Home /News /lifestyle /

கொரோனா வைரஸ் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தின் அளவை கடுமையாக அதிகரிக்கலாம்: ஆய்வில் தகவல்!

கொரோனா வைரஸ் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தின் அளவை கடுமையாக அதிகரிக்கலாம்: ஆய்வில் தகவல்!

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்

பொதுவாக, வயதானவர்களுக்கு ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் மிக அதிகமான உடலியல் ஆக்ஸிஜனேற்றியான குளுதாதயோனின் அளவில் கணிசமான குறைவு ஏற்பட்டிருப்பதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தமானது ஃப்ரீ ரேடிக்கல்கள், செல்கள், சவ்வுகள், லிப்பிடுகள், புரதங்கள் மற்றும் டிஎன்ஏவை சேதப்படுத்தும் அதிக எதிர்வினை மூலக்கூறு திரட்சியின் விளைவால் ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள குளுதாதயோனை உருவாக்குகின்றன. ஆனால், செல்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கத் தவறினால், தீங்கு விளைவிக்கும் செல்லுலார் சேதம் ஏற்படலாம் மற்றும் பல உடலியல் செயல்முறைகளை பாதிக்கலாம்.

பொதுவாக, வயதானவர்களுக்கு ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கோவிட் தொற்று உள்ள இளைஞர்களுக்கும் கூட இந்த நிலை ஏற்படலாம் என்பதை விளக்கியுள்ளது.



இதுகுறித்து பெய்லர் மருத்துவக் கல்லூரியில் உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்தின் பிரிவு ஆசிரியரான டாக்டர் ராஜகோபால் சேகர் கூறியதாவது, "அதிகரித்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் குறைக்கப்பட்ட குளுதாதயோன் அளவுகள் முதுமை, நீரிழிவு நோய், எச்.ஐ.வி தொற்று, நரம்பியக்கடத்தல் கோளாறுகள், இருதய கோளாறுகள், நரம்பு மண்டல நோய்கள், உடல் பருமன் மற்றும் பிற நிலைமைகளுடன் தொடர்புடையது" என்று தெரிவித்துள்ளார்.

"இந்த நிலையில் கோவிட்-19 ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குளுதாதயோனையும் பாதிக்கக்கூடும் என்று நாங்கள் சந்தேகித்தோம். மேலும் இந்த ஆய்வில் கோவிட்-19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியவர்களிடம் இந்த குறைபாடு ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினோம். இந்த குறைபாடுகள் இளைஞர்கள் உட்பட அனைத்து வயதினரிலும் ஏற்படுவதையும், அவர்களின் வயது அதிகரிக்கும்போது இந்த விளைவு மோசமடைவதையும் நாங்கள் கண்டறிந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆயில் பங்கேற்ற குழுவில் 60 பேர் இருந்தனர். அதில், 21 முதல் 85 வயது கொண்ட 25 பெண்கள், 35 ஆண்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கொரோனா நோயறிதலின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த நோயாளிகளின் இரத்த மாதிரிகளில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் குளுதாதயோன் ஆகியவற்றின் அளவை அளந்து, ஆரோக்கியமான நபர்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தனர்.

Rewind 2021 : 2021 ஆண்டை பாதித்த கொரோனாவின் பக்கவிளைவுகள்… இதிலிருந்து மீளும் வழிகள் என்ன?

மேலும் இது குறித்து பேசிய சேகர், "21 முதல் 40 மற்றும் 41 முதல் 60 வயதுடைய குழுக்களில் உள்ள கொரோனா நோயாளிகள் கோவிட் -19 பாதிப்பு இல்லாத வயதினரை விட குளுதாதயோன் மற்றும் அதிக ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கொண்டிருப்பதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்," என்று கூறினார்.



இது ஒரு முக்கியமான புதிய கண்டுபிடிப்பு ஆகும். “கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளையவர்களும் குளுதாதயோன் குறைபாடு மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதைக் கண்டறிவது உண்மையில் ஆச்சரியமளிக்கிறது. ஏனென்றால் எந்த பாதிப்பும் இல்லாத இளைய வயதினரில் இந்த குறைபாடுகளை நாம் பொதுவாக பார்க்கமுடியாது. இந்த குறைபாடுகள் வயது அதிகரிக்கும்போது படிப்படியாக மோசமாகி வரும். மேலும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட மூத்த நோயாளிகள் இந்த விளைவுகளில் அதிக அளவு குறைபாடுகளைக் சந்திக்கின்றனர்.

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலீவீனமாக இருப்பதை எப்படி கண்டறிவது..? இந்த அறிகுறிகளை கவனியுங்கள்

இந்த மாற்றங்கள் ஒருவரை நோயில் ஈடுபடுத்தும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகளில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்க, அவர்களில் குளுதாதயோனை அதிகரிப்பது மற்றும் வீக்கம் போன்ற ஆரோக்கிய குறிகாட்டிகளை மேம்படுத்துவது போன்றவை அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus, Covid-19, Omicron

அடுத்த செய்தி