Home /News /lifestyle /

கோவிட் -19 தொற்று ஐம்புலன்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறதா? - ஆய்வுகளில் வெளியான தகவல்!

கோவிட் -19 தொற்று ஐம்புலன்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறதா? - ஆய்வுகளில் வெளியான தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

கோவிட் -19 நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வாசனை மற்றும் சுவை உணர்வு இழப்பை மட்டுமல்ல, மனிதர்கள் இந்த உலகை உணர உதவும் அனைத்து வழிகளையும் பாதிக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் லேசான, மிதமான மற்றும் கடுமையான அறிகுறிகளை காட்டுகின்றனர். ஒரு சிலருக்கு அறிகுறிகள் ஏதுமின்றி தொற்று பாதிப்புகள் ஏற்படுகிறது. காய்ச்சல், சோர்வு, தொடர் இருமல் உள்ளிட்ட பல கொரோனாவின் சில பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், சில நேரங்களில் ஒருவருக்கு திடீரென்று ஏற்படும் வாசனை மற்றும் சுவை உணர்வு இழப்பு கோவிட்-19 தொற்றை உறுதி செய்கிறது.

இதனிடையே கோவிட் -19 நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வாசனை மற்றும் சுவை உணர்வு இழப்பை மட்டுமல்ல, மனிதர்கள் இந்த உலகை உணர உதவும் அனைத்து வழிகளையும் பாதிக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நேஷனல் ஜியோகிராஃபிக் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தொற்றிலிருந்து குணமடைந்த பலர் தொடர்ந்து கேட்கும் திறன் இழப்பை அனுபவித்தனர். இந்த இழப்பு மிதமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஆடியோலஜி மார்ச் மாத இதழில், கோவிட்-19 அறிகுறிகளின் பிற அறிக்கைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் மதிப்பாய்வு செய்தனர்.

இதன் முடிவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 8% நோயாளிகளுக்கு காது கேளாமை தொடர்பான சிக்கல் ஏற்பட்டதாக கூறினர். தவிர சுமார் 15% பேர் தங்கள் காதுகளில் ரீங்கார ஒலி கேட்பது போன்ற உணர்வுகளை எதிர்கொண்டனர். அதே போல கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சிலர் தங்களது பார்வை திறனில் சிக்கல்களை எதிர் கொள்வதாக கூறி இருக்கிறார்கள். BMJ Open Ophthalmology-ல் கடந்த ஆண்டு வெளியான ஒரு ஆய்வு முடிவில், கோவிட் நோயாளிகள் கண் தொடர்பாக அனுபவிக்கும் மிகவும் பொதுவான கோளாறுகளில் ஒளி உணர்திறன், மங்கலான பார்வை, கண்கள் சிவப்பாக மாறுவது உள்ளிட்டவை இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.



மேலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 400 கோவிட் -19 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், சுமார் 10% நோயாளிகளுக்கு வெண்படலம், பார்வை மாற்றங்கள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட கண் சார்ந்த கோளாறுகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் என்றும் நேஷனல் ஜியோகிராஃபிக்கின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து நரம்பியல் பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை கோவிட் தொற்று ஏற்படுத்துவதால், மேற்கண்ட பாதிப்புகள் தவிர தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தொடு உணர்வும் பாதிக்கப்படலாம் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் உண்மையானதா அல்லது போலியா? எப்படி சரிபார்ப்பது!

சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட இது தொடர்பான ஆய்வில் சுமார் 100 பேரை ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்த போது அவர்களில் சுமார் 60% பேருக்கு மரத்து போதல் மற்றும் கூச்ச உணர்வு உள்ளிட்டவை காணப்பட்டன. இவ்வுணர்வுகள் அவர்களுக்கு 6 முதல் 9 மாதங்கள் வரை நீடித்துள்ளது. இதன் மூலம் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பார்வை, வாசனை, சுவை, தொடுதல் மற்றும் கேட்கும் உணர்வை இழந்ததாக தெரிவித்துள்ளனர் என்று நேஷனல் ஜியோகிராஃபிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus Symptoms, Covid-19, News On Instagram, Post Corona Symptoms

அடுத்த செய்தி