கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஆசிரியரருக்கு அந்த குறிப்பிட்ட மாதம் பீரியட்ஸ் வரவில்லை என்று கூறியுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் அவருக்கு தாமதமான பீரியட்ஸ் சிக்கல் நீடித்தது. மேலும், அசாதாரண ரத்த உறைதல் உடன் தாமதமான பீரியட்ஸ் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், "இப்போது, எனது பீரியட்ஸ் காலம் வழக்கமான நாட்களை காட்டிலும் 10 நாட்கள் அல்லது அதற்கு அப்பால் தாமதமாகின்றன," என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல், முஸ்கன் அரோரா என்ற மாணவி, சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் போது பீரியட்ஸ் சாதாரணமாக இருந்தது. ஆனால் அதன்பிறகு காய்ச்சல் வந்தபோது அவர் பலவீனமாக இருந்ததால், ஒழுங்கற்ற வெளியேற்றம் காரணமாக பீரியட்ஸ் காலங்கள் மிகவும் வேதனையாக இருந்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.
இறுதியில் கொரோனவால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் அவருக்கு அதிக ஓட்டம் இருந்ததாகவும், இரண்டாவது நாளில் எந்தவிதமான ஓட்டமும் இல்லை என்றும், பின்னர் மூன்றாம் நாள் ப்ளீடிங் மிக அதிகமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் கொரோனாவில் இருந்து மீண்ட அடுத்த மாதத்தில் பீரியட்ஸை தனக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சமீபத்தில் டாக்டர் சாமையா ஷேக் என்ற நரம்பியல் விஞ்ஞானி ட்விட்டரில் இதேபோன்ற ஒருகருத்தை பகிர்ந்து கொண்டார். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த பிறகு பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுகிறதா? என்பது குறித்த கேள்விக்கு அவர் தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதில், “ கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது கடுமையான மனச்சோர்வு என்னை தூண்டியது மட்டுமல்லாமல், நான் கவனிக்கத் தொடங்கிய விஷயம் மாதவிடாய் காலம் மற்றும் அதன் அளவில் மாற்றம். மேலும், பல நாட்கள் நீடித்த இரத்த உறைவு ஆகியவற்றை தான், ”என்று அவர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். ஆனால் ஆரம்பத்தில், என்னால் அதை கொரோனவுடன் இணைக்க முடியவில்லை, ”என்று அவர் மேலும் பகிர்ந்து கொண்டார்.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது தவறவிட்ட மாதவிடாய் சுழற்சி, குணமடைந்த பின்பு ஒழுங்கற்ற சுழற்சிகள், ஸ்பாட்கள், கனமான ரத்த வெளியேற்றம், நீண்ட மாதவிடாய் காலம் ஆகியவை தொற்றுநோய்களுக்கு மத்தியில் பெண்கள் இந்த சிக்கலைகளை பெற்றதாக கூறப்படுகிறது. தாமதமான பீரியட்ஸ் அல்லது ஒழுங்கற்ற ஓட்டம் பெரும்பாலும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்துடன் தொடர்புடையது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஸ்ரீ பாலாஜி அதிரடி மருத்துவ நிறுவனத்தின் மூத்த ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் ரேணு குப்தா, “மன அழுத்தம் பெண்களின் மாதவிடாய் முறைகளுடன் நேரடியாக தொடர்புடையது. இது பெண் ஹார்மோன்கள், சீரற்ற சுழற்சி, பீரியட்ஸில் வலி, மனநிலை மாற்றங்கள், தேவையற்ற சோர்வு போன்றவற்றுடன் தொடர்புடையது. எனவே இதுபோன்ற அனுபவங்களைப் பற்றி பெண்கள் புகார் செய்தால் ஆச்சரியமில்லை. மேலும், பெண்கள் வீட்டு வேலைகளையும் அலுவலக வேலைகளையும் ஒன்றாக நிர்வகிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். பலருக்கு வீட்டில் கூட உதவி செய்வதற்கு ஆள் கிடைக்காது. எனவே, இத்தகைய சூழல்களில் உருவாகும் மன அழுத்தம் பீரியட்ஸ் முறைகள் உட்பட ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த நல்வாழ்வை பெரிதும் பாதிக்கும் ”என்று கூறினார்.
பீரியட்ஸ் சமயங்களில் கவனிக்கத்தக்க மாற்றத்திற்கான சாத்தியமான காரணங்கள் என்ன?
உங்கள் முழு உடலும் கொரோனா நோய்த்தொற்றின் அழுத்தத்தையும், மீட்கும் கட்டத்தையும் சமாளிப்பதால், அந்த மனஅழுத்தம் உங்கள் மாதவிடாய் சுழற்சிகளிலும் தலையிடும். மன அழுத்தம் உடலில் இன்சுலின் ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும். இது லெப்டின் ஹார்மோனின் சுரப்பை ஏற்படுத்துகிறது. முதல் 30 நாட்களுக்குள் சுழற்சி காலத்தைப் கொண்ட பெண்கள், இப்போது அவர்களின் சுழற்சியை 7-8 நாட்கள் அல்லது அதற்கும் அதிகமான தாமதத்துடன் பெறலாம். இது ஒலிகோமெனோரியா என்று அழைக்கப்படுகிறது.
தூக்க முறை, உணவுப் பழக்கம், உடல் செயல்பாடு போன்ற வழக்கமான செயல்பாடுகளின் பற்றாக்குறை பீரியட்ஸில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வழக்கமான உடற்பயிற்சிகள் மற்றும் சீரான உணவு ஆகியவை பெண்களின் ஆரோக்கியத்தில் மிக முக்கியமான காரணியாகும். எடை தாங்கும் பயிற்சிகள் எலும்புகளை வலுவாகவும், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் செய்கிறது. இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைத் தடுக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா சமயத்தில் பீரியட்ஸில் ஏற்படும் சில சிக்கலைகளை எவ்வாறு சமாளிக்கலாம்?
* மனஅமைதியை பெறுங்கள் - நிலைமை கடினமானதாக இருந்தாலும், நாம் அனைவரும் அதிலிருந்து போராட வேண்டும். தொற்றுநோயால் மனதளவில் பாதிக்கப்படுவது சரிதான். ஆனால் மன நல்லறிவைப் பேணுவதும் அவசியம். ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வோடு தொடர்புடைய உங்கள் மனநலத்தை முதன்மையாக வைத்திருங்கள்.
* தியானம் - தியானத்திற்கான ஒரு அட்டவணையை உருவாக்குங்கள். உங்கள் மனதை அமைதிப்படுத்த உங்கள் கால அட்டவணையில் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது மனதைப் புதுப்பிக்க உதவுகிறது. இதற்கு பிராணயாமா சுவாச பயிற்சிகள் உதவும்.
மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி தடைபடுகிறதா..? 5 நாட்களுக்கும் திட்டங்கள் இதோ...
* ஊட்டச்சத்து உணவு - உங்கள் உடலின் ஊட்டச்சத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமற்ற உணவைத் தவிர்க்கவும். ஊட்டச்சத்து பற்றாக்குறை உங்களை இரத்த சோகைக்குள்ளாக்கும். இது பீரியட்ஸ் இரத்தப்போக்கு முறைகளை பாதிக்கும். எனவே, இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
* உடற்பயிற்சி - ஒரு உட்கார்ந்த வாழ்க்கை முறை காரணமாக உடல் இயக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளதால், ஒருவர் அதை உடற்பயிற்சிகளுடன் சமப்படுத்த வேண்டும். வரையறுக்கப்பட்ட அறைகளில் செய்யக்கூடிய பயிற்சிகள் உள்ளன. திறந்த ஜன்னல் கதவுகள் முன்பு நிலையான ஜாகிங் செய்யுங்கள். ஒரு நிபுணரின் சரியான மேற்பார்வையின் கீழ் சில யோகா போஸ்களை செய்யலாம்.
* ஆன்லைன் ஆலோசனை - இணைய இணைப்பு மற்றும் தேவையான கேஜெட்களை வீட்டில் வைத்திருப்பது நம்மில் பலருக்கு அவசியம். உங்கள் ஆரோக்கியத்திற்கு இதை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏற்கனவே ஏதேனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆன்லைன் தளங்கள் மூலம் உங்கள் மருத்துவருடன் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுவது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Covid-19, Irregular periods, Menstruation