கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களைவிட, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அதிகளவு ரத்த உறைவு ஏற்படுவது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெறும் காலத்தை மக்கள் ஆவலாக எதிர்நோக்கி இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தைகளில் கூற முடியாது. அந்தளவுக்கு மக்கள் மனப்புழுக்கத்தில் இருக்கின்றனர். தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டாலும், அவை முழுமையான நிவாரணம் கொடுப்பவையாக இல்லை. பயன்படுத்தப்பட்டு வரும் ஒவ்வொரு தடுப்பூசியும், 60 முதல் 95 விழுக்காடு வரை மட்டுமே பாதுகாப்பு கொடுப்பவையாக இருக்கின்றன. அதேநேரத்தில், தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு கொரோனா பாதிக்காது என்ற உத்தரவாதமும் கிடையாது. மற்றவர்களைக் காட்டிலும் குறைவான பாதிப்பு ஏற்படும் என்று கூறலாம்.
இந்நிலையில், புதியதாக வெளியாகியுள்ள ஆய்வு ஒன்றில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களைக் காட்டிலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களிடையே ரத்த உறைவு (Blood Clotting) அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டீஷ் மெடிக்கல் ஜெர்னல் இதழில் வெளியாகியுள்ள ஆய்வில், கோவிட்ஷீல்டு அல்லது பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸால் ஏற்படக்கூடிய ரத்த உறைவு பிரச்சனை மிகமிக குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களிடையே இந்த பாதிப்பு அதிகளவு இருப்பதாக கூறியுள்ளது.
அந்த ஆய்வில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 29 மில்லியன் பேரில், 1.7 மில்லியன் பேர் ஆக்ஸ்போர்டு தயாரித்த ஆஸ்டிராஜென்கா அல்லது பைசர் தடுப்பூசிகளின் முதல் டோஸை போட்டுக்கொண்டுள்ளனர் எனக் தெரிவித்துள்ளது.
என்டமிக் நிலையில் இந்தியா.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
தடுப்பூசி எடுத்துக்கொண்ட 10 மில்லியன் பேரில் சுமார் 66 பேர் ரத்த உறைவு பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுடன் இந்த தரவுகளை ஒப்பிடும்போது, அவர்கள் 12,614 பேர் ரத்த உறைவு பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களைக் காட்டிலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களிடையே பிளேட்லெட்டுகள் 9 மடங்கு குறைவாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதபோது, வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாத பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் பிரிட்டீஷ் மெடிக்கல் ஜெர்னல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஆஸ்ட்ராஜென்காவுடன் கூட்டணியில்லாமல் சுயாதீனமாக மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்ட்ராஜென்கா தடுப்பூசி பல்வேறு நாடுகளில் அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டபோது, ரத்த உறைவு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, அந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் இளம் தலைமுறையினருக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டதாக தொடர் புகார்கள் எழுந்ததையடுத்து, சில நாடுகள் அஸ்டிராஜென்கா தடுப்பூசி பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தினர். பின்னர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Blood Clot, CoronaVirus, Covid-19 vaccine