• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கோவிட் -19 வைரஸ் தொற்று இளைஞர்களின் நுரையீரலை சேதப்படுத்தும் வாய்ப்பு குறைவே - ஆய்வில் தகவல்!

கோவிட் -19 வைரஸ் தொற்று இளைஞர்களின் நுரையீரலை சேதப்படுத்தும் வாய்ப்பு குறைவே - ஆய்வில் தகவல்!

கொரோனா

கொரோனா

புதிய ஆராய்ச்சி நாவல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இளைஞர்களிடையே நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று குறிப்பிட்டுள்ளது.

  • Share this:
கொடூர தொற்றான கோவிட் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் கடுமையாக இருக்கின்றன என்பதை பல நிகழ்வுகள் நமக்கு காட்டி இருக்கின்றன. நிபுணர்களின் கருத்துப்படி கோவிட் வைரஸ் ஒருவரது சுவாச மண்டலத்தை கடுமையாக பாதிப்படைய செய்து விடுகிறது. மேலும் நோயின் தீவிரம் கடுமையாக மாறும் போது அடுத்தடுத்து பல உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன. கோவிட் தொற்றால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் அதிலிருந்து மீள பல வாரங்கள் ஆகலாம்.

இரண்டாவது அலை இன்னும் முழுமையாக ஓயாத நிலையில், மூன்றாம் அலை பற்றிய பயம் நம்மிடையே இருந்து வருகிறது. இதனிடையே சமீபத்திய கோவிட் பாதிப்புகள் தொடர்பான ஆய்வு ஒன்று, இளைஞர்களுக்கு நல்ல விஷயங்களை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய ஆராய்ச்சி நாவல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இளைஞர்களிடையே நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று குறிப்பிட்டுள்ளது.

வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்பு செயல்பட்டதை போலவே, பாதிக்கப்பட்ட இளைஞர்களின் நுரையீரல் செயல்படுவதாகவும், அவர்களது நுரையீரலின் வேலை திறன் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் அந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி கட்டுரை சமீபத்தில் ஐரோப்பிய சுவாச சங்க சர்வதேச மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆராய்ச்சி கட்டுரையில் மிக இளம் வயதில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அது அவர்களது நுரையீரலின் வேலை திறனை பாதிக்காது என்று குறிப்பிடபட்டிருக்கிறது.



இது தொடர்பாக தகவல் தெரிவித்து உள்ள சுவீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவன ஆராய்ச்சியாளர் டாக்டர் இடா மோகென்சன், இளைஞர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று நீண்ட காலத்திற்கு அவர்களின் நுரையீரலின் செயல்பாட்டை பாதிக்காது. இளவயதில் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கூட, நுரையீரலின் செயல்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் தொற்றால் அவர்களின் நுரையீரலின் வேலை திறன் பாதிக்கப்படவில்லை என்றார்.

 

ஸ்டாக்ஹோமில் நடத்தப்பட்ட இது தொடர்பான ஆய்வில் சராசரியாக 22 வயதுடைய இளைஞர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 1994 -1996-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்தவர்கள் அடங்குவர். 2020 அக்டோபர் - 2021 மே வரையில் தொற்றால் இந்த இளைஞர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கோவிட் வைரஸ் தொற்று மற்றும் அதிலிருந்து குணமடைந்த பிறகு, ஈசினோபில்ஸ் மற்றும் அழற்சி சோதனைகளுடன் கூடவே நுரையீரல் செயல்பாடு தொடர்பான பரி சோதனைகள் அவர்களுக்கு நடத்தப்பட்டன.

பெண்களை தாக்கும் 5 வகை புற்றுநோய்கள் : அறிகுறிகளும்... காரணங்களும்…

இதில் பாதிக்கப்பட்ட 661 இளைஞர்களில், SARS-CoV-2 க்கு எதிரான ஆன்டிபாடிகள் 178 பேரின் ரத்தத்தில் உருவாகி இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் ஆய்வு பரிசோதனைகளும், ஆய்வு முடிவுகளும் இளைஞர்களுடைய நுரையீரலின் வேலை திறன், கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு ஒரே மாதிரியாக இருந்தது என்பதை நிரூபித்துள்ளது. அதே போல மற்றொரு ஆய்வு ஒன்றும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் டீனேஜர்களின் நுரையீரல் வேலை திறனில் எவ்வித மாற்றமோ அல்லது பாதிப்போ இல்லை என்று கூறியுள்ளது.



பிற வயது குழுவினருடன் ஒப்பிடுகையில் தொற்றுக்கு பிறகு குழந்தைகள் மிக விரைவாக பாதிப்புகளில் இருந்து குணமடைந்து வருவதை கண்டதால், இளைஞர்களின் நுரையீரலில் கோவிட் தொற்று ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்து கொள்வதே இந்த ஆய்வுகளின் நோக்கம் ஆகும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: