Home /News /lifestyle /

உங்களுக்கு வந்திருப்பது கோவிட் தொற்றா? ஃப்ளூவா? அல்லது வெப்பம் சார்ந்த நோயா என்பதை எப்படி அறிவது..?

உங்களுக்கு வந்திருப்பது கோவிட் தொற்றா? ஃப்ளூவா? அல்லது வெப்பம் சார்ந்த நோயா என்பதை எப்படி அறிவது..?

கோடைக்கால தொற்றுகள்

கோடைக்கால தொற்றுகள்

இன்னும் பலர் ஏற்கனவே நாட்பட்ட நிலைமைகளை கொண்டிருப்பதால் அவர்களும் தொற்று அபாயத்தில் உள்ளனர். தொற்றே இல்லை என்னும் நிலை ஏற்படும் வரை சமூக இடைவெளியை பராமரிப்பது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட பழக்கங்கள் அவசியம்.

கொரோனா மூன்றாம் அலைக்கு பிறகு தற்போது நாட்டில் தொற்று பாதிப்புகள் கணிசமாக குறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ள நிலையில், இன்னும் பலர் முதல் டோஸ் தடுப்பூசி கூட போடாமல் நடமாடி வருகின்றனர்.

இன்னும் பலர் ஏற்கனவே நாட்பட்ட நிலைமைகளை கொண்டிருப்பதால் அவர்களும் தொற்று அபாயத்தில் உள்ளனர். தொற்றே இல்லை என்னும் நிலை ஏற்படும் வரை சமூக இடைவெளியை பராமரிப்பது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட பழக்கங்கள் அவசியம். SARs-CoV-2 தவிர இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் உள்ளிட்ட பிற சுவாச தொற்றுகள் பரவி, சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. இவற்றை மக்கள் கோவிட் அறிகுறிகள் என நினைத்து பயம் கொள்கின்றனர்.

கடும் கோடை வெயிலுக்கு மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பநிலையும் தற்போதைய தொற்றுகளுக்கு மத்தியில் நிலைமையை மோசமாக்குகிறது. எனவே உங்களுக்கு சில அறிகுறிகள் ஏற்பட்டால் அது கோவிட் தான் என்பது இல்லை. வழக்கமான ஃப்ளூ காய்ச்சல் அல்லது உங்கள் பகுதியில் வீசும் ஹீட்வேவ் கூட காரணமாக இருக்கலாம்.



கோவிட்டா அல்லது ஃப்ளூ காய்ச்சலா என்பதை எப்படி அறிவது?

கோவிட்-19 தொடருக்கும் வழக்கமான ஃப்ளூ காய்ச்சலுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அதன் தீவிரத்தன்மை மற்றும் எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதை பொறுத்தது ஆகும். SARs-CoV-2 வைரஸ் மிகவும் விரைவாக பரவும் தன்மை கொண்டது மற்றும் சிலருக்கு மிக கடுமையான அறிகுறிகள் மற்றும் நோயை ஏற்படுத்தும். அதேசமயம் வழக்கமான ஃப்ளூ காய்ச்சல் வந்தால் லேசான அறிகுறி மற்றும் மிதமான நோயுடன் சில நாட்களில் குணமடைந்து விட முடியும். மூச்சுத் திணறல், வாசனை அல்லது சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் COVID-19 தொற்றுக்கு பொதுவானவை, ஆனால் ஃப்ளூ காய்ச்சலுக்கு இவை அறிகுறிகள் அல்ல.

இதேபோல தலைவலி, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் கொரோனா நோயாளிகளுக்கு குறைவாகவே காணப்படுகின்றன. ஆனால் இவை ஃப்ளூ காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும்.

மன அழுத்தமாக இருக்கும்போது வாந்தி, குமட்டல் ஏன் வருகிறது..? இதனை சமாளிக்கும் வழிகள்..!

கோவிட்டா அல்லது வெப்பம் தொடர்பான நோயின் விளைவா என்பதை எப்படி அறிவது?

வெப்ப அலைகள் காரணமாக ஹீட் ரேஷ் முதல் ஹீட் ஸ்ட்ரோக் வரை நோயை பொறுத்து பல அறிகுறிகளை ஒருவர் உருவாக்கலாம். ஹீட் ஸ்ட்ரோக் லேசானது முதல் கடுமையான அறிகுறிகள் வரை ஏற்படுத்தும். தலைச்சுற்றல், தோல் அழற்சி, குமட்டல், அதிக உடல் வெப்பநிலை (105 டிகிரி வரை) ஏற்படலாம். தீவிர நிலையில் ஒரு நபருக்கு வலிப்பு ஏற்படலாம். கோவிட்-19 தொற்றை இதனுடன் ஒப்பிடும் போது அதிக வெப்பநிலை, வேகமான, சுவாசிப்பதில் சிக்கல், தலைவலி, பதற்றம் போன்ற பல ஹீட் வேவ் அறிகுறிகளுடன் ஒத்து போகலாம்.



எனினும் தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், இருமல் அல்லது வாசனை மற்றும் சுவை குறைபாடு போன்ற பிற அறிகுறிகளை கவனியுங்கள். உடல் வெப்பநிலை தானாகவே இயல்புக்கு வருவது அல்லது சிகிச்சைக்கு பின் அறிகுறிகள் வேகமாக குறைவது உள்ளிட்டவை இருந்தால் அது கோவிட் அல்ல.

தெரிந்து கொள்ள சிறந்த வழி..

உங்களுக்கு தோன்றி உள்ள அறிகுறிகள் கோவிட்டா என்ற சந்தேகம் வலுவாக எழுந்தால் quick rapid antigen டெஸ்ட் செய்து பாருங்கள். RAT சோதனையுடன் ஒப்பிடும்போது மாலிக்குலர் டெஸ்ட் மிகவும் துல்லியமானது மற்றும் நம்பகமானது என்று கூறப்படுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Body Heat, CoronaVirus, Flue, Summer Heat

அடுத்த செய்தி