Citrus Fruits : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிட்ரஸ் பழங்கள் : கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்குமா..?

சிட்ரஸ் பழங்கள்

கோவிட்-19 பரவும் காலத்திலும், அதற்குப் பின்னரும் நமக்கு தேவையான வைட்டமின் சி-யை பெறவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தினமும் குறைந்தது 100 கிராம் சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது நல்லது.

  • Share this:
ஆரோக்கியமான வாழ்வு குறித்து பேசுகையில் சத்தான உணவுகள், வழக்கமான உடற்பயிற்சி ஒரு நபருக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. எனவே பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. பொதுவாக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தாலே, தொற்று நோய்கள் நம்மை நெருங்காது. இதற்கு வைட்டமின் சி சிறந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

இதுகுறித்து விளக்கிய நெஃப்ரோபிளஸின் தலைமை உணவியல் நிபுணர் அபேக்ஷா எக்போட், சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாகும் என்கிறார். சிட்ரஸ் பழங்கள் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது நம் இரத்தத்தில் ஃப்ரீரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது.

வைட்டமின் சி எவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்?

எக்போட்டின் கூற்றுப்படி, வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. ஆரஞ்சு, அன்னாசிப்பழம், எலுமிச்சை, கிவி, கொய்யா போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் பருவகாலங்களில் விலை மலிவாக கிடைக்கும் நெல்லிக்காயில் அதிக வைட்டமின் சி உள்ளது. நெல்லிக்காயில் ஆரஞ்சு பழத்தை விட 20 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது என தெரிவிக்கிறார்.



வைட்டமின் சி நம் உடலுக்கு இன்றியமையாதது, ஏனெனில் இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்லுலார் செயல்பாடுகளை ஆதரிக்கிறது. எனவே மேற்கண்ட சிட்ரஸ் பழங்களை நாம் அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால், வலுவான நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக "நமது மனித உடலமைப்பை பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற வடிவங்களில் தாக்கும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

கோவிட் -19 வைரஸ் ஒருவரின் உடலில் நுழைந்தால் நோய் எதிர்ப்பு அமைப்பை பாதித்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வைட்டமின் சி ஆன்டிபாடிகளின் உருவாக்கத்தைத் தூண்ட உதவுகிறது, இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். எனவே தான் கொரோனா அறிகுறிகள் தோன்றிய நபர்கள் அதிக அளவு சிட்ரஸ் நிறைந்த உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. வைட்டமின் சி சிகிச்சையானது நோயாளிகளின் உடல்நிலையை கணிசமாக மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Sapota Health benefits : சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

ஆகையால், கோவிட்-19 பரவும் காலத்திலும், அதற்குப் பின்னரும் நமக்கு தேவையான வைட்டமின் சி-யை பெறவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தினமும் குறைந்தது 100 கிராம் சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது நல்லது" என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரஞ்சு, எலும்பிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி , முலாம்பழம் மற்றும் தர்பூசணி போன்றவற்றையும் அடிக்கடி சாப்பிடுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published: