகையில், கோவிட் -19 உடனான நரம்பியல் சிக்கல்களுக்கு அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளை அடையாளம் காணக்கூடிய சோதனை மற்றும் அளவிடக்கூடிய பயோமார்க்ஸர்களுக்கு வழிவகுக்கும் ஆராய்ச்சிக்கு எங்கள் ஆய்வு வழிவகுத்திருக்கிறது என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிநவீன நெட்வொர்க் மருத்துவம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீண்ட காலம் கொரோனவால் பாதித்த நோயாளிகளில் கோவிட் -19 உடன் தொடர்புடைய நரம்பியல் சிக்கல்களுக்கான செயல்பாட்டு பயோமார்க்ஸ் மற்றும் புதிய சிகிச்சை இலக்குகளை அடையாளம் காண டாக்டர் செங் மற்றும் அவரது குழு இப்போது செயல்பட்டு வருகிறது.

 
Published by:Sivaranjani E
First published: