உலக கல்லீரல் தினம் 2021 : கல்லீரல் பாதிப்பு கொண்டவர்களை கொரோனா தாக்கினால் உயிருக்கே ஆபத்தா..?

உலக கல்லீரல் தினம் 2021 : கல்லீரல் பாதிப்பு கொண்டவர்களை கொரோனா தாக்கினால் உயிருக்கே ஆபத்தா..?

கல்லீரல், கொரோனா

நாள்பட்ட வைரஸ் ஹெபடைடிஸ் கல்லீரல் பாதிப்பை அறிகுறிகள் இல்லாமல் கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் சிரோசிஸ் போன்ற முனைய நோய் நிலையை அடையும் வரை ஒருவரை பாதிக்கும்.

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19ம் தேதி அன்று உலக கல்லீரல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் ஹெபடாலஜி இயக்குநர் டாக்டர் அரவிந்த் சாஹ்னி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்துவதும், அதிகப்படியான மதுபான பழக்கத்தை தவிர்ப்பதும் அவசியம் என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, “சமீபத்தில், கொரோனா தொற்று கல்லீரல் நோய்களுக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்த்தது. அதாவது கொரோனா நோய்த்தொற்று கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே கல்லீரல் பாதிப்பு இருக்கும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும். எனவே, முன்பே கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்” என்று கூறியுள்ளார். ஹெபடைடிஸ் எனப்படும் கல்லீரல் நோயை சமாளிப்பதற்கான ஒரே வழி ஸ்கிரீனிங் மற்றும் ஆரம்பகால நோய் கண்டறிதல் ஆகியவை தான். ஏனெனில் நாள்பட்ட வைரஸ் ஹெபடைடிஸ் கல்லீரல் பாதிப்பை அறிகுறிகள் இல்லாமல் கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் சிரோசிஸ் போன்ற முனைய நோய் நிலையை அடையும் வரை ஒருவரை பாதிக்கும்.

இருப்பினும், ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி வைரஸ்களுக்கு தடுப்பூசி கிடைக்கிறது. கல்லீரல் உடலில் மிகப்பெரிய உறுப்பு மற்றும் வாழ்க்கைக்கு அவசியமான நூற்றுக்கணக்கான வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை செய்கிறது. இதுகுறித்து டாக்டர் சாஹ்னி கூறியதாவது, "நம் வாழ்க்கை முறைதான் நமது கல்லீரலை பாதிக்கிறது. அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் சிரோசிஸை ஏற்படுத்தும் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்வதோடு அதிக கலோரிகளைக் கொண்ட உணவை சாப்பிடுவது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை (NAFLD) ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.



மஞ்சள் காமாலை கல்லீரல் நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆனால் சில சந்தர்ப்பங்களில், இது நோய் கண்டறிதலில் தாமதத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக வைரஸ் தொற்றுகள் கல்லீரல் நோய்க்கு ஒரு பொதுவான காரணமாக அமைகின்றன. அதன்படி ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ போன்ற வைரஸ்கள் நீரினால் பரவும் தனமைக் கொண்டது. இது கடுமையான கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதேபோல, ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற வைரஸ்கள் இரத்தத்தில் பரவும் தன்மைக் கொண்டது.

இவை சிரோசிஸ் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற நிரந்தர பாதிப்பு மூலம் கல்லீரலில் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த வைரஸ் தொற்றுகள் அதாவது பி மற்றும் சி வைரஸ் தொற்றுகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்பட வேண்டியது அவசியம். அதிலும் தற்போதுள்ள அசாதரண சூழலில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். அதேபோல, ஒருவர் அதிகபடியான அளவில் மது உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published: