ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

திருமணம் செய்வதற்கு முன் HIV டெஸ்டை விட இந்த டெஸ்டுகள்தான் ரொம்ப முக்கியம்... மறக்காம எடுத்துடுங்க..!

திருமணம் செய்வதற்கு முன் HIV டெஸ்டை விட இந்த டெஸ்டுகள்தான் ரொம்ப முக்கியம்... மறக்காம எடுத்துடுங்க..!

தம்பதிகள் எடுக்க வேண்டிய டெஸ்ட்

தம்பதிகள் எடுக்க வேண்டிய டெஸ்ட்

பெரும்பாலும் இந்திய திருமண கலாச்சாரத்தில் ஜாதகப் பொருத்தம் சிறப்பாக உள்ளதா என்பதைதான் முதலில் பார்ப்பார்கள். ஆனால் இருவருக்குமான ஆரோக்கிய பொருத்தம் எப்படி உள்ளது என்பதை பார்ப்பதே அவர்களின் எதிர்கால வாழ்க்கை ஆரோக்கியமாகவும் , சிறப்பாகவும் இருக்கும்

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திருமணத்திற்கு முன் உடல் பரிசோதனை செய்துகொள்வது என்பது சந்தேகத்திற்கான விஷயம் அல்ல... அவ்வாறு செய்துகொள்வதால் எதிர்காலத்தில் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழலாம் என்பதற்காகவே எடுக்கப்படுகிறது. அதாவது உங்களுக்கு மரபணு ரீதியாக ஏதேனும் பாதிப்பு இருக்கிறது எனில் அது உங்கள் எதிர்கால குழந்தைக்கும் வராமல் தடுக்கலாம்.

  அதற்கு மருத்துவ ரீதியாக ஏதேனும் சாத்தியக்கூறுகள் இருந்தால் அந்த வழிமுறைகளை கையாள உதவியாக இருக்கும். எனவேதான் திருமணத்திற்கு முன் ஆண், பெண் இருவரும் உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

  பெரும்பாலும் இந்திய திருமண கலாச்சாரத்தில் ஜாதகப் பொருத்தம் சிறப்பாக உள்ளதா என்பதைதான் முதலில் பார்ப்பார்கள். ஆனால் இருவருக்குமான ஆரோக்கிய பொருத்தம் எப்படி உள்ளது என்பதை பார்ப்பதே அவர்களின் எதிர்கால வாழ்க்கை ஆரோக்கியமாகவும் , சிறப்பாகவும் இருக்கும் என்கிறார் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்த அப்போலோ மகப்பேறு மருத்துவர் கிருதி நஹார்.

  தம்பதிகள் திருமணத்திற்கு முன் கருவுறுதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசோதனை செய்துகொள்வது அவசியம். 30 வயதுக்குப் பின் பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி குறையும் என்பதால் அவர்கள் திருமணத்திற்கு பின் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் ஆண்கள் விந்தணு ஆரோக்கியம் மற்றும் விந்தணு எண்ணிக்கை குறித்து தெரிந்துகொள்வதும் அவசியம். இதனால் எதிர்காலத்தில் குழந்தையின்மை பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

  குழந்தைகள் மரபணு காரணத்தால் thalassemia and sickle cell anemia போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்ற நோய் பாதிப்புகள் வருமா என்பது குறித்தும் மரபணு பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம். அப்படி சாத்தியங்கள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைபடி சில சிகிச்சைகள், முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வசதியாக இருக்கும்.

  Also Read :  ஆண்கள் காதல் உறவில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருக்க என்ன காரணம்..?

  சிறு வயதில் அல்லது கடந்த காலத்தில் நீங்கள் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் குணமடைந்திருந்தால் அதன் தற்போதைய நிலை குறித்து தெரிந்துகொள்வதும் நல்லது. ஏனெனில் அது சைலண்ட் கில்லர் போல் காத்திருந்து எதிர்காலத்தில் தாக்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கலாம். அது பிறக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கலாம். எனவே குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகள் இதையும் பரிசோதனை செய்து தெரிந்துகொள்வது நல்லது.

  தலசீமியா போன்ற பரம்பரை நோய் தாக்கத்தை பரிசோதனை செய்யுங்கள். உங்களுக்கு எதிர்காலத்தில் மரபணு நோய்களின் தாக்கம் இருக்குமா, அதற்கான சாத்தியங்கள் உள்ளனவா, அதன் அறிகுறிகளை இப்போதே அனுபவிக்கிறீர்களா என்பன போன்ற விஷயங்களை தெரிந்துகொள்வதும் அவசியம். குறிப்பாக எச்.ஐ.வி, எஸ்.டி.டி மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற தொற்று நோய்களைப் பரிசோதிக்கவும் மற்றும் இனப்பெருக்க சுகாதார நிலையை பரிசோதிப்பதும் நல்லது.

  சிலருக்கு இரத்த வகை ஒன்றிப்போகவில்லை என்றாலும் குழந்தை பிறப்பதில் சிரமம் இருக்கும். எனவே இருவரின் இரத்த வகை பொருத்தத்தை சொல்லும் Rh factor பரிசோதனை அவசியம்.

  இறுதியாக பாலியல் தொற்று நோய் பரிசோதனையும் அவசியம் எடுப்பது நல்லது. STD நோய்களான HIV/AIDS, gonorrhoea, herpes, syphilis and hepatitis C போன்றவை உள்ளனவா என்பதை தெரிந்துகொள்வது நல்லது. ஏனெனில் இது ஒருவருக்கு இருந்தாலும் துணையும் பாதிக்கப்படுவார்கள்.

  Also Read :  மனதளவில் உறுதியற்ற நபருடன் வாழ்வதை விட பிரிவதே நல்லதா..? உளவியல் ஆலோசனை..!

  அதேபோல் இருவரில் யாருக்கேனும் அடிக்கடி வைரல் தொற்று பாதிப்பு வரும் என்றாலும் அதைப்பற்றி தெரிந்துகொள்வதும் நல்லது. உதாரணத்திற்கு, அம்மை நோய், ருபெல்லா போன்ற பாதிப்பு வரும் என்றாலும் அதை தெரியப்படுத்தவும். ஏனெனில் இதுவும் காற்று மற்றும் உடமைகள் மூலம் பரவும். குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் கருவையே பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானது.

  எனவே திருமத்திற்கு முன் அவர்களின் சொத்து மதிப்பு, வேலை, ஜாதகப் பொருத்தம் இவற்றை தெரிந்துகொள்வதை விட தம்பதிகளாக நீண்ட கால ஆயுளுடன் வாழ

  • இரத்தப் பிரிவு பரிசோதனை
  • கறுவுறுதல் பரிசோதனை
  • மரபணு கோளாறு பரிசோதனை
  • ஹெச் ஐ.வி மற்றும் பாலியல் தொற்று பரிசோதனை
  • மன ஆரோக்கிய பரிசோதனை
  • நாள்பட்ட நோய், பரம்பரை நோய் பரிசோதனை

  ஆகிய பரிசோதனைகளை ஆண், பெண் இருவரும் எடுப்பது நல்லது என்கிறார் மருத்துவர் நஹார்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Body Checkup, DNA Test, Marriage