• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நாளை முதல் துவங்கும் கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் அடுத்த கட்டம்.. யாருக்கு போடப்படும், பதிவு செய்வது எப்படி?

நாளை முதல் துவங்கும் கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் அடுத்த கட்டம்.. யாருக்கு போடப்படும், பதிவு செய்வது எப்படி?

மாதிரி படம்

மாதிரி படம்

பிரவுசருக்கு சென்று www.cowin.gov.in என்ற வெப்சைட்டை ஓபன் செய்து பதிவு செய்ய வேண்டும்.

  • Share this:
கொரோனா பரவல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனை அடுத்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதியான நாளை முதல் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி போடும் அடுத்த கட்ட பணி துவங்குகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ள தகுதிவாய்ந்த குடிமக்கள் தாங்கள் தடுப்பூசி போட்டு கொள்ளும் இடத்தை பதிவு செய்ய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளை அரசு உருவாக்கியுள்ளது. முதன் முதலில் நம் நாட்டில் சுகாதார ஊழியர்களுக்காக ஜனவரி 16 அன்று நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது. பின் இது பிப்ரவரி 2 முதல் முன்கள பணியாளர்களுக்கு என நீட்டிக்கப்பட்டது

தொடர்ந்து தடுப்பூசி இயக்கத்தின் அடுத்த கட்டம் துவங்கி மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் இணை நோய்களை உடைய 45 வயதிற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்ளும் தகுதியுள்ள குடிமக்கள் Co-WIN வெப்சைட் அல்லது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-க்கான ஆரோக்கிய சேது (Aarogya Setu) ஆப் மூலம் பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக ஒரு பிரத்யேக Co-WIN ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது இந்த ஆப் நிர்வாகிகளால் மட்டுமே அணுகப்படுவதாக கூறப்படுகிறது. குடிமக்களுக்கு இந்த சேவை கிடைப்பது பற்றிய தகவலில் இதுவரை தெளிவு இல்லை.கோ-வின் (Co-WIN) போர்ட்டல் மற்றும் ஆரோக்கிய சேது என 2 இயங்குதளங்களும் கோவிட்-19 தடுப்பூசி பெற யூசர் உட்பட குறைந்தது 4 குடும்ப உறுப்பினர்களை பதிவு செய்ய அனுமதிக்கின்றன. இரண்டு இயங்குதளங்களும் யூசர்களுக்கு அருகில் உள்ள அரசு அல்லது தனியார் தடுப்பூசி மையங்களை கண்டறிய உதவுகிறது. அருகில் இருக்கும் சென்டர்களில் தங்கள் ஸ்லாட்டை யூசர்கள் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால் ஸ்லாட்டைப் புதுப்பிக்க அல்லது சந்திப்பை முழுவதுமாக ரத்து செய்வதற்கான விருப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.

Coronavirus Safety : கொரோனா பாஸிட்டிவ்... என்னால் ஓட்டு போட முடியுமா? மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா விளக்கம்

ஆரோக்கிய சேது பயன்படுத்தி தடுப்பூசிக்கு பதிவு செய்வது எப்படி.?

கோவிட்-19 டிராக்கர் ஆப்-ஆன ஆரோக்கிய சேது வழியே தடுப்பூசிக்கு பதிவு செய்ய, குடிமக்கள் முதலில் Cowin டேஷ்போர்ட்டை கண்டுபிடிக்க(find) வேண்டும். பின் வேக்ஸினேஷன் (Vaccination) விருப்பத்தைத் தேர்வு செய்து ரிஜிஸ்டர் நவ் (Register Now) விருப்பத்தை தட்ட வேண்டும். பின் யூசர்கள் முதலில் தங்கள் 10 இலக்க மொபைல் எண் வழியாக பதிவு செய்து OTP-ஐ என்டர் செய்ய வேண்டும்.

