ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கொரோனாவிலிருந்து தப்பிக்க மீண்டும் ’டபுள் மாஸ்கிங்’ அவசியமா..?ஆய்வு சொல்வது என்ன..?

கொரோனாவிலிருந்து தப்பிக்க மீண்டும் ’டபுள் மாஸ்கிங்’ அவசியமா..?ஆய்வு சொல்வது என்ன..?

டபுள் மாஸ்கிங்

டபுள் மாஸ்கிங்

two masks : இரண்டு மாஸ்க்குகளை அணியும் போது, அதன் பில்டரிங் திறன் மேம்படுகிறது என்றாலும் கூட, சுவாசித்தல் சார்ந்த சிரமங்களும் ஏற்படுகின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா தொற்றுகள் பெருமளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில், நாடெங்கிலும் மீண்டும் தொற்றுகள் பரவத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஒமைக்ரான் வைரஸின் திரிபு வடிவங்களான பிஏ1 மற்றும் பிஏ2 ஆகியவை தற்போது மீண்டும் பரவத் தொடங்கியிருக்கின்றன. இத்தகைய சூழலில், மாஸ்க் குறித்த நமது கண்ணோட்டத்தை நாம் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் முதன் முதலாக கொரொனா தொற்று ஏற்பட்ட போதே, பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவாமல் மாஸ்க் பாதுகாப்பு கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஏறக்குறைய 2 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், தற்போது மாஸ்க் பயன்படுத்தும் விதம் முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது. தொற்று வராமல் தடுக்க மாஸ்க் அணிவதில் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உத்தியைக் கடைப்பிடிக்கின்றனர். அதே சமயம், ஒரே நேரத்தில் இரண்டு மாஸ்க்குகளை அணிந்து கொண்டால் கொரோனா தொற்றில் இருந்து சிறப்பான பாதுகாப்பு கிடைக்கும் என்று நீங்கள் எப்போதாவது கருதியது உண்டா?

தற்போது பரவி வரும் புதிய கொரோனா திரிபு வடிவமானது, நமது உடலின் செல்களில் வெகு எளிமையாக ஒட்டிக் கொள்ளக் கூடியது. அத்தகைய சூழலில், நம் மூக்கு மற்றும் வாய் ஆகிய பகுதிகளை எந்த அளவுக்கு கவர் செய்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு இந்த தொற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஆனால், இதற்காக இரண்டு மாஸ்க் அணிவது பலன் கொடுக்குமா என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டியிருக்கிறது.

இரண்டு மாஸ்க் அணிவதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு சொல்வது என்ன?

அமெரிக்க ஆய்வாளர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டதில் ஒரே சமயத்தில் இரண்டு மாஸ்க்குகளை அணிவதால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது. அதற்குப் பதிலாக, தொற்று பாதிப்பதற்கான வாய்ப்புகளை இது அதிகப்படுத்துகிறது.

இரண்டு மாஸ்க்குகளை நீங்கள் அணியும்போது, ஒன்றன் மேல் ஒன்றாக நீங்கள் முறைப்படி அணிய வாய்ப்பில்லை. அத்தகைய சமயத்தில் மாஸ்க் பயன்பாட்டின் நோக்கம் தவறி விடுகிறது. இறுதியாக தொற்று பாதிப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

கோடையிலும் ஜலதோஷம், கரகரப்பான தொண்டை பிரச்சனையா..? இதை கட்டாயம் செய்ய மறந்துடாதீங்க..!

இரண்டு மாஸ்க்குகளை அணியும் போது, அதன் பில்டரிங் திறன் மேம்படுகிறது என்றாலும் கூட, சுவாசித்தல் சார்ந்த சிரமங்களும் ஏற்படுகின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஆய்வாளரும், மருத்துவருமான தீரஜ் வாத்வா கூறுகையில், “உலகெங்கிலும் உள்ள மக்கள் பலரும் மாஸ்க் அணிகின்றனர். குறிப்பாக, இரண்டு அல்லது 3 அடுக்குகளைக் கொண்ட மாஸ்க் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதெல்லாம் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகளைத் தான் அதிகப்படுத்தும் என்பது அவர்களில் பலருக்கு தெரிவதில்லை. மாஸ்க்குகளை முறையாக அணியாத மக்கள் பலரை நான் பார்க்கிறேன். அவர்களுக்கு தொற்று பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது’’ என்று கூறினார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Corona Mask, CoronaVirus