Home /News /lifestyle /

6 மாதங்கள் வரை கடும் இரத்த உறைவு அபாயத்தை ஏற்படுத்தும் கோவிட் பாதிப்பு - ஆய்வில் கண்டுபிடிப்பு..!

6 மாதங்கள் வரை கடும் இரத்த உறைவு அபாயத்தை ஏற்படுத்தும் கோவிட் பாதிப்பு - ஆய்வில் கண்டுபிடிப்பு..!

இரத்த உறைவு பிரச்சனை

இரத்த உறைவு பிரச்சனை

பல காரணிகளை தீவிரமாக ஆராய்ந்த பின் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் ரத்த குழாய் அபாயத்தில் 33 மடங்கு அதிகரிப்பு மற்றும் ஆழ நரம்பு ரத்த உறைவு அபாயத்தில் 5 மடங்கு அதிகரிப்பு ஆகியவற்றையும் நிபுணர்கள் கண்டறிந்தனர்.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துள்ள நிலையில், அந்த வைரஸ் பாதிப்பால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சிகளை நிபுணர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஏனென்றால் கோவிட்-19 இன்னும் முழுமையாக இந்த உலகை விட்டு மறையவில்லை. இந்நிலையில் கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் லேசாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட, அவர்கள் பாதிக்கப்பட்டதில் இருந்து சுமார் ஆறு மாதங்கள் வரை கடுமையான ரத்த உறைவு (Blood Clots) ஏற்படும் அபாயம் அதிகம் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ரத்த உறைவு அபாயத்தை கோவிட்-19 அதிகரிக்கிறது என்பதை முந்தைய ஆராய்ச்சிகள் ஏற்கனவே சுட்டி காட்டி உள்ளன. ஆனால் BMJ மருத்துவ இதழில் வெளியாகி இருக்கும் புதிய ஆய்வு ஒன்று, ரத்த உறைவு அச்சுறுத்தல் கோவிட் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தற்போது வெளிப்படுத்தி உள்ளது.

இந்த ஆய்வுக்காக ஸ்வீடனின் தேசிய பதிவேடை அடிப்படையாக கொண்டு, கடந்த பிப்ரவரி 2020 முதல் மே 2021 வரை கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தரவை, பாசிட்டிவ் டெஸ்ட் முடிவை பெறாத 4 மில்லியனுக்கும் அதிகமான கன்ட்ரோல் குரூப்ஸ்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.



முடிவில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரலில் ரத்த குழாயில் திடீர் அடைப்பு, நுரையீரலில் உள்ள தமனிகளை பிளாக் செய்யும் ரத்த உறைவு உள்ளிட்ட கடும் ஆபத்துகள் தொற்றுக்குப் பிறகு ஆறு மாதங்கள் வரை இருப்பதை நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர். மேலும் கோவிட் பாதித்த 3 மாதங்களுக்குப் பிறகு ஆழமான நரம்பு ரத்த உறைவு, கால்களில் ரத்த உறைவு ஏற்படும் அபாயமும் உள்ளது என்றும் ஆயில் ஈடுபட்ட நிபுணர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

அதிகரிக்கும் வெயில் தாக்கத்தால் உண்டாகும் வயிற்றுப்போக்கு... தவிர்ப்பதற்கான வழிமுறைகள்..!

பல காரணிகளை தீவிரமாக ஆராய்ந்த பின் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் ரத்த குழாய் அபாயத்தில் 33 மடங்கு அதிகரிப்பு மற்றும் ஆழ நரம்பு ரத்த உறைவு அபாயத்தில் 5 மடங்கு அதிகரிப்பு ஆகியவற்றையும் நிபுணர்கள் கண்டறிந்தனர். தவிர கோவிட்டின் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள், முன்பே உடலில் சிக்கல்களை கொண்டவர்கள் ரத்த உறைவு ஆபத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.



தங்களது சமீபத்திய கண்டுபிடிப்புகள் முக்கிய கொள்கை தாக்கங்களை கொண்டிருப்பதாக கூறியுள்ள ஆய்வாளர்கள், குறிப்பாக அதிக ஆபத்துள்ள சந்தர்ப்பங்களில் ரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்க கூடுதல் சிகிச்சை தேவை என்பதை வலியுறுத்தி உள்ளனர். மேலும் தங்களது ஆய்வு முடிவுகள் கோவிட்டிற்கு எதிராக தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். தவிர லேசான கோவிட் தொற்றுடன் தொடர்புடைய சிக்கல்கள் குறித்தும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு நினைவூட்டுவதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Blood Clot, Covid-19, Post Corona Symptoms

அடுத்த செய்தி