• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா 2-ம் அலையால் கர்ப்பிணி பெண்கள், புதிய தாய்மார்களின் பாதிப்பு இரட்டிப்பானது : ICMR அறிக்கை

கொரோனா 2-ம் அலையால் கர்ப்பிணி பெண்கள், புதிய தாய்மார்களின் பாதிப்பு இரட்டிப்பானது : ICMR அறிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும்போது கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான கொரோனா வைரஸ் தொடர்பான சிக்கல்களுக்கு பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

  • Share this:
இந்தியாவில் முதல் இரண்டு கோவிட் -19 அலைகளின் பாதிப்பு தொடர்பாக ICMR நடத்திய ஒப்பீட்டு ஆய்வில், முதல் அலையை விட இரண்டாம் அலையில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலைகளின் போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடையே பாதிப்பு 14.2 சதவிகிதமாக இருந்தது.

அதுவே, இரண்டாவது அலையின் போது 28.7 சதவீதமாக அதிகரித்திருந்தது. அதேபோல இரண்டாம் அலையின் போது கர்ப்பிணிப் பெண்களிடையே இறப்பு விகிதம் 5.7 சதவீதமாக இருந்தது. முதல் அலைகளில் 0.7 சதவீதத்துடன் ஒப்பிடும்போது பலமடங்கு அதிகம் என ​​ICMR ஆய்வில் தெரியவந்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையின்படி, கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடையே தடுப்பூசியின் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், மருத்துவ பரிசோதனைகளின் தரவு இல்லாததால் அத்தகைய பெண்களுக்கு தடுப்பூசி போட அரசாங்கம் இன்னும் அனுமதிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக, இரண்டு அலைகளின் போதும் 2% கர்ப்பிணிகளின் இறப்பு மதிப்பிடப்பட்டன.



இதற்கிடையில், கடந்த வாரம் வெளியான ஒரு அறிக்கையில் முன்னுரிமை அடிப்படையில் கர்ப்பிணிகளுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என ஒரு வலுவான கருத்தை வலியுறுத்தியது. ஏற்கனவே தாய் மற்றும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தை இறப்புகளின் அதிகரித்த தன்மை மேலும் அதிகரிக்காமல் இருக்க கொரோனா தடுப்பூசிக்கு போடுவதற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய குழுவாக கர்ப்பிணிப் பெண்களைச் சேர்க்க வேண்டும் என ஒரு வலுவான கருத்து உருவாகியுள்ளது. யாமினி சர்வால் தலைமையிலான மருத்துவர்கள் குழு தயாரித்த அறிக்கையை டெல்லியைச் சேர்ந்த வர்த்மான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

Pregnancy Care : கர்ப்பிணிப் பெண்கள் பூண்டு சாப்பிட்டால் இத்தனை பக்கவிளைவுகளா..? 

அதில், "அனைத்து நாடுகளிலும் பிறப்புக்கு முந்தைய பராமரிப்புக்கான வழக்கமான நெறிமுறையில் கோவிட் -19 தடுப்பூசி சேர்க்க பரிந்துரைக்கிறோம். குறிப்பாக இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் அதிக இரட்டைச் சுமையைக் கருத்தில் கொண்டு இது பரிந்துரைக்கப்படுகிறது," என்று அறிக்கை கூறியுள்ளது. தற்போது, ​​கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி விநியோகம் செய்யப்படுவதில்லை.

அதேபோல தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முடிவினை அவர்களிடமே விட்டுவிட்டால் கொள்கைகள் தெளிவற்றதாக இருக்கும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. கோவிட் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய சான்றுகள் இப்போது அதிகமாக வெளிவருகின்றன. எனவே இது புதிதாகப் பிறந்தவருக்கு பாதுகாப்பை வழங்கும் என்ற நன்மைகளுடன், தடுப்பூசி கட்டாயம் போடுவதற்கான முன்னுரிமை குழுவில் கர்ப்பிணிப் பெண்களையும் சேர்க்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும்போது கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான கொரோனா வைரஸ் தொடர்பான சிக்கல்களுக்கு பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக அறியப்படுவதால், அத்தகைய பெண்களைப் பாதுகாப்பதில் இருக்கும் பிரச்சனையை கவனிப்பது முக்கியமானது. கடுமையான கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி நம்பகமான பாதுகாப்பு வழங்கும் என்று அறிக்கை குறிப்பிட்டது. கொரோனா அதிகம் பாதித்த முதல் 20 நாடுகளில், சுமார் ஒன்பது நாடுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்கின்றன. அவற்றில் இரண்டு நாடுகள் முன்னுரிமை முறையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுகின்றன.

இதற்கு நேர்மாறாக, அதிக கொரோனா இறப்பு பதிவான முதல் 20 நாடுகளில் நான்கு நாடுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்கின்றன. அதே நேரத்தில் யாரும் முன்னுரிமைக் குழுவில் சேர்க்கப்படவில்லை. உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்ட இந்தியா மற்றும் இந்தோனேசியா இந்த இரு குழுக்களிலும் அடங்கும். ஆனால் தடுப்பூசிக்கு கர்ப்பிணிப் பெண்களை சேர்க்க வேண்டாம் என்று அவை வலியுறுத்தியுள்ளன. கோவிட் -19 க்கு எதிராக கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: