தொற்றுநோய் என்கிற கண்ணுக்குத் தெரியாத எதிரியால் நாம் பாதிக்கப்படுவோமோ என்கிற பயத்திற்குள்ளேயே தான் நாம் நமது வாழ்க்கையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்கிற காலகட்டத்தில், நம் உடலை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் ஒரே விஷயம் - நல்ல உணவு. இந்த இடத்தில் மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹிப்போகிரட்டீஸின் சில வார்த்தைகள் எதிரொலிக்கின்றன: "உணவு உங்கள் மருந்தாகவும், மருந்து உங்கள் உணவாகவும் இருக்கட்டும்".
கோவிட் தொற்றுக்கு பின்னான உணவுகளில் ப்ரோடீன் சத்துக்கள் மிகவும் முக்கியமானது!
பொதுவாகவே, நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட நமது உடல்களுக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம். குறிப்பாக, கொரோனா வைரஸின் பிறழ்வு காரணமாக ஒவ்வொரு சில மாதங்களுக்கும் ஒருமுறை புதிய வகை கோவிட்-19 விளைவாக புதிய அலை வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், போதுமான ஊட்டச்சத்துகள் நிறைந்த நல்ல உணவு ஒரு நோய்க்கு எதிராக உங்களை எதிர்த்துப் போராட உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, நல்ல உணவுகள் ரெசிலியன்ஸை அதிகரிக்கும், அதாவது பாதிப்புக்குப் பிறகு, அதன் அளவு மற்றும் வடிவத்தை மீட்டெடுக்கும் உடலின் திறன் அதிகரிக்கும். அதேசமயம் முறையற்ற மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுத்து உடலை வைரஸ் தொற்றுக்கு ஆளாக்கும்.
ஒரு கோவிட் நோயாளியின் ஊட்டச்சத்துத் தேவையைப் பொறுத்தவரை, அவர் தனது டயட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டியது - புரதம் மீது. உணவில் சரியான அளவு புரதத்தைச் சேர்ப்பதன் வழியாக ஒரு கோவிட்-19 நோயாளியின் உடலில் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் நிரப்பலாம்.
மனித உடலில் புரதத்தின் பங்கு என்ன?
புரத சத்து, மனித உடலுக்கு இன்றியமையாத மேக்ரோநியூட்ரியண்ட் ஆகும். ப்ரோட்டீன் என்கிற வார்த்தையின் தோற்றம், "முதல்" என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையான ப்ரோட்டோஸிலிருந்து உருவானது. இது மனித உடலுக்கான ஊட்டச்சத்தில் புரதத்தின் உயர்மட்ட முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக ஹார்வர்ட் ஹெல்த் கூறுகிறது. ஏனெனில் ஒரு உடலுக்கு உயிரின் கட்டுமானத் தொகுதிகள் மற்றும் செல்களை சரிசெய்யவும் புதியவற்றை உருவாக்கவும் ப்ரோட்டீன் உதவுகின்றன.
கோவிட்-19 நோயாளிகளுக்கு புரதச்சத்து ஏன் மிகவும் முக்கியமானது?
செயல்பாட்டில் உள்ள இம்யூனோகுளோபுலின்கள் மற்றும் குடலுக்கு தொடர்புடைய லிம்பாய்டு திசுவின் (GALT) அளவுகள் மீதான எதிர்மறையான விளைவுகளால், ஒரு உடலுக்கான ப்ரோட்டீன் குறைபாடானது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டின் குறைபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ச்சி முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதாவது புரதத்தை குறைவாக உட்கொள்வது உடலை கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு ஆளாக்கலாம். மேலும் குறிப்பிட்ட அளவு உணவை உட்கொள்வதைக் கட்டுப்படுத்தும் பிற நாட்பட்ட நோய்களுக்கான மருத்துவ நிலைமைகளும் கூட ஒருவரை கோவிட் தொற்றுக்கு ஆளாக்கலாம். அதை தவிர்க்க, கோவிட்-19 காலத்தில் ஒருவர் தன் உடலுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும்.
இது நோய் எதிர்ப்பு சக்தியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்பதையும், உடலுக்கு தேவையான புரதம் இல்லையென்றால், கோவிட்-19 மட்டுமல்ல மற்ற பல வைரஸ் தொற்றுகளுக்கும் ஒருவர் ஆளாகலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தற்கால சூழ்நிலைகளில், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டாலும் பாதிக்கப்படும் ஃப்ளூரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, வைரஸ் தாக்குதலிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் வழியாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.
மனித உடலுக்கு எவ்வளவு புரதம் தேவைப்படுகிறது?
பொதுவாக ஒரு கிலோ உடல் எடைக்கு 0.8 கிராம் புரதம் தேவைப்படுகிறது. இருப்பினும், கோவிட்-19 நோயாளிகள் புரதச்சத்துக்களை அதிகமாக உட்கொள்ளலாம். இந்த இடத்தில் வயது, மருத்துவ நிலைமைகள், பாலினம் மற்றும் பிற போன்ற பல்வேறு காரணிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இது சார்பாக ஒருவர் தனது சொந்த மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகி ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.
எந்தெந்த உணவில் புரதச்சத்துக்கள் அதிகம் ?
கோழி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் பால் பொருட்கள் மற்றும் பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற பல்வேறு உணவுகளில் புரதம் அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு மனித உடலில் எந்த அளவு மேக்ரோநியூட்ரியண்ட் தேவை என்பதைப் போலவே, பல்வேறு உணவுப் பொருட்களிலும் ஒட்டுமொத்த புரதக் கலவை மாறுபடுகிறது. எனவே, நிபுணர்களின் பரிந்துரைகளை பெறுவது மற்றும் உங்கள் உடலுக்குத் தேவையான புரதத்தின் சரியான அளவை அறிந்து கொள்வது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Covid-19, Protein Diet, Protein Rich Food