ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் தாமதம் ஆகிறது : ஆய்வில் உறுதி..!

கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் தாமதம் ஆகிறது : ஆய்வில் உறுதி..!

மாதவிடாய் தாமதம்

மாதவிடாய் தாமதம்

கோவிட் தடுப்பூசி யாரெல்லாம் அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுவாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் ஒரு சில பாதிப்புகள் ஏற்படும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகையே ஆட்டிப்படைத்த பலவித நோய்கள் பற்றி பல்வேறு செய்திகளை பார்த்து இருக்கிறோம், படித்து இருக்கிறோம். இந்த தலைமுறையினர் அதன் ஒரு அங்கமாக இருந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கோவிட் தொற்று உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்பொழுது இயல்பு வாழ்க்கை முழுவதுமாக மீண்டுவிட்ட திரும்பிவிட்ட நிலையில்மே கோவிட் தொற்று பற்றிய ஆய்வுகள் தடுப்பூசி இன்று பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவிட் தடுப்பூசிகள் நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்களுக்கு செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் வேறு ஏதேனும் பிரச்சனை வருகிறதா என்பதை பற்றிய பலவிதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வந்தன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நீள்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி யாரெல்லாம் அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுவாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் ஒரு சில பாதிப்புகள் ஏற்படும். ஆனால், தடுப்பூசியால் வேறு ஏதேனும் விளைவுகள் இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் தோற்று தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் காலம் நீள்கிறது என்பதை ஒரு சர்வதேச ஆய்வு வெளியிட்டுள்ளது. கோவிட் தடுப்பூசிக்கும், மாதவிடாய்க்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் மருத்துவ ஜர்னலில் வெளியான விவரங்கள்

வட அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நேச்சுரல் சைக்கிள்ஸ் என்ற ஒரு செயலியை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நேச்சுரல் சைக்கிள்ஸ் என்பது மாதவிடாய் சுழற்சியை டிராக் செய்யும் ஒரு செயலியாகும். எப்பொழுது மாதவிடாய் வரும், எது ஓவிலேஷன் காலம் என்று மாதவிடாய் சுழற்சியை ட்ராக் செய்வதற்கு தற்போது பலவிதமான செயலிகள் வந்துள்ளன.

அதில் உலக அளவில் பிரபலமாக இருக்கும் செயலிதான் நேச்சுரல் சைக்கிள்ஸ். இந்த செயலியை பயன்படுத்தும் பெண்கள் பல்வேறு நாடுகளிலிருந்து இந்த ஆய்வில் கலந்து கொண்டுள்ளனர். இதில் இருந்து பெறப்பட்ட தரவின் அடிப்படையில் இந்த ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் மருத்துவ ஜர்னலில் வெளியாகியுள்ளது.

Also Read : மாதவிடாயின் போது வயிறு உப்புசம், வீக்கம் இருக்கா..? இந்த 5 உணவுப் பொருட்களை சாப்பிட்டு பாருங்க...

ஆய்வில் கலந்து கொண்ட பெண்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் அவர்களின் அடையாளங்கள் அனைத்தையும் நீக்கப்பட்டு, பொதுவான தரவாக தான் பயன்படுத்தப்பட்டது என்று ஆய்வாளர்கள் உறுதியளித்துள்ளனர். பங்கேற்பாளர்களின் மாதவிடாய் சுழற்சி ஒப்பீடு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் 14,936 பங்கேற்பாளர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் மற்றும் 4686 பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடப்பட்டது.

கோவிட் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பிறகு,தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் மாதவிடாய் 0.71 நாட்கள் தாமதமாக வருகிறது என்பது ஆய்வு தெரிவிக்கின்றது.

ஒரு மாதவிடாய் காலம் முடிந்து அடுத்த மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு அதாவது ஒரு மாதவிடாய் சுழற்சி காலத்திற்குள்ளேயே இரண்டு முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மாதவிடாய் இன்னும் தள்ளிப் போகிறது.

Also Read :  நார்மலாக உடலில் கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்..? இதய நோயை உண்டாக்கு அளவு என்ன..?

உதாரணமாக ஒரு சராசரியான மாதவிடாய் 28 நாட்கள் என்று கூறப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு 30 நாட்களில் மாதவிடாய் சுழற்சி என்றால் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு 30 நாட்களில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய், 31 அல்லது 32 நாளாக மாறியிருக்கிறது என்பதை இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் சராசரியாக மாதவிடாய் காலம் நான்கு நாட்கள் அதிகரித்திருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களில் 13 சதவிகிதத்தினருக்கு மாதவிடாய் குறைந்த பட்சம் எட்டு நாட்கள் தள்ளிப் போகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக 30 நாட்கள் மாதவிடாய் சுழற்சி ஏற்படும் பெண்ணுக்கு 38 – 40 நாட்களில் மாதவிடாய் வருகிறது என்பதை ஆய்வு தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே வழக்கத்தை விட கூடுதலாக மாதவிடாய் சுழற்சி காலம் இருக்கும் இளம்பெண்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இது மேலும் அதிகரிக்கிறது என்ற அச்சுறுத்தக்கூடிய தகவலையும் இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது.

First published:

Tags: Irregular periods, Periods