முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இரண்டாம் தடுப்பூசி எப்போது போட வேண்டும்..?

கொரோனா

இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் இதை மிகவும் அரிதான வழக்கு என்று தெரிவிக்கிறது . அதாவது 0.05 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கிறது.

 • Share this:
  கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசிதான் ஒரே வழி என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் சிலர் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதை இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் இதை மிகவும் அரிதான வழக்கு என்று தெரிவிக்கிறது . அதாவது 0.05 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கிறது.

  அப்படி, கொரோனா முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் இரண்டாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது.

  சுகாதார அமைச்சகம் கட்டாயம் இரண்டாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறது. அப்படி கொரோனாவால் பாதிகப்பட்டால் கொரோனா குணமடைந்த பின் நான்கு அல்லது எட்டு வாரம் கழித்து போட்டுக்கொள்ளுங்கள் எனக் கூறுகிறது.

  இந்த நான்கு முதல் எட்டு வார காலம் யார்யாருக்கெல்லாம் பொருந்து என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில்...

  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர்கள்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு வைரஸுக்கு எதிரான ஓரின எதிர்பான்களை (monoclonal antibodies) கொண்ட அல்லது பிளாஸ்மா சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளிகள்.

  COVID-19 Vaccination: கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா..? உங்கள் சந்தேகங்களுக்கான மருத்துவரின் விளக்கம்

  கொரோனாவின் தீவிர அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு அதோடு மற்ற நோயாளும் பாதிக்கப்பட்டவர்கள். தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள்.

  என மேலே குறிப்பிட்ட இந்த மூன்று வகையான கொரோனா நோயாளிகள் கொரோனா குணமடைந்த பின் நான்கு முதல் எட்டு வாரங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

  corona vaccine, covaxine, covishield

  இது தவிர நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றுப்படி கொரோனா அறிகுறிகளே இல்லாமல் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டுத் தனிமையிலிருந்து விலக்கு அளித்த பின் கொரோனா இரண்டாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், இந்த தடுப்பூசிகளின் செயல்பாடுகள் பல காரணிகளை உள்ளடக்கியது. அதாவது கொரோனா பரவலின் தீவிரம், அதன் உருமாற்றம் இப்படி பல காரணிகளை உள்ளடக்கிய நிஜ உலகின் நிகழ்வை பொருத்தே அதை கையாள வேண்டும் என்கிறது.

   

   
  Published by:Sivaranjani E
  First published: