• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 2 தடுப்பூசிகளை அடுத்தடுத்த டோஸாக போட்டு கொள்வது பாதுகாப்பானதா..? ICMR விளக்கம்!

2 தடுப்பூசிகளை அடுத்தடுத்த டோஸாக போட்டு கொள்வது பாதுகாப்பானதா..? ICMR விளக்கம்!

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

கொரோனா வைரஸிற்கு எதிராக நிலையான நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் நோக்கில் வெவ்வேறு தடுப்பூசி வகைகளை கலப்பது மற்றும் டோஸ்களை கலப்பது என்று பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

  • Share this:
உலகெங்கிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய கோவிட்-19 தொற்றுக்கு எதிராக நம் நாட்டில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து பல்வேறு வேரியன்ட்களின் ஆபத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது மற்றும் தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிப்பது உள்ளிட்டவை பற்றி நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே பல நாடுகள் மூன்றாவது டோஸான பூஸ்டர் ஷாட்டை தங்கள் மக்களுக்கு வழங்கி வருகின்றன.

எனினும் கொரோனா வைரஸிற்கு எதிராக நிலையான நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் நோக்கில் வெவ்வேறு தடுப்பூசி வகைகளை கலப்பது மற்றும் டோஸ்களை கலப்பது என்று பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்திய சிறிய அளவிலான ஆய்வு ஒன்றில், உள்நாட் டில் தற்போது புழக்கத்தில் இருந்து வரும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் கலவை டோஸேஜ் குறித்த பயன்களை எடுத்து காட்டுகின்றன. SARS-COV-2 வைரஸுக்கு எதிராக வலுவான, திறமையான நோயெதிர்ப்பு மறுமொழியை வழங்குவதற்கான சாத்தியம் இரு தடுப்பூசிகளின் கலவை டோஸேஜ் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

ஆய்வு:

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டும் தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் முதன்மையான கோவிட் -19 தடுப்பூசிகளாகும். இந்த 2 தடுப்பூசி ஷாட்களின் செயல்திறன் மற்றும் நோயெதிர்ப்பு மறுமொழியை பகுப்பாய்வு செய்ய ICMR ஒரு மதிப்பீட்டை மேற்கொண்டது. இது தொடர்பான ஆய்வில் பங்கேற்க 18 பேரை தேர்வு செய்த ICMR, அவர்களுக்கு முதல் டோஸாக கோவிஷீல்ட் தடுப்பூசியையும், இரண்டாவது டோஸாக கோவாக்சின் தடுப்பூசியையும் செலுத்தினர்.



ஆய்வு முடிவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் ஷாட்களின் கலவையானது பாதுகாப்பானது மற்றும் ஒரே தடுப்பூசியின் இரண்டு டோஸை விட சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என்பது தெரிய வந்துள்ளதாக ICMR நிபுணர்கள் கூறி இருக்கின்றனர். தவிர 2 தடுப்பூசிகளின் டோஸ்களை கலந்து போட்டதில் யாருக்கும் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை, மேலும் ஆய்வுக்குட்படுத்தபட்டவர்கள் வழக்கமான ஆன்டிபாடி பதிலை விட அதிகமாக பதிவு செய்துள்ளதாகவும் நிபுணர்கள் கூறி உள்ளனர்.

மாஸ்க் அணிவது பருவகால சளி தொற்றுகளையும் தடுக்க உதவுமா..? மருத்துவர்கள் விளக்கம்...

மேலும் இந்த டோசேஜ் மிக்ஸிங்கானது பாதுகாப்பு மற்றும் பயனுள்ளதோடு மட்டுமல்லாமல், ஒரே தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை வழங்குவதோடு ஒப்பிடுகையில் போதுமான அதிக செயற்கை நோய் எதிர்ப்பு சக்தி அளவுகளை பெற முடிந்தது என்றும் நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள். கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டும், 70% க்கும் அதிகமான செயல்திறனைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் சில சந்தர்ப்பங்களில் ரத்த உறைவு மற்றும் நரம்பியல் பாதிப்பு போன்ற அசாதாரண, பாதகமான பக்க விளைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், கோவிஷீல்டு தடுப்பூசி சர்ச்சைகளால் சூழப்பட்டுள்ளது.



இந்த ஆய்வில் 18 பேர் மட்டுமே பங்கேற்க வைக்கப்பட்டதால், 2 தடுப்பூசிகளின் டோஸேஜ்களை செலுத்துவதால் ஏற்படும் நேர்மறைக்கு சான்றுகள் குறைவாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. எனவே தங்கள் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த, பல நிலை மருத்துவ பரிசோதனைகளை நடத்த ஆராய்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தடுப்பூசி போட்டு கொண்டுள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவது கண்டறியப்பட்டு உள்ளதால், பூஸ்டர் டோஸ் மற்றும் கலவை டோஸ்களின் பக்கம் நிபுணர்களின் பார்வை திருப்பியுள்ள நிலையில், பூஸ்டர் ஷாட்டை காட்டிலும் மிக்ஸிங் டோஸ் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும் என்பதே பெரும்பான்மையான நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: