Coronavirus : மூளையை பாதிக்கும் கோவிட் 19 : ஜெர்மனி ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!

மூளையை பாதிக்கும் கொரோனா

தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதற்கு முக்கிய காரணம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் கூடுதல் பயத்தை ஏற்படுத்தியுள்ளன.

  • Share this:
braகோவிட் 19 வைரஸ் மூளையில் இருக்கும் செல்களை பாதிப்பதாக ஜெர்மனி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சார்ஸ் கோவிட் 2 பாதிப்பை கட்டுப்படுத்த இன்னும் முழுமையான மருந்துகளும், தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் கோவிட் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துபவையாகவும், அதன் தீவிரத்தை குறைக்கும் ஆற்றலை மட்டுமே கொண்டுள்ளன. தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதற்கு முக்கிய காரணம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் கூடுதல் பயத்தை ஏற்படுத்தியுள்ளன.

நீரிழிவு, இதய நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பரவினால் உயிரிழப்பைக் கூட சந்திக்கின்றன. உலகளவில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணத்தில் பெரும்பாலானோர் ஏற்கனவே இத்தகைய பாதிப்பு இருந்தவர்களாக உள்ளனர். அதேநேரத்தில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அது வீரிய நிலையை அடைந்து, அதிலிருந்து மீண்டு வந்தவர்களும் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவதும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நுரையீரல் பாதிப்பு, வாயுத்தொல்லை, இதயப் பிரச்சனை ஆகியவையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கொரோனா செல்கள் மூளையையும் பாதிப்பதாக ஜெர்மனி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள ஃப்ரீபர்க் (Freiburg) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மத்திய நரம்பு மண்டலத்தை கோவிட் தொற்று கடுமையாக பாதிப்பதும், வாஸ்குலர் அமைப்பைச் சுற்றியுள்ள மற்றும் மூளை திசுக்களில் வெவ்வேறு நோயெதிர்ப்பு உயிரணுக்களை உள்ளடக்கிய கடுமையாக அழற்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய ஆய்வில் பங்கேற்ற மருத்துவ இதழ் எழுத்தாளர் ஹென்றிக் சாலி, கொரோனா தொற்று மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் சான்றுகள் ஏற்கனவே இருப்பதாகவும், ஆனால் மூளை செல்களை பாதித்து வீக்கத்தை அதிகரிப்பது தங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Coronavirus vaccination : தடுப்பூசிக்கும் மாரடைப்பிற்கும் தொடர்பு உண்டா..? இளைஞர்களை குறிவைக்கும் மயோர்கார்டிடிஸ் நோய்க்கு தடுப்பூசிதான் காரணமா?

பேராசிரியர் மரியஸ் ஸ்வாபெண்லான்ட் பேசும்போது, கோவிட் தொற்று பாதிப்புக்குள்ளாகி, மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூளையை பரிசோதித்து பார்த்தபோது அங்கிருந்த முடிச்சுகள் ஆரோக்கியமான மூளைகளில் காண முடியாது எனத் தெரிவித்தார். இந்த ஆய்வுக்கு அவர்கள் சைட்டோமெட்ரி இமேஜிங் முறையை அவர்கள் பின்பற்றினர். வெவ்வேறு உயிரணு வகைகள், பாதிக்கப்பட்ட செல்கள் மற்றும் அவை தொடர்புள்ள இடங்கள் என பலதரப்பட்ட முனைகளில் மேற்கொண்ட ஆய்வில் ஆய்வாளர்கள் இதனை உறுதி செய்துள்ளனர்.Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூளையின் அத்தியாவசிய பாதுகாப்பு செல்களாக கருத்தப்படும் மைக்ரோக்ளியல் செல்கள் வலுவாக செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், டி- கில்லர் உயிரணுக்கள் இடம்பெயர்வு மற்றும் மூளைத் தண்டுகளில் உருவாகும் நியூரோ அழற்சியின் வளர்ச்சியையும் கவனித்ததாக தெரிவித்துள்ளனர். அங்குள்ள நோயெதிர்ப்பு செல்கள் பாதிப்புக்குள்ளாகி, மத்திய நரம்பு மண்டலத்தையும் பாதிப்பதாகவும், முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் இம்யூனோசப்ரசிவ் (immunosuppressive) சிகிச்சையின் மூலம் இதனை தடுக்கலாம் என விளக்கம் அளித்துள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published: