கொரோனா தடுப்பூசிகளில் அங்கீகரிக்கப்பட்டவை எவை? சோதனையில் உள்ள தடுப்பூசிகளின் விவரம்!
தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் அல்லது அதன் ஒரு பகுதியைப் பிரதிபலிக்கின்றன. மேலும் ஆன்டிபாடிகளை உருவாக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகின்றன. தற்போது உலகளவில், ஒரு சில தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றன. WHO வெளியிட்ட அறிக்கையின்படி, ஜனவரி 18ம் தேதி வரை உலகளவில் 2,049,311 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, 96,008,788 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உலக மக்கள் அனைவருக்கும் ஒரே நம்பிக்கையாக இருப்பது தடுப்பூசி மட்டுமே.
வழக்கமாக, ஒரு தடுப்பூசியை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். இருப்பினும், 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக தடுப்பூசி கண்டுபிடிப்புக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. இதன் பொருள் என்னவென்றால், விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் வேகமாக செயல்பட்டு உரிய நேரத்தில் தடுப்பூசிகளை வெளியிட வேண்டும் என்பது தான். இதனை தற்போது சில நாடுகள் வெற்றிகரமாக செய்துள்ளன என்று சொல்லலாம்.
தடுப்பூசிகள் மூலம் என்ன பலன் கிடைக்கின்றன?
தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் அல்லது அதன் ஒரு பகுதியைப் பிரதிபலிக்கின்றன. மேலும் ஆன்டிபாடிகளை உருவாக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகின்றன. தற்போது உலகளவில், ஒரு சில தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 50க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் அதன் பல்வேறு கட்ட சோதனைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளின் சோதனை நிலைகள் என்ன?
முன் மருத்துவ நிலை (Pre-clinical stage) : நோயெதிர்ப்பு தன்மையை சரிபார்க்க விலங்குகளுக்கு குறிப்பிட்ட அளவு ஷாட்ஸ் வழங்கப்படுகின்றன.
மருத்துவ பரிசோதனையின் கட்டம் 1 (Clinical testing - Phase 1) : தடுப்பூசியின் பாதுகாப்பைத் தீர்மானிக்க குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு போடப்படுகிறது. இதன் மூலம் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு தன்மையை பற்றி மேலும் அறிய முடியும்.
கட்டம் 2 (Phase 2) : பெரிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் அதன் பாதுகாப்பு மற்றும் அளவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த சோதனை உதவும்.
கட்டம் 3 (Phase 3) : தடுப்பூசியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு குறிப்பிட்ட அளவு ஷாட்ஸ் வழங்கப்படுகிறது. இந்த சோதனையில் பக்க விளைவுகளை கண்காணித்தல், மற்றும் அதன் செயல்திறனை சரிபார்த்தல் போன்றவை அடங்கும்.
ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்த மற்றும் சோதனை கட்டங்களில் உள்ள சில தடுப்பூசிகள் விவரங்கள்:
இது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவில் போன்ற நாடுகளில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்ற முதல் தடுப்பூசி இதுவாகும். இது 95 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாடர்னா தடுப்பூசி (Moderna vaccine)
இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் மரபணு குறியீட்டின் ஒரு சிறிய பகுதியைப் பயன்படுத்துகிறது. இது உடலில் வைரஸின் ஒரு பகுதியை உருவாக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக நோயெதிர்ப்பு அமைப்பு அதனை ஒரு வைரஸ் தொற்றாக அங்கீகரித்து தாக்கத் தொடங்குகிறது. இதன் மூலம் தடுப்பூசி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகிறது. தற்போது இதன் 3ம் கட்டம் சோதனை தரவுகளின்படி, இந்த தடுப்பூசியின் செயல்திறன் 94.1% ஆக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 3 ஆம் தேதி, இந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது இந்தியாவில் கோவிஷீல்ட் என்று அழைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அளவைப் பொறுத்து அதன் செயல்திறன் 62 சதவிகிதம் அல்லது 90 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கும் என்று புதிரான தகவல்கள் தெரிவித்த பின்னர் சில கட்டுப்பாட்டாளர்கள் இது குறித்த கூடுதல் தகவல்களைத் ஆராய்ந்து வருகின்றனர்.
இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) மற்றும் தேசிய வைராலஜி (National Institute of Virology) ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாகியுள்ளன. கடந்த ஆண்டு மருத்துவ பரிசோதனைகளில் நுழைந்த முதல் இந்திய தடுப்பூசி இதுவாகும். ஜனவரி 3 ஆம் தேதி, அவசரகால பயன்பாட்டிற்கு இதனை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)
மருந்து தயாரிப்பாளர்கள் நடத்திய ஒரு ஆரம்ப ஆய்வில் ஒரு-ஷாட் தடுப்பூசி நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டியதாக கூறப்படுகிறது. ஒரே ஒரு ஷாட்டுக்குப் பிறகு மக்களைப் பாதுகாக்கும் தடுப்பூசிகளில் இதுவே முதன்மையாக இருக்கும். நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அதன் நோய் எதிர்ப்பு சக்தி 71 நாட்கள் நீடித்தது என்று குறிப்பிட்டிருந்தனர். தற்போது அமெரிக்காவில் இதன் சோதனை 3ம் கட்டத்தில் உள்ளது. இன்னும் சில வாரங்களுக்குள், இறுதி கட்ட தடுப்பூசி சோதனையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளும் என கூறப்படுகிறது.
நோவாவக்ஸ் (Novavax)
நோவாவாக்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் 3ம் கட்ட சோதனைகளை அறிமுகப்படுத்தியது. அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன. அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 3ம் கட்ட சோதனைகள் இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளன. இதன் இடைக்கால தரவு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
கமலேயா (Gamaleya)
ரஷ்யாவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பூட்னிக் வி அல்லது காம்-கோவிட்-வெக் (Sputnik V or Gam-Covid-Vac) எனப்படும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இடைக்கால ஆய்வின்படி, இதன் செயல்திறன் 95 சதவீதமாகக் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், சிலர் தரவை சந்தேகிக்கிறார்கள். 3ம் கட்ட சோதனைகள் தொடங்குவதற்கு முன்பே கடந்த ஆகஸ்ட் மாதம் தடுப்பூசியின் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கு ரஷ்யா ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹங்கேரி, சவுதி அரேபியா, இந்தியா போன்ற நாடுகளில் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினோவாக் (SinoVac)
சீன பயோடெக் நிறுவனம் உருவாக்கிய சினோவாக் சர்வதேச அளவில் அதன் தடுப்பூசிக்கான 3ம் கட்ட சோதனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது சீனாவிற்குள் பயன்பாட்டிற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் 3ம் கட்டசோதனைகள் பிரேசில், இந்தோனேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ளன.
சீன உற்பத்தியாளர் இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றனர். சோதனைகள் நடந்து கொண்டிருந்தாலும், இரண்டும் சீனாவில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டு விதிகளின் கீழ் பரவலாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
க்யூர்வாக் (CureVac)
டிசம்பர் இறுதியில், க்யூர்வாக் அதன் தடுப்பூசியான சி.வி.என்.கோவியின் (CVnCoV) மூன்றாம் கட்ட சோதனைகளை ஜெர்மனியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களில் நடத்தியது. இது முதன்மையாக ஐரோப்பிய ஒன்றியத்தில் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.