தொற்றினால் உருவாகும் ஆன்டிபாடிக்கும் தடுப்பூசியினால் உருவாகும் ஆன்டிபாடிக்கும் என்ன வித்தியாசம் ?

கொரோனா

ஒருவர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும்போது அவரது உடல் ஆன்டிபாடிஸை உருவாக்கி வைரஸ்க்கு எதிராக வினைபுரியும். ஆனால் அது உடனடியாக வைரஸ்க்கு எதிராக போராடாது.

  • Share this:
பொதுவாக ஒருவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் ஆன்டிபாடிஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி தோன்றி அந்த நோய்க்கு எதிராக போராடும். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ஆன்டிபாடி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அது நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை அறிந்துகொள்ள உதவுகிறது.

மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அவர்களுக்கு ஆன்டிபாடிஸ் தன்மையை அறிந்து கொண்டு அவர்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை அறியமுடியும். அதாவது தடுப்பூசி நன்றாக செயல்படுகிறதா? என்பதை இதன் மூலம் அறிய முடியும்.

ஆன்டிபாடிஸ் என்பது நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் புரோட்டின். இவை நமது உடல் ஒருமுறை நோயினால் பாதிக்கப்படும் போது ஆன்டிபாடிஸ் தோன்றும். பின்னர் அது மெமரி செல்களாக மாறி, பிற்காலத்தில் அந்த நோய் நமது உடலில் தோன்றினால் அந்த நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும். அல்லது நமது உடலுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் இந்த ஆன்டிபாடிஸ் தோன்றும்.நோய் பாதிப்பினால் உருவாகும் ஆன்டிபாடிஸ்

நம் உடலில் உள்ள பி செல்கள் பல்வேறு பாகங்களில் ஏற்படும் நோய் தொற்று எதிராக ஆன்டிபாடியை உருவாக்கும். அதில் சிலது முழுமையாக பாதிப்பில் இருந்து காக்கும். சில ஆன்டிபாடி பாதிப்பில் இருந்து காக்க தவறலாம். ஒரு முறை கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால் உடலில் உருவாகும் ஆன்டிபாடிஸ் நம்மை எவ்வளவு நாள் பாதுகாக்கும் என்று சொல்ல முடியாது. இன்னும் மருத்துவர்களுக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. ஆனால் இந்த ஆன்டிபாடிஸ் காரணமாக ஒரு நோய் மனிதரை தாக்கினால் அவருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது என்பது தான் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.தடுப்பு மருந்துகள் மூலம் உருவாகும் ஆன்டிபாடிஸ்

வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், அந்த வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி, அந்த வைரஸினால் அவர் பாதிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படும். அதாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அந்த குறிப்பிட்ட வைரஸிற்கு எதராக பி செல்ஸை உருவாக்கி அதனால் அவர் பாதிக்கப்படுவது முன்கூட்டியே தடுக்கப்படும்.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் சிலருக்கு ஏன் நெஞ்சு வலி வருகிறது..?

வைரஸினால் உருவாகும் ஆன்டிபாடிஸ்க்கும், தடுப்பூசியினால் உருவாகும் ஆண்டிபாடிஸ்க்கும் உள்ள வித்தியாசம் :

அதாவது ஒருவர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும்போது அவரது உடல் ஆன்டிபாடிஸை உருவாக்கி வைரஸ்க்கு எதிராக வினைபுரியும். ஆனால் அது உடனடியாக வைரஸ்க்கு எதிராக போராடாது.தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஓரிரு வாரங்களில் அந்த வைரஸ் தொற்றை அறிந்து கொண்டு செயலாற்றும். ஒரு வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அந்த வைரஸ்க்கு எதிராக சரியான ஆன்டிபாடிஸை உருவாக்கி வினைபுரியும். ஆனால் இதனை ஒப்பிட முடியாது. மேலும் எந்த தடுப்பூசி எப்படி செயல்படும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வது என்பது அத்தியாவசியமானது.

 
Published by:Sivaranjani E
First published: