இரண்டு மாஸ்க் போடுங்க... இனி அதுதான் நம்மை காப்பாற்றும்.. டாக்டர்கள் சொல்வதை கேளுங்க..!

இரண்டு மாஸ்க் போடுங்க... இனி அதுதான் நம்மை காப்பாற்றும்.. டாக்டர்கள் சொல்வதை கேளுங்க..!

மாஸ்க்

எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா (Randeep Gulleria) என் 95 மாஸ்க் அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் அன அறிவுறுத்தியுள்ளார். அந்த மாஸ்க்குகள் கிடைக்காத சமயத்தில் டபுள் மாஸ்கிங்கை அணிவது சிறந்தது எனக் கூறியுள்ளார்

  • Share this:
கொரோனா பரவல் காரணமாக மாஸ்க் அணிவது கட்டாயமாக மாறிவிட்ட நிலையில், அவை இல்லாமல் வெளியே செல்வது குறித்து யோசிக்க வேண்டாம். தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இரட்டை லேயர் கொண்ட மாஸ்க் அணிவது, SARS-CoV-2 வைரஸிடம் இருந்து பாதுகாப்பதாக ஆய்வு ஒன்றில் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பேசிய எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா (Randeep Gulleria) என் 95 மாஸ்க் அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் அன அறிவுறுத்தியுள்ளார். அந்த மாஸ்க்குகள் கிடைக்காத சமயத்தில் டபுள் மாஸ்கிங்கை அணிவது சிறந்தது எனக் கூறியுள்ளார்

என்.95 மாஸ்க் கொரோனா துகள்களை தடுப்பதில் 90 விழுக்காடு பங்காற்றுவதாக தெரிவித்த அவர், சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் துணி மாஸ்க்குகளும் கொரோனா துகள்களை தடுப்பதாக கூறியுள்ளார். மிக முக்கியமாக மாஸ்க்கை சரியான முறையில் அணிய வேண்டும் என மருத்துவர் ரன்தீர் குலேரியா தெரிவித்துள்ளார். காற்று துகள்கள் உங்களின் மூக்கை நேரடியாக அணுகினால், கொரோனா வைரஸ் தொற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், முறையாக மாஸ்க் அணியும்போது, அதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என்றும் குலேரியா கூறியுள்ளார்.



டபுள் மாஸ்க் அவசியம் ஏன்?

JAMA மருத்துவ இதழலில் வெளியாகியுள்ள ஆய்வில், அதிப்படியான லேயர் மாஸ்க்குகளில் சேர்ப்பது மட்டும் கொரோனா துகள்களை கட்டுப்படுத்தாது எனக் கூறியுள்ளது. சரியான அளவு இடைவெளியில் காற்றை சுத்திகரிக்கும்போது மட்டுமே கொரோனா துகள்கள் ஒருவரை தொற்றாது என்றும், அதனை செய்ய தவறும் மாஸ்க்குகளை அணிபவர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாது என்றும் கூறியுள்ளது.

மருத்து ரீதியாக உருவாக்கப்படும் மாஸ்க்குகள் கொரோனாவில் இருந்து பாதுகாப்பதாக தெரிவித்துள்ள ஆய்வு, ஆனால் அவை முகத்துக்கு பொருந்துபவையாக இல்லை எனக் கூறியுள்ளது. அந்த ஆய்வை வெளியிட்ட வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எமிலி சிக்பெர்ட் பென்னட் டபுள் மாஸ்க்குகள் சிறந்தவை எனத் தெரிவித்துள்ளார்.

டபுள் மாஸ்க் எப்படி பாதுகாக்கிறது?

மாஸ்க்குகள் கொரோனா துகள்களில் இருந்து பாதுகாப்பது குறித்து ஆய்வாளர்கள் 10க்கு 10 அறை ஒன்றில் பரிசோதனை நடத்தினர். இதற்காக உப்பு துகள்களை காற்றில் பறக்கவிட்டு, ஆய்வாளர்கள் பல்வேறு வகையான மாஸ்க்குகளை அணிந்து கொண்டனர். அப்போது, சுவாச பகுதிக்கு செல்வதற்கு முன்பு துகள்கள் வடிகட்டுவது குறித்தும், சுவாசப்பகுதியை நெருங்குவதற்காக மாஸ்க்கின் அடிப்பகுதியிலும் துகள்கள் சேர்வதை உண்ணிப்பாக ஆய்வு செய்தனர்.



இந்த ஆய்வின்போது ஆய்வாளர்கள் அன்றாட வேலைகளில் செய்வது, அதாவது கீழே குனிவது, எழுவது, சாய்வது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். அப்போது, மாஸ்க் அணிந்திருப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுவதில் இருந்து 40 முதல் 60 விழுக்காடு பாதுகாக்கப்படுவதை கண்டுபிடித்தனர்.

சர்ஜிக்கல் மாஸ்க் போன்ற உயர்தர மாஸ்க் அணிந்து அதன்மீது மற்றொரு மாஸ்க் அணியும்போது, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுக்காக்கப்படுவது 20 விழுக்காடு கூடுதலாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வாய் மற்றும் மூக்கை சரியாக மூட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எங்கெல்லாம் மாஸ்க் அணிய வேண்டும்?

1. வீட்டை விட்டு வெளியேறும்போது
2. மருத்துவமனை, பள்ளிக்கூடம், மார்க்கெட் போன்ற மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்லும்போது
3. பொதுபோக்குவரத்தில் பயணிக்கும்போது
4. சொந்த வாகனங்களில் பயணிக்கும்போது அணிய வேண்டும்
5. ஓடும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது மாஸ்க் போடத் தேவையில்லை

Fight Coronavirus : சர்ஜிகல் மாஸ்க் Vs ஐந்து அடுக்கு மாஸ்க்..எது சிறந்தது..?

மாஸ்கை சரியாக அணியும் முறை

1.மாஸ்க்கை சுத்தமான கைகளில் தொட வேண்டும். மாஸ்க் எடுப்பதற்கு முன்பு கைகளில் நன்கு கழுவ வேண்டும்
2.நெற்றி அல்லது கழுத்து பகுதிகளில் இருக்குமாறு மாஸ்க் அணியக்கூடாது
3.மாஸ்க் அணியும்போது சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
4.வீட்டிற்கு சென்றவுடன் மாஸ்கை கழட்டிவிடலாம்
5. ஒவ்வொரு முறை மாஸ்க் பயன்படுத்துவதற்கு முன்பு, அதனை சுத்தப்படுத்த வேண்டும்



மாஸ்க்கை கவனமாக அப்புறப்படுத்துதல்

மாஸ்க் அணிவதில் இருக்கும் அக்கறை, அதனை கவனமாக அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும். பல இடங்களில் கவனக்குறைவாக தூக்கியெறியப்படும் மாஸ்க்குகளும், கிளவுஸ் மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு கவசங்கள் கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதற்கு காரணமாக அமைக்கின்றன.

மேலும், விலங்குகள், பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கின்றன. இதனால், பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் மாஸ்க்குகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். பாதுகாப்பு கவசங்களுக்காக உருவாக்கப்படும் மெடிக்கல் முகக் கவசங்களில் இருக்கும் பொருட்கள் முறையாக சிதைவதற்கு 450 ஆண்டுகள் ஆகும் என கூறும் சுற்றுச்சூழல் நிபுணர்கள், முறையாக அதனை மறுசுழற்சி செய்ய அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



மாஸ்க் கட்டாயம் ஏன்?

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை அண்மைக்காலமாக பார்த்து வருகிறோம். தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும் என மருத்துவர்கள் கூறிவருகின்றனர். கொரோனாவை ஒழிக்க முழுமையான மருத்து இதுவரை கண்டுபிடிக்கப்படாததால், முன்னெச்சரிக்கை மற்றும் தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கை மட்டுமே சிறந்த ஆயுதமாக பார்க்கப்படுகிறது.

அதனால் மாஸ்க் அணிவதை கட்டாயமாக அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுவருவதையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published: