ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் கோவிட் தொற்று தீவிரமாக தாக்குகிறது..?

உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் கோவிட் தொற்று தீவிரமாக தாக்குகிறது..?

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றால் இறந்த ஐரோப்பியர்களின் கொழுப்பு திசுக்களையும் ஆய்வு செய்தது. இதயம், குடல் மற்றும் கல்லீரல் போன்ற உள் உறுப்புகளைச் சுற்றி கொரோனா வைரஸ் கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அதிக எடை அல்லது பருமனான உடலுடன் இருப்பது ஒரு கொமொர்பிடிட்டி நிலை ஆகும். அதாவது ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் அல்லது கோளாறுகள் உள்ளன என்று அர்த்தம். கொமொர்பிடிட்டி மற்ற நோய்களுக்கான ஆபத்தையும் அதிகரிக்கிறது. உதாரணமாக, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதய நோய்க்கான அதிக ஆபத்து காணப்படுவது.

கடும் கோவிட் தொற்று ஏற்படும் அபாயத்தை கொமொர்பிடிட்டி அதிகரிக்கிறது. இது மட்டுமின்றி இவர்கள் கோவிட் தொற்றுக்கு பிந்தைய சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, கொரோனா வைரஸ் கொழுப்பு செல்களை பாதிக்கிறது, இது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.

உடல் பருமன் கொண்டவர்களில்..

அதிக அளவில் பரவ கூடிய கோவிட் வைரஸ் உண்மையில் கொழுப்பு மற்றும் உடலின் கொழுப்பில் உள்ள சில நோயெதிர்ப்பு செல்களை பாதிப்பதாக ஆய்வு கூறுகிறது. அதே போல உடல் பருமன் அல்லது அதிக எடை கொண்டவர்கள் வேறு எந்த நோய்களாலும் பாதிக்கப்படாவிட்டாலும் கூட, ஏன் கோவிட் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்த ஆய்வு தெளிவாக விளக்குகிறது.

கொழுப்பு செல்களை கொரோனா வைரஸ் பாதிக்கும் போது என்ன நடக்கிறது..

கொழுப்பு செல்களில் எது நடந்தாலும் அதோடு நிற்காது அவற்றை சுற்றியுள்ள செல்களையும் பாதிக்க தொடங்குகின்றன. அதாவது வைரஸால் கொழுப்பு செல்கள் பாதிக்கப்படும் போது அவை சுற்றியுள்ள மற்ற செல்களையும் பாதிக்கின்றன. கொழுப்பு செல்கள் பெரும்பாலும் உடலின் மென்மையான உறுப்புகளை சூழ்ந்திருக்கின்றன. எனவே பருமனான அல்லது அதிக எடை கொண்ட நபரின் உறுப்புகளை கொரோனா வைரஸ் எளிதில் பாதிக்கும்.

ஆய்வு..

சமீபத்திய இந்த ஆய்வுக்காக ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நோயாளிகளிடமிருந்து கொழுப்பு திசுக்களை பரிசோதித்து, கொரோனா வைரஸ் கொழுப்பு செல்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய கூடுதல் தகவலை பெற்றனர். இந்த ஆய்வின் போது ஆராய்ச்சியாளர்கள் அடிபோசைட்டுகள், ப்ரீ-அடிபோசைட்டுகள், கொழுப்பு செல்கள் மற்றும் நோயெதிர்ப்பு செல்கள் போன்ற பல வகை செல்களை ஆய்வு செய்தனர்.

தைராய்டு மருந்துகளை நிறுத்தினால் என்ன ஆகும்..? எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்..? மருத்துவரின் பதில்கள்

ஆய்வு முடிவுகள்..

ஆய்வின் முடிவில் அடிபோசைட்ஸ் (adipocytes) செல்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆனால் அவை அதிகம் வீக்கமடையாது. இதனுடன் சில நோயெதிர்ப்பு உயிரணுக்களும் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் இவை ஒரு பெரிய அழற்சி எதிர்வினையையும் கொண்டுள்ளன. ப்ரீ-அடிபோசைட்ஸ் (pre-adipocytes) செல்களை பொருத்தவரை, அவை பாதிக்கப்படவில்லை அல்லது அழற்சியை உருவாக்கவில்லை.

ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் கொரோனா தொற்றால் இறந்த ஐரோப்பியர்களின் கொழுப்பு திசுக்களையும் ஆய்வு செய்தது. இதயம், குடல் மற்றும் கல்லீரல் போன்ற உள் உறுப்புகளைச் சுற்றி கொரோனா வைரஸ் கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு உடல் பருமன் கொண்டவர்களுக்கும், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உறுப்பு சேதத்திற்கும் இடையிலான தொடர்பை நிறுவியது.

பருமனானவர்கள் கோவிட்டால் பாதிக்கப்பட்டால்..

பருமனானவர்களின் உடலில் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உட்பட அனைத்து முக்கிய உறுப்புகளையும் கொழுப்பு செல்கள் அதிக அளவில் சூழ்ந்துள்ளன. கொரோனாவால் பாதிக்கப்படும் போது கொழுப்பு செல்களை பாதிக்கப்பட்டு, பின் உடலின் மற்ற செல்கள் மற்றும் உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டு உறுப்பு செயலிழப்பிற்கு வழிவகுக்கும். இந்த ஆய்வின் மூலம் கோவிட் எவ்வாறு கொழுப்பு செல்களை பாதிக்கிறது மற்றும் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்களுக்கு ஏன் கடும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பது தெரிய வந்துள்ளதால் இனி சிகிச்சை செயல்முறை விரைவாக மாறலாம். மேலும் இந்த புதிய ஆய்வு உறுப்பு செயலிழப்பு மற்றும் இறப்பு அபாயத்தை குறைக்கவும் உதவும்.

First published:

Tags: Corona impact, Covid-19, Obesity