Home /News /lifestyle /

உங்களது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்.!

உங்களது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்.!

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

உடல் ஆரோக்கியமாக இருப்பின் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். உடல்நிலை சரியில்லாத போது அது உங்கள் மனநலனில் எதிரொலிக்கும்.

நோய்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள நமது நோயெதிர்ப்பு அமைப்பு வலுவாக இருக்க வேண்டும். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கிருமிகள் நம் உடலை ஆக்கிரமிக்க வழிவகுக்கும்.

பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களின் உடல் மிக எளிதில் கிருமிகள் மற்றும் தொற்றுகளின் தாக்குதலுக்கு ஆளாகிறது. உடலில் உள்நுழையும் கிருமிகள் பெருக மற்றும் வளர பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நமக்கு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு அவசியம். நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருப்பதற்கான அறிகுறிகளை எப்போதும் நாம் அறிந்திருக்க வேண்டும்.

பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள் இங்கே..

எரிச்சல் உணர்வு:

உடல் ஆரோக்கியமாக இருப்பின் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். உடல்நிலை சரியில்லாத போது அது உங்கள் மனநலனில் எதிரொலிக்கும். தொடர்ந்து எரிச்சல் கொண்ட மனநிலை அல்லது மன உளைச்சலை உணர்ந்தால் மருத்துவரை அணுகவும்.

மந்த உணர்வு:

பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தின் மற்றொரு முக்கிய அறிகுறி மந்த உணர்வு. வெளியில் இருக்கும் கிருமிகள் உள் நுழைவதற்கு எதிராக உடல் தொடர்ந்து போராடுவதால், உடலுக்குள் ஏற்படும் எதிர்வினைகள் உங்கள் எனெர்ஜி லெவலுக்கு இடையூறு விளைவிக்கும். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராட உடலின் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இதனால் சோர்வு மற்றும் மந்த நிலை காணப்படும்.



காயங்கள் மெதுவாக ஆறுவது:

கீழே விழுவதால் ஏற்படும் காயங்கள் அல்லது தீ காயங்கள் என எந்த வகை காயங்களாக இருந்தாலும் சிலருக்கு உடனே ஆறாது. குணமாக சில வாரங்கள் பிடிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதால், காயமடைந்த சருமம் எளிதில் ஆறாது. ஏனென்றால்உடலின் குணப்படுத்தும் செயல்முறை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலுவை பொறுத்தது.

மாரடைப்பு வராமல் தடுக்க இந்த 4 உடல் நல பிரச்சனைகளை உடனே கவனியுங்கள்..!

அடிக்கடி ஜலதோஷம்:

பெரியவர்களுக்கு வருடத்திற்கு 2-3 முறை ஜலதோஷம் ஏற்படுவது இயல்பு. ஆனால் ஒருவருக்கு அடிக்கடி சளி அதிகமாக இருக்கிறதென்றால், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக இருக்கலாம். பலவீன நோயெதிர்ப்பு உள்ளவர்களுக்கு எளிதில் சளி பிடிக்கும் அதே போல எளிதாக நோய்வாய்ப்படுவார்கள்.

குளிர் புண்கள் (cold sores):

உதட்டை சுற்றி வர கூடிய புண்கள் இந்த cold sores. உங்கள் உதடு மட்டும் வாய் பகுதியில் அடிக்கடி புண்கள் வந்தால் தொற்று காரணமாக இருக்கலாம். அடிக்கடி இந்த புண்கள் வருவது தானாக குணமாக நீண்ட காலம் எடுத்து கொள்வது உள்ளிட்டவை நோயெதிர்ப்பு அமைப்பின் பலவீனத்தை குறிக்கும்.



கோவிட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி:

2020-ஆம் ஆண்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் அறிகுறிகள் தோன்றிய 1-3 வாரங்களுக்கு பிறகு ஆன்டிபாடிகளை உருவாக்கினர். அதே போல கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முக்கியமான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகள் அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது. பொதுவாக தொற்றிலிருந்து மீண்டவர், போதிய ஆன்டிபாடிகள் இருந்தால் மற்றொரு புதிய தொற்றுக்கு அவ்வளவு எளிதில் பாதிக்கப்பட மாட்டார். இருப்பினும் வைரஸ் வேரியன்ட்ஸ்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க கூடும்.

உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது போல உணர்ந்தால் வாழ்க்கை முறையை, குறிப்பாக உணவு முறையை மாற்றுங்கள். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்கானிக் சீசனல் உணவுகள் பெரிதும் உதவும். வைட்டமின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகள் மற்றும் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட முக்கியத்துவம் கொடுத்தால் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Immunity boost

அடுத்த செய்தி