அதற்கு பின் ஆதார், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்ற தங்களிடம் இருக்கும் ஏதேனும் ஒரு புகைப்பட ஐடி ஆதாரங்களை யூசர்கள் செலக்ட் செய்ய வேண்டும். தடுப்பூசி பெற தகுதியான குடிமக்கள் தங்களது பாலினம் மற்றும் பிறந்த தேதி போன்ற அடிப்படை தகவல்களையும் வழங்க வேண்டும். இந்த நிலைகள் முடிந்த பிறகு, ஒரே மொபைல் எண்ணுடன் 4 பயனாளிகள் வரை சேர்த்து கொள்ளும் வகையிலான ஒரு பக்கம் யூசர்களின் பார்வைக்கு வரும். பின்னர் அதில் குடும்ப உறுப்பினர்களை சேர்த்து விட்டு, தங்கள் இருப்பிடத்தை பின்கோட் டைப் செய்து அருகில் இருக்கும் தேவையான தடுப்பூசி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம். தொடர்ந்து யூசர்கள் தங்களுக்கு வசதியான டைம் ஸ்லாட்டை செலக்ட் செய்து தொடரவும் (Proceed) என்பதை கிளிக் செய்வதன் மூலம் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம்.கோவின்(CoWin) போர்ட்டல் மூலம் தடுப்பூசிக்கு பதிவு செய்வது எப்படி.?

பிரவுசருக்கு சென்று www.cowin.gov.in என்ற வெப்சைட்டை ஓபன் செய்து, அதில் பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணை என்டர் செய்ய வேண்டும். பின் குறிப்பிட்ட எண்ணுக்கு OTP வரும். வந்த OTP-ஐ என்டர் செய்து விட்டு ‘சரிபார்க்கவும்’ (Verify) என்பதை தட்ட வேண்டும். OTP சரிபார்க்கப்பட்டதும், “தடுப்பூசி பதிவு” (Registration of Vaccination) பக்கம் தோன்றும். அதில் புகைப்பட அடையாள எண், பெயர், பாலினம் மற்றும் பிறந்த ஆண்டு போன்ற அடிப்படை விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

Explainer : கோவிட் -19 தடுப்பூசி போடுவதற்கு முன்னர் அல்லது பிறகு வலி நிவாரணி மருந்துகளை எடுத்து கொள்ளலாமா?

இந்த ரிஜிஸ்டர் முடிவடைந்ததும் பயனர்களுக்கு கோவின் அக்கவுண்ட் விவரங்களை காண்பிக்கும். வெப்சைட் பக்கத்தின் கீழே வலது மூலையில் இருக்கும் Add More ஆப்ஷனை பயன்படுத்தி ஒரு மொபைல் எண் பயன்படுத்தி மேலும் மூன்று பேரை(குடும்ப உறுப்பினர்கள்) குடிமக்கள் சேர்க்கலாம்.

நீங்கள் இதை பயன்படுத்தினால் தனிநபரின் அனைத்து விவரங்களையும் என்டர் செய்து “Add” பட்டனை கிளிக் செய்வது முக்கியம். அனைத்து விவரங்களையும் சேர்த்த பின், ஷெட்யூல் அப்பாயிண்ட்மெண்டை கிளிக் செய்து, பின் தோன்றும் மெனுவிலிருந்து மாநிலம், மாவட்டம், தொகுதி மற்றும் பின்கோடு மூலம் குடிமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தடுப்பூசி மையத்தை கண்டறிந்து தடுப்பூசி போட்டு கொள்ளும் நாளை புக் செய்யலாம். இதற்கு Account Details சென்று காலண்டர் ஐகானை க்ளிக் செய்து ஷெட்யூல் அப்பாயிண்ட்மெண்ட் கிளிக் செய்யது மேற்கண்டவற்றை தொடரலாம்.

ஒருமுறை புக் பட்டனை கிளிக் செய்த பிறகு அப்பாயிண்ட்மெண்டை உறுதி செய்வதற்கான பக்கம் தோன்றும். முன்பதிவு குறித்த இறுதி உறுதிப்படுத்தலுக்கான விவரங்களை குடிமக்கள் சரிபார்த்த பின் ‘Confirm’-ஐ கிளிக் செய்க. கோவிட்19 தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்ற குடிமக்கள் COWIN அல்லதுஆரோக்கிய சேது வழி தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: