Home /News /lifestyle /

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சளி, இருமல் வராமல் இருக்க செய்யவேண்டியவை… செய்யக்கூடாதவை!

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சளி, இருமல் வராமல் இருக்க செய்யவேண்டியவை… செய்யக்கூடாதவை!

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

இந்த காலகட்டத்தில் ஐஸ்கிரீம் போன்ற எந்த குளிர் உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

குளிர்காலமும், மழைக்காலமும் ஆரம்பானதும், அதன்கூடவே தொற்று ஏற்படும் அபாயங்களும் தொடங்கிவிடும். இந்த குளிர் சீசனில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். பெரியவர்கள் ஓரளவு சமாளித்து விடலாம். ஆனால் குழந்தைகளை பெற்றோர்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் எளிதில் சளி மற்றும் இருமல் போன்ற நோய்தொற்றுகளுக்கு பாதிப்படைகின்றனர்.

எனவே, ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும், அவர்களை கவனிப்பதும் அவசியமானதாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் ஐஸ்கிரீம் போன்ற எந்த குளிர் உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக முக்கியமானது மற்றும் குளிர்காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நாம் செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்களும் சில இருக்கின்றன. அவை என்ன என்பது குறித்து பின்வருமாறு காண்போம்.

குளிர்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க செய்யவேண்டியவை:

1. குளிர் தாங்கும் ஆடைகள்:

குளிர் காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கான குளிர் தாங்கும் ஆடைகள் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குளிர் பனி மற்றும் உறைபனியை ஏற்படுத்தும். உங்கள் பிள்ளைக்கு பல அடுக்கு ஆடைகளை போட்டுவிடுவதை உறுதி செய்வதோடு, அவர்களின் காதுகள், தலைகள், கழுத்து மற்றும் கைகள் ஆகியவை துணியால் மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

2. வீட்டின் கதவுகளை மூடி வைக்கவும்

குளிர் காலங்களில் பனி காற்று வீட்டிற்குள் நுழையும் என்பதால் மாலை நேரங்களில் வீட்டின் கதவுகளை பூட்டி வையுங்கள். வெப்பநிலை குறைவதால் உங்கள் பிள்ளை நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும். எனவே, உங்கள் குழந்தைகளை காலையில் சூரிய ஒளியில் விளையாட அனுமதிப்பதும், மாலை நேரங்களில் உங்கள் குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்காமல் இருப்பதும் நல்லது.



3. மூக்கில் இரத்தம் வருவதை தவிர்க்கவும்

குளிர் வறட்சியால் குழந்தையின் மூக்கிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தவிர்க்க அவர்களின் அறையில் குளிர்-காற்று ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துவது நல்லது. சலைன் மூக்கு சொட்டுகள் மூக்கில் ஈரப்பதத்தை வைத்திருக்கவும், மூக்கில் இரத்தம் வராமல் இருக்கவும் உதவுகிறது.

கைக்குழந்தை காரணமே இல்லாமல் அழுகிறது எனில் உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?
 4. சிட்ரஸ் பழங்களை கொடுக்க வேண்டும்

 

சிட்ரஸ் பழங்களை உங்கள் குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு சாறு செல் சேதத்தைத் தடுக்கவும், சளியை மெலிக்கவும் உதவுகிறது. இருப்பினும், வெதுவெதுப்பான நீரில் பழ ஜூஸை தயார் செய்து கொடுக்க வேண்டும். இது ஒரு வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படலாம்.

5. ஓமம் தண்ணீர்

ஓமம் கலந்த தண்ணீர் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது மற்றும் மார்பில் உள்ள நெரிசலை நீக்குகிறது. இதனை உங்கள் குழந்தைக்கு சீரான இடைவெளியில் கொடுக்கலாம். இதனை தயார் செய்ய ஒரு தேக்கரண்டி ஓம விதைகளை தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.



குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

1. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் இனிப்புகள்

இந்த காலகட்டத்தில் சிறுவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு சர்க்கரை நிறைந்த உணவுகளை கொடுக்காமல் இருப்பது நல்லது. எனவே, சளி அல்லது இருமலின் போது உங்கள் குழந்தைக்கு சர்க்கரை மற்றும் இனிப்பு நிறைந்த உணவுகளை ஊட்டாதீர்கள்.

2. உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்

உங்கள் பிள்ளைக்கு சளி மற்றும் இருமல் இருக்கும்போது உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்களை சாப்பிடுவது சற்று கடினம். நட்ஸ்கள் மற்றும் உலர் பழங்கள் தொண்டையில் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. எனவே, குழந்தைகளுக்கு நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு உள்ளது. உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்களை தூள் வடிவில் அவர்கள் உணவில் சேர்க்கலாம்.

குழந்தை வளர்ப்பில் இந்த 4 விஷயம் ரொம்ப முக்கியம்.. தெரிந்துக்கொள்ளுங்கள்..

3. எண்ணெய் மற்றும் காரமான உணவு

காரமான உணவுகள் தொண்டை எரிச்சலுக்கு வழிவகுக்கும். இது குழந்தையின் குளிர்ச்சியை மோசமாக்கும். எனவே, குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு காரமான மற்றும் எண்ணெய் உணவுகளை கொடுக்காமல் இருப்பது நல்லது.
Published by:Sivaranjani E
First published:

Tags: Cold, Cough, Kids Care, Winter

அடுத்த செய்தி