கொரோனா தொற்று : ஏற்கனவே அடிப்படை நோய்களால் பாதித்தவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் அதிகம்.. ஆய்வுகளால் முடிவு..

இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்பு நோயாளிகள் கொரோனா நோய்த்தொற்றால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கலாம்.

கொரோனா தொற்று : ஏற்கனவே அடிப்படை நோய்களால் பாதித்தவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் அதிகம்.. ஆய்வுகளால் முடிவு..
மாதிரி படம்
  • Share this:
கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சில அடிப்படை சுகாதார நிலைமை, ஏற்கனவே சில நோய் கொண்டவர்களுக்கு இறப்பு அபாயம் அதிகம் என்று ஆய்வுகளின் பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பென் மாநில மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள், முன்பே சில நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் உயிரிழக்க அதிக ஆபத்து ஏற்படக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர். மேலும் ப்ளோஸ் ஒன்னில் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வின்படி, கொரோனா வைரஸ் பற்றிய 25 வெவ்வேறு ஆய்வுகளின் முறையான ஆய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வை மேற்கொண்டது. அதில், 65,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடமிருந்து தரவை ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இருதய நோய், ஆஸ்துமா, நீரிழிவு, இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக கோளாறு, பக்கவாதம், கல்லீரல் நோய், எச்.ஐ.வி (எய்ட்ஸ்) மற்றும் புற்றுநோய் போன்ற அடிப்படை மருத்துவ நிலையில் உள்ள நோயாளிகள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் இறக்கும் அபாயம் அதிகமாகலாம். மெட்லைன், ஸ்கோபஸ், ஓவிட் மற்றும் கோக்ரேன் நூலக தரவுத்தளங்கள் மற்றும் medrxiv.org உள்ளிட்டவை, டிசம்பர் 2019 மற்றும் ஜூலை 2020 ஆம் ஆண்டிற்கு இடையில் வெளியிடப்பட்ட ஆய்வுகளில் இருந்து இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டது.


covid 19

நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ், இறப்பின் அதிக ஆபத்து இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். முன்பே நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலைமைகள் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, முன்பே நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலைமைகளைக் கொண்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் தரவை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். மேலும் அந்த ஆய்வின் போது...

ஐந்தே நிமிடத்தில் கொரோனா பரிசோதனை ரிசல்ட்.. ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..1. நாள்பட்ட சிறுநீரக நோய் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு விகிதம் மூன்று மடங்காக உயர்த்தக்கூடும்.

2. இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்பு நோயாளிகள் கொரோனா நோய்த்தொற்றால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கலாம்.

3. நீரிழிவு மற்றும் புற்றுநோய்  ஆகிய நோயாளிகள் கோரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், மரணத்திற்கு 1.5 மடங்கு ஆபத்துள்ளது.கோவிட் -19 நோயாளிகளுக்கு நாட்பட்ட நிலைமைகள் மிகவும் பொதுவானவை என்பதையும் அவை இறப்புக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்தியது. தென்னாப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் உயர் இரத்த அழுத்தம், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் மக்களிடையே பொதுவான மருத்துவ நிலை இருப்பதை இது மேலும் வெளிப்படுத்தியது.

தொற்றுநோயின் காரணமாக நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளை, அவர்களின் வழக்கமான மருத்துவ பரிசோதனையிலிருந்து தனிமைப்படுத்தியது மட்டுமல்லாமல், இது அவர்களின் நோயின் தீவிரத்திற்கும் வழிவகுக்கிறது.

இந்த வைரஸ் இணைந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், தற்போதைய கொரோனா நோய்த்தொற்றுடன் மரணத்திற்கு அதிக ஆபத்து இருப்பதாகவும் ஆய்வுகள் கண்டறியப்பட்டுள்ளது.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading