Home /News /lifestyle /

ஆஸ்துமா நோயாளிகள் இதை செய்தால்தான் கொரோனா ஆபத்தை தவிர்க்க முடியும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

ஆஸ்துமா நோயாளிகள் இதை செய்தால்தான் கொரோனா ஆபத்தை தவிர்க்க முடியும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

ஆஸ்துமா

ஆஸ்துமா

பலர் மாஸ்க் போடாமல் பொது இடங்களில் உலவி வந்தாலும், வெளியே சென்றாலே மாஸ்க்கை அணிந்து கொண்டு புறப்படுவது பலருக்கு பொதுவான பழக்கமாகி விட்டது.

2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் கோவிட்-19 தொற்று காரணமாக உலக நாடுகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. ஒமைக்ரான் தொற்று பரவல் உலகம் முழுவதும் அதிகரித்து கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டு இருக்கிறது. இன்னும் எத்தனை அலைகள் வந்தாலும் தடுப்பூசி, சமூக இடைவெளி, கைகள் சுகாதாரம் உள்ளிட்டவற்றோடு வலியுறுத்தப்படும் முக்கிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாஸ்க் அணிவது ஆகும். உலகம் COVID-19 தொற்று நோயுடன் தொடர்ந்து போராடி வரும் நிலையில், பொது இடங்களில் மாஸ்க் அணிவது இயல்பான ஒன்றாகி விட்டது.

பலர் மாஸ்க் போடாமல் பொது இடங்களில் உலவி வந்தாலும், வெளியே சென்றாலே மாஸ்க்கை அணிந்து கொண்டு புறப்படுவது பலருக்கு பொதுவான பழக்கமாகி விட்டது. துவக்கத்தில் நீண்ட நேரம் மாஸ்க் அணிய மக்கள் சிரமப்பட்டாலும் போக போக பழகி கொண்டு விட்டனர். ஆனால் ஒரு நபர் ஆஸ்துமா போன்ற நீண்ட கால சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த வகையான மாஸ்க்கை முகத்தில் மாட்டி கொள்வது மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். மாஸ்க் அணிவதால் பல ஆஸ்துமா நோயாளிகள் கடும் சிரமத்தை எதிர் கொண்டு வறுகின்றனர்.

அது மட்டுமின்றி ஆஸ்துமா நோயாளிகள் மாஸ்க் அணிந்து கொள்வது பாதுகாப்பானதா, அவர்களுக்கு இருக்கும் சுவாச பிரச்சனைகளை அதிகரிக்காதா என்ற கேள்வியை பலர் எழுப்பியுள்ளனர். இது குறித்து, அமெரிக்கன் அகாடமி ஆஃப் அலர்ஜி, ஆஸ்துமா & இம்யூனாலஜி ( American Academy of Allergy, Asthma & Immunology ) கூறி இருப்பதாவது, மாஸ்க் அணிவது ஆஸ்துமா உள்ள நபரின் உடல்நிலையை மோசமாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளது.



அமெரிக்காவின் தேசிய பொது சுகாதார நிறுவனம் மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அதன் மாஸ்க் தொடர்பான சமீபத்திய வழிகாட்டுதலில் மக்கள் தங்கள் தொடர்ந்து அணியக்கூடிய வகையிலான மிகவும் பாதுகாப்பான மற்றும் வெல் ஃபிட்டிங் மாஸ்க்குகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறது. American agency சமீபத்தில் மாஸ்க்குகளுக்கு இடையிலான வேறுபாடுகள் பற்றிய விரிவான தகவல்களை வெளியிட்டது. N95 போன்ற உயரடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாஸ்க்குகள் துணி மற்றும் சர்ஜிக்கல் மாஸ்க் போன்ற மற்றவற்றை விட மிகவும் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள் என்ன..? தடுக்கும் வழிகளும்.. பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகளும்...

ஆனால் மாஸ்க் அணிவது போன்ற உடல் ரீதியான தடை ஏற்கனவே ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறு உள்ளவர்களுக்கு சுவாசிப்பதை மேலும் கடினமாக்குகிறது மற்றும் துரதிர்ஷ்டவசமாக கோடைகாலம் நெருங்கும் போது அவர்களது சுவாச சிரமம் மேலும் அதிகரிக்கும். எனவே இது போன்ற சூழலில் ஆஸ்துமா உள்ளிட்ட தீவிர சுவாச கோளாறு உள்ள நோயாளிகள் வீட்டிலேயே இருக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர் மேலும் ஏற்கனவே சுவாச பிரச்சனைகள் கொண்ட நபர்கள் அல்லது அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் கோவிட்டால் பாதிக்கப்பட்டால் தவிர வீட்டில் இருக்கும் போது மாஸ்க்குகளை அணிய வேண்டிய அவசியமில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.



ஏற்கனவே சுவாச கோளாறு உள்ளவர்கள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டால் மிக எளிதாக பெரியளவில் சிக்கல்களை உருவாக்கலாம் என்பதால் அவர்கள் வீட்டிலேயே இருப்பது சிறந்த முன்னெச்சரிக்கையாகும் என்பதே பல நிபுணர்களின் ஒருமித்த அறிவுரையாக இருக்கிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Asthma, CoronaVirus

அடுத்த செய்தி