• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கர்ப்பகாலத்தில் கொரோனா பாதிப்பு குறைப்பிரசவத்திற்கான வாய்ப்பை 60% அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்!

கர்ப்பகாலத்தில் கொரோனா பாதிப்பு குறைப்பிரசவத்திற்கான வாய்ப்பை 60% அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்!

கொரோனா

கொரோனா

குறைப்பிரசவ பிறப்பு ஒரு குழந்தைக்கு அறிவாற்றல் பிரச்சினைகள், பெருமூளை வாதம் மற்றும் வளர்ச்சியடையாத உறுப்புகள் உட்பட பல நீண்ட மற்றும் குறுகிய கால எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

  • Share this:
கர்ப்ப காலத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அது குறைப்பிரசவத்திற்கான அபாயத்தை 60 சதவிகிதம் அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா-சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் பெறும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 37 வாரங்கள் அல்லது அதற்கு முன்பே குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்று டெய்லி மெயிலில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியப் பெண்களும் (240 சதவிகித பெண்களுக்கு குறைப்பிரசவம் ஆக அதிக வாய்ப்புள்ளது) மற்றும் அமெரிக்க இந்தியப் பெண்களும் (170 சதவிகித பெண்களுக்கு குறைப்பிரசவம் ஆக வாய்ப்புள்ளது) குறைப்பிரசவத்தை அனுபவிக்க வாய்ப்புள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸ் குறைப்பிரசவ பாதிப்பை ஏன் ஏற்படுத்துகிறது என்பதற்கான உயிரியல் காரணம் குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை. தி லான்செட் ரீஜினல் ஹெல்த் அமைப்பால் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், 2020ம் ஆண்டு ஜூலை முதல் 2021ம் ஆண்டு ஜனவரி வரை சுமார் 240,000-க்கும் அதிகமான பிரசவங்கள் நிகழ்ந்ததாக தரவுகள் வெளியானது.

அதில் ஏறக்குறைய 9,000 பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். மீதமுள்ளவர்கள் ஒரு கட்டுப்பாட்டு குழுவை உருவாக்கியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்த சில கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவமும் நிகழ்ந்தது. இதில் ஒரு குழந்தை 32 வாரங்களுக்குள் பிறந்தது. இந்த நிலையில் கோவிட் நோய்த்தொற்றுக்குப் பிறகு ப்ரீமெச்சூர் அல்லது குறைப்பிரசவத்தின் ஆபத்து 10 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



அதிலும் நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகிய பிரச்சனைகள் இருக்கும் கர்ப்பிணிகளின் குறைப்பிரசவ அபாயத்தை அதிகரித்தன. குறைப்பிரசவ பிறப்பு ஒரு குழந்தைக்கு அறிவாற்றல் பிரச்சினைகள், பெருமூளை வாதம் மற்றும் வளர்ச்சியடையாத உறுப்புகள் உட்பட பல நீண்ட மற்றும் குறுகிய கால எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, குறைப்பிரசவத்தை தடுக்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு மருத்துவர்கள் குழு வலியுறுத்தி வருகிறது.

கர்ப்பிணிகள் குங்குமப்பூவை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா ?

பெரும்பாலான நாடுகளில் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) பரிந்துரைகளின் அடிப்படையில், COVID-19 க்கு எதிராக கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து விருப்பமுள்ள கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



இதனிடையே உலகம் முழுவதும் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் மற்றும் குறைந்த தடுப்பூசி விகிதங்கள் குறித்த கவலையை சுட்டிக்காட்டியுள்ள 2 முன்னணி மகப்பேறியல் நிபுணர் குழுக்கள் அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் கோவிட் -19 தடுப்பூசியை போட்டு கொள்ள பரிந்துரைத்துள்ளன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: