ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தண்ணீரை எப்படி குடித்தால் நல்லது தெரியுமா..? டிப்ஸ் கொடுத்த பிரபல ஃபிட்னஸ் ட்ரெயினர் !

தண்ணீரை எப்படி குடித்தால் நல்லது தெரியுமா..? டிப்ஸ் கொடுத்த பிரபல ஃபிட்னஸ் ட்ரெயினர் !

தண்ணீர்

தண்ணீர்

செம்பு பாத்திரங்களில் தண்ணீரை சேமித்து வைத்து, குடிப்பதற்கும் செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவது மிகவும் நல்ல பழக்கம். ஏனெனில் செம்பின் குளிர்ச்சியான பண்புகள் உடலை டிடாக்ஸ் செய்ய, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் ரத்த சோகை பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நோய்களிலிருந்து தற்காத்து கொள்ள மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய மற்றும் அத்தியாவசிய பழக்கங்களில் ஒன்று தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் அவசியம்.

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீர்ப்பையில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது. தவிர நீரழிவு அபாயத்தை தடுக்கிறது, உடல் சூட்டை தணித்து உடலின் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துகிறது, மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக் கற்கள் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது. சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம் செல்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை எடுத்து செல்லவும் உதவுகிறது. எனவே உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

இந்நிலையில் பிரபல யோகா பயிற்சியாளரான அன்ஷுகா பர்வானி தனது இன்ஸ்டாவில் தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழி பற்றிய தகவல்களை ஷேர் செய்துள்ளார். இவர் பிரபல நடிகைகளான அலியா பட் மற்றும் கரீனா கபூரின் பயிற்சியாளர் ஆவார். சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் “தண்ணீர் குடிக்க சரியான வழி இருக்கிறதா. ஆம், இருக்கிறது! உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது மிக முக்கியம். ஆனால் இதை செய்ய சரியான வழி இருக்கிறது" என கூறி வீடியோ ஒன்றையும் சில முக்கிய டிப்ஸ்களையும் ஷேர் செய்துள்ளார்.

பெரும்பாலும் நாம் தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டு தான் குடிப்போம். ஆனால் இப்படி தண்ணீர் குடிப்பது சரியான வழியல்ல என்று குறிப்பிட்டுள்ளார். நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும் என்று அன்ஷுகா பர்வானி குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்பழக்கம் ஆர்த்ரைட்டிஸை தூண்டுவதோடு நுரையீரலுக்கும் தீங்கு விளைவிக்க கூடும்.ஏனெனில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் உடலினுள் தண்ணீர் வேகமாக பயணிக்கிறது.




 




View this post on Instagram





 

A post shared by ANSHUKA YOGA (@anshukayoga)



அன்ஷுகா ஷேர் செய்துள்ள வீடியோவில் உட்கார்ந்து சரியான முறையில் எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று விளக்குவதை காண முடிகிறது. மேலும் ஒரு செம்பு ஜக்கில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பதையும், அதிலிருந்து தண்ணீரை மற்றொரு செம்பு கப்பில் மாற்றி தண்ணீர் குடிக்க முனைவதையும் காணலாம். “தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழி, உங்கள் முதுகை நேராக வைத்து உட்கார்ந்து கொள்வதே" என்று குறிப்பிட்ட போஸ்ட்டில் கூறியுள்ளார். இப்படி தண்ணீர் குடிப்பதால் மூளையின் செயல்பாடு மேம்படும் மற்றும் சிறந்த செரிமானத்திற்கும் உதவுகிறது. உப்பசம் பிரச்சனையை சமாளிக்கவும் உதவுகிறது என கூறியுள்ளார்.

Also Read : கேன் தண்ணீர் குடிப்பதால் இந்த சத்துக்கள் கிடைக்காமலே போய்டுமா..? இதற்கு மாற்று வழி என்ன..?

மேலும் செம்பு பாத்திரங்களில் தண்ணீரை சேமித்து வைத்து, குடிப்பதற்கும் செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவது மிகவும் நல்ல பழக்கம். ஏனெனில் செம்பின் குளிர்ச்சியான பண்புகள் உடலை டிடாக்ஸ் செய்ய, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் ரத்த சோகை பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது. மேலும் ஒரே நேரத்தில் தண்ணீரை மடக்மடக்கென்று குடிப்பதை விட சிறிது சிறிதாக பருகுவது சரியான வழி என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Copper benefits, Health tips, Water