கோவிட்-19 பெருந்தொற்று உலகளவில் படிப்படியாக குறைய துவங்கி உள்ளதை அடுத்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் மக்கள் சற்றே ஆறுதல் அடைந்து உள்ளனர். எனினும் உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கர்ப்ப காலத்தில் கோவிட்-19 தடுப்பூசி போட்டு கொண்ட தாய்மார்களின் குழந்தைகள், அவர்கள் பிறந்த பிறகு COVID நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைவு என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்படும் கோவிட்-19 தடுப்பூசிகள், அவர்களின் குழந்தைகள் பிறந்த பிறகு பாதுகாக்கும் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு பரிந்துரைத்துள்ளது.
கர்ப்பிணி பெண்கள் கொரோனாவிற்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டால் அது அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, அவர்களின் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வின் இந்த புதிய கண்டுபிடிப்புகள், கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டு கொள்வதன் மூலம் தங்களைப் பாதுகாத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களுக்கு புதிதாக பிறக்க போகும் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும் என்பதற்கான முதல் நிஜ உலக சான்றாக இருக்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது மாடர்னா (Moderna) அல்லது ஃபைசர் (Pfizer) /பயோஎன்டெக் (BioNTech) உள்ளிட்ட தடுப்பூசிகளின் 2 டோஸ்களை போட்டு கொண்ட கர்ப்பிணிகளின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பிறந்ததில் இருந்து முதல் 6 மாதங்களில் கோவிட் -19 தொற்று பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆபத்து மிக குறைவு என்று US Centers for Disease Control and Prevention தகவல் தெரிவித்து உள்ளது.
ஜூலை 2021 - ஜனவரி 2022 ஆகிய காலத்திற்கு இடையில், பல குழந்தை மருத்துவமனைகள் மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான யு.எஸ் மையங்களின் (CDC) ஆராய்ச்சியாளர்கள் பிறந்து ஆறு மாதங்களுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளை ஆய்வு செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 379 குழந்தைகளின் தரவை நிபுணர்கள் குழு பகுப்பாய்வு செய்தது. இதில் 176 புதிதாக பிறந்த குழந்தைகள் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மீதமிருந்த 203 குழந்தைகள் பிற பிரச்சனைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்கள். இந்த ஆய்வின் முடிவில் கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போட்டு கொண்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதைத் தடுப்பதில், COVID-19 தடுப்பூசிகள் ஒட்டுமொத்தமாக 61% பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது.
பிரசவத்திற்கு முன் 21 வாரங்கள் முதல் 14 நாட்கள் வரை தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட போது, இந்த பாதுகாப்பு 80% ஆக இருந்தது. அதே போல தங்கள் கர்ப்ப காலத்தின் துவக்கத்திலேயே தடுப்பூசி போட்டு கொண்ட தாய்மார்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசியின் செயல்திறன் 32% ஆக குறைந்துள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செயல்திறன் அல்லது கர்ப்பத்திற்கு முன் தடுப்பூசி போட்டு கொண்ட தாய்மார்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் பற்றிய தரவு ஆய்வில் சேர்க்கப்படவில்லை.
Also Read : தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்
CDC-ஐ சேர்ந்த Dana Meaney-Delman கூறுகையில், "நாங்கள் தாய் மற்றும் கைக்குழந்தை இருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம். எனவே ஒரு கர்ப்பிணிப் பெண் தடுப்பூசி போட தயாராக இருந்தால், அவர் யோசித்து கொண்டே இருக்காமல் உடனடியாக சென்று போட்டு கொள்ள வேண்டும் என்றார். கர்ப்ப காலத்தில் கோவிட் இருப்பது குறைப்பிரசவம், பிரசவம் மற்றும் பிற கர்ப்ப சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கர்ப்பமாக முயற்சிப்பவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள CDC பரிந்துரைக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covid-19, New born baby, Pregnancy care