Home /News /lifestyle /

இதை பின்பற்றினால் மூன்று மாதங்களுக்குள் கோவிட் பரவல் நீங்கி விடும் - புற்றுநோயியல் நிபுணர்கள் கருத்து

இதை பின்பற்றினால் மூன்று மாதங்களுக்குள் கோவிட் பரவல் நீங்கி விடும் - புற்றுநோயியல் நிபுணர்கள் கருத்து

ஒமைக்ரான்

ஒமைக்ரான்

கோவிட்-19 தொற்றுப் பரவல் குறைவாக இருக்கும்போதே நாம் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொண்டால் இந்த மூன்று மாதத்திற்குள் விலகிவிடும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
உலகம் முழுவதிலும் ஏற்கனவே குழுவின் மூன்றாவது அலை பரவத் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் மாநில வாரியாக பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் புதிய ஊரடங்கு விதிகளை அமல்படுத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் ஒரே நாளிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று டெல்லி உடல்நலத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். தற்பொழுது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தாலும், கடந்த ஆண்டு இருந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை, ஆனாலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

கோவிட்-19 தொற்றுப் பரவல் குறைவாக இருக்கும்போதே நாம் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொண்டால் இந்த மூன்று மாதத்திற்குள் விலகிவிடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் தெரிவித்துள்ளார். பின்வரும் இந்த நான்கு விஷயங்களை நாடு முழுவதும் அனைவரும் கடைபிடித்தால் கொரோனா மூன்றாவது அலை மூன்றே மாதங்களுக்குள் இந்தியாவில் இருந்து காணாமல் போகும் என்று ஐசிஎம்ஆர் இன் தொற்றுநோயியல் துறையின் தலைவரான சமைரான் பாண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
* பொது மக்கள் கூட்டமாக எல்லா இடங்களிலும் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* தேவையின்றி பயணங்களை மேற்கொள்ள கூடாது. அத்தியாவசியமான பயணங்கள் மட்டுமே செல்ல வேண்டும்.
* செலுத்திக் கொண்டால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, தடுப்பு ஊசி செலுத்தி கொண்டாலும் வெளியிடங்களில் செல்லும்பொழுது மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.



உலக சுகாதார மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை, அதிக பாதிப்பு விரைவாக பரவுதல் என்பது தீவிரமாகும் அதே நேரத்தில், தினமும் பாதிப்புக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை குறைகிறது என்று தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி தடுப்பூசிகள் கொரோனா வைரசின் மற்றொரு வேரியண்ட் ஆன ஒமைக்ரான் வைரஸ் மீது தீவிரமான பாதிப்பை ஏற்படாமல் பாதுகாக்கிறது என்றும் கூறியுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்வது மட்டுமே பாதுகாப்பானது என்று நினைத்துவிடக்கூடாது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் வைரஸ் பாதிக்காது என்ற எண்ணத்தையும் கைவிட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

வீட்டிலேயே செய்யப்படும் கொரோனா டெஸ்டில் ஒமைக்ரான் தொற்றையும் கண்டறிய முடியுமா..? ஆய்வின் பதில்...

ஆரம்ப நாள் முதல் தற்போது வரை கொரோனா வைரஸ் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக, வைரஸ் தொற்று வந்தாலே உடல் அதை எதிர்த்து போராடும், உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அந்த வகையில், வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் நபருக்கு அதுவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சாத்தியம் உள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் கொரோன தொற்று ஏற்பட்டால் ஏற்கனவே உடலில் உருவாகி உள்ள ஆன்டிபாடிகள் வைரஸை எதிர்த்துப் போராடி நோயிலிருந்து விடுபட வைக்கும்.



அதேபோல தடுப்பூசி ஏற்கனவே உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்கி இருக்கும். எனவே, ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டாலும் எல்லாருக்கும் அதன் அறிகுறிகள் பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்குவதில்லை. முதியவர்கள் மீது கோவிட் வைரஸ் அல்லது ஒமைக்ரான் எவ்வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இதுவரை சரியாகக் கண்டறிய முடியவில்லை.

மூன்றாவது அலை வேகமாகப் பரவுகிறது என்ற நிலையிலும், மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. இதுவரை கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளானவர்களில் 70% நபர்களில் எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் 30% நபர்களில் அறிகுறிகள் மைல்டாகத் தான் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐசிஎம்ஆர் இல் ஒமைக்ரானுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் என்பதை பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Corona, Omicron, Omicron Symptoms

அடுத்த செய்தி