வீட்டிலிருந்து வேலை பார்க்கிறீர்களா ? உடல் வலியை தவிர்க்க இந்த பொசிஷனை ட்ரை பண்ணுங்க..

காட்சி படம்

வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் எந்த மாதிரியான தோரணையில் அமர வேண்டும்? உங்களுக்கான டிப்ஸ் இதோ..

  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றுநோய் நம் அனைவரையும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் நடைமுறைக்கு தள்ளியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக பல ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை பார்த்து வருகின்றனர். நீண்டகால ஊரடங்கு மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழ்நிலை, மக்கள் பலரை படுகைகளிலேயே அடைத்து வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர்களுக்கு முன்னால் அமர்ந்தபடி ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை மக்கள் செலவழித்து வருகின்றனர்.

இதன் காரணமாக முதுகு வலி, கழுத்து வலி மற்றும் மோசமான தோரணைக்கு வழிவகுக்கிறது. இதுகுறித்து, உடல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹேமக்ஷி பாசு என்பவர், லேப்டாப் மற்றும் கம்பியூட்டர் முன்னாள் உட்கார்ந்திருக்கும் போது ஒருவரின் மோசமான தோரணை அவர்களில் கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகெலும்பு காயத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார். அப்படியானால் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் எந்த மாதிரியான தோரணையில் அமர வேண்டும்?.

இதற்கு உடற்பயிற்சி பயிற்சியாளர் யாஸ்மின் கராச்சிவாலா, டாக்டர் ஹேமக்ஷி பாசு உடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், டாக்டர் பாசு மடிக்கணினிகள் அல்லது கணினிகளைப் பயன்படுத்தும் போது நமது தோரணையில் எவ்வாறு திருத்தங்களைச் செய்யலாம் என்பதை விளக்குவதைக் காணலாம்.நீங்கள் அமர்ந்த நிலையில் வேலை பார்க்கும் போது செய்ய வேண்டியவை:

* ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் போது, ​​நாற்காலியின் நுனியில் அமராமல் நாற்காலி இருக்கை முழுவதும் அமர்ந்து உங்கள் முதுகை நாற்காலியில் நேராக சாய்த்தபடி அமர வேண்டும்.

* பிறகு உங்கள் நாற்காலியை முன்னால் இழுக்கவும். அதாவது லேப்டாப் வைத்திருக்கும் டேபிளுக்கு மிக அருகில் நகர்த்தி அமர வேண்டும்.

Also read : மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் 5 முக்கிய யோகாசனங்கள்..

* உங்கள் முழங்கைகளை நிதானப்படுத்தி, உங்கள் முன்னால் உள்ள மேஜையில் அவற்றை வைக்கவும்.

* உங்கள் தோள்களை ரிலாக்சாக்கி, பிறகு உங்கள் வேலையை தொடங்கலாம்.

நீங்கள் படுத்திருக்கும் போது உங்கள் தோரணை எப்படி இருக்க வேண்டும்:

படுத்திருக்கும் நிலையில் லேப்டாப்பை பயன்படுத்த வேண்டாம் என டாக்டர் பாசு தெரிவித்துள்ளார். ஆனால் தேவைப்பட்டால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

* படுக்கையில் உங்கள் வயிற்று பகுதி பெட்டில் இருக்கும்படி குப்புற படுத்துக் கொள்ளுங்கள்.

* உங்கள் முன்னங்கைகளின் சப்போட் மூலம் உங்க மார்பு பகுதி மேல் உயர்த்துங்கள்.

* இந்த துறையில் உங்கள் இடுப்பு பகுதி அதாவது உங்கள் முதுகெலும்பில் வலியை உணரலாம். எனவே இதனை தடுக்க ஒரு சிறிய குஷன் கொண்ட தலையணையை அடிவயிற்றுக்கு கீழே வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த தோரணைகள், நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் முதுகுவலி, கழுத்து வலி, இடுப்பு வலியை குறைக்க உதவும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